MENU

Show more

வாக்காளர் சிறப்பு முகாம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

வாக்காளர் பட்டியலில் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை பெயர் சேர்க்கலாம்: நாளை மறுநாள் சிறப்பு முகாம்
🌷🌷🌷🌷🌷🌷🌷
தமிழ்நாட்டில் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதையட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் போன்ற திருத்தம் மேற்கொள்வதற்கும் மனு கொடுக்க 15.9.2015 முதல் 14.10.2015 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்த மாதம் 20-ந் தேதியும் (ஞாயிற்றுகிழமை), அடுத்த மாதம் 4-ந் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 1.1.2016 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்களர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்க வேண்டும்.
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 11-ந் தேதி வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மக்களை தொடர்பு கொண்டு பட்டியலை சரிபார்த்து வருகின்றனர்.

இதையொட்டி தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

2016ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும்-வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும்-புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணையின்படி, சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, நகரிய, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சவாடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பு அக்கறையோடு கழக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தப் பணி குறித்து கழக நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமைக் கழகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🌷🌷🌹🌹🌹

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026