Posts

Showing posts from February, 2015

பயம் வேண்டாம்- பன்றி காய்ச்சல்

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளிய வழிகாட்டுதல் உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவுவதில்லை. 'எச்1என்1 - இன்ஃப்ளுயன்சா வைரஸ்' கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் 5 நாட்களுக்குள் காய்ச்சல் முழுவதுமாக குணமாகிவிடும். பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைப்படி டாமி புளூ மாத்திரையை உட்கொள்ள வேண்டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் வீரியம் குறைந்து சாத

TANCET 2015-ANNA UNIVERSITY

டான்செட் தேர்வு: ஏப்ரல் 1 முதல் பதிவு ஆரம்பம் முதுநிலைப் பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மே 16, 17 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் பதிவு செய்ய முடியும். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. 2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மே 16-ஆம் தேதியும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு மே 17- ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம். பதிவு செய்ய ஏப்ரல் 20 ஆம் தேதி கடைசி நாள். சென்னை மையத்தில் நேரடியாகப் பதிவு செய்ய ஏப்ரல் 22 கடைசித் தேதியாகும். இதுகுறித்த விவரங்களை www.annauniv.edu என்ற

INDIA BUDGET 2015

HIGHLIGHTS OF BUDGET – 2015 Taxation 1. To provide social safety net, pension, additional deduction of Rs.50,000 to be provided for new pension scheme 2. To raise limit of deduction of health insurance premium to Rs.25,000 3. 100% tax deduction for Swachh Bharat, Clean Ganga schemes 4. To increase clean energy cess to Rs.200 per metric tonne of coal 5. To increase service tax plus education cess to 14% 6. To increase threshold for transfer pricing to Rs.20 crore 7. To increase excise duty to 12.5%; excise duty cut on leather footwear 8. To defer GAAR by two years 9. To reduce customs duty on 22 items 10. Rich and wealthy must pay more tax 11. To abolish wealth tax; Two percent additional surcharge on super-rich tax 12. To rationalize capital tax regime 13. Quoting of PAN number mandatory for any transaction over Rs.1 lakh 14. To allow tax pass-through for Alternative investment funds 15. Binami transaction prohibition bill to introduced in current sess

முதல் பதிப்பு

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்! தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.  * திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.  * இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாத