Posts

Showing posts from July, 2018

AUGUST DIARY 2018

Image
*ஆகஸ்ட் (2018) மாத பள்ளி  நாள்காட்டி* *>R.L* ஆகஸ்ட் 3-வெள்ளி RL ஆடி பெருக்கு ஆகஸ்ட் 21-செவ் RL அராபத் ஆகஸ்ட்  24-வெள்ளி RL வரலெட்சுமி நோன்பு  ஆகஸ்ட் 25-சனி RL ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 27- திங் RL காயத்ரி ஜெபம் >4.8.18- BEO அலுவலக குறை தீர் நாள் >4.8.18-சனி CRC(TENTATIVE)      >ஆகஸ்ட் 15-புதன் சுதந்திர தினம்  >ஆகஸ்ட் 22-புதன் பக்ரீத் அரசு விடுமுறை >சனிக்கிழமை வேலைநாள் ஏதும் இல்லை  >இதுவரை வேலை நாள்கள் 44 இம்மாத வேலை நாட்கள்21 மொத்த பள்ளி வேலை நாட்கள் 65

கலைஞரின் சிகிச்சை படம் வெளியீடு

Image
கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 வது புகைப்படம் வெளியீடு

கணிணி அறிவோம் - பகுதி 12 - விண்டோஸ் OS HISTORY

Image
Windows OS HISTORY OS என்பது OPERATING SYSTEM அதாவது கணிணி எதுவாக இருந்தாலும் அதில் உள்ள இயங்குதளம் தான் இந்த OS ... பில்கேட்ஸ் மற்றும் ஆலன் என்ற இரண்டு நண்பர்களின் தீராத ஆவலே இந்த OS வளர்ச்சி , இவர்கள் 1970 களில் எழுதிய BASIC புரோகிராமே அடித்தளம்... முதல் புரோகிராம் என்ன தெரியுமா 2+2= 4 இது தான் , இவ்வளவு பெரிய அசாத்திய சாதனைகளுக்கான முதல் கணிணி நிரல்... இரண்டையும் இரண்டையும் கூட்டி என்ன வரும் வினா எழுப்பியதற்கு கணிணி Basic நிரல்படி அளித்த முதல் பதில் 4 என்பது , இதனை உருவாக்க பல மாதங்கள் இரவு பகல் உழைத்தார்கள் பில்கேட்சும் அவரது நண்பர் ஆலனும்... இதிலிருந்து படிபடியான வளர்ச்சியே இன்றைய OS நன்றி : https://youtu.be/C2Aj4m7ynvk தொடரும்... 

சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு

அரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில், தினமும் ஏதாவது ஒரு கலவை சாதம், முட்டை, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் தரம் குறித்து, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அரசு முடிவு : இந்நிலையில், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில், கண்காணிப்பு குழுக்களை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட குழுவுக்கு, கலெக்டர் தலைவராக இருப்பார்.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மருத்துவத் துறை இணை இயக்குனர், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர், சமூகநல அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட, 12 பேர், உறுப்பினர் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஒன்றிய அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், குழந்தை நல வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார ந

ஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு

ஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்கு ஒருநபர் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளையும், ஊழியர்களையும் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை வழங்க உள்ளது. இந்தக் குழுவின் சார்பில் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி விலிங்டன் கல்லுôரி வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்பட கருத்துத் தெரிவிக்க விண்ணப்பித்த பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டமைப்பின் சார்பில் இருவர் கலந்துகொண்டு கர

GROUP IV RESULTS 2018

TNPSC GROUP IV RESULTS Click here

TNPTF மாநில தலைவர் பேட்டி

திருவண்ணாமலையில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் TNPTF மாநில தலைவர் செய்தியாளர் சந்திப்பு காணொளி

கலைஞர் உடல்நிலை சீராக உள்ளது

Image
கலைஞர் உடல்நிலை சீராக உள்ளது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது , மருத்துவ சிகிச்சையில் உடல் நிலை சீராகியுள்ளது என காவேரி மருத்துவமனை நேற்று இரவு 9.50 க்கு அறிக்கை வெளியிட்டது.. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது , முதல்வர் இன்று சேலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று இரவே சென்னை திரும்பினார்.. திமுக தொண்டர்கள் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய தொடர்ந்து காவேரி மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளனர் , அவர்கள் கலைஞர் நலம் பெற வேண்டும் என தொடர்ந்து கோஷங்களை எழுப்பியும் , பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்... தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 6 ஆயிரம் ஆயுதப்படை போலீசார் உட்பட சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள

செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை

Image

காவேரி மருத்துவமனை அறிக்கை

Image
கலைஞர் உடல்நிலை குறித்தான தற்போதைய மருத்துவ அறிக்கை... கலைஞர் உடல்நலம் தேறி வருகிறார் என மருத்துவ அறிக்கை ...

கலைஞர் சிகிச்சை பெறும் புகைப்படம்

Image
Breaking news கலைஞர் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியீடு... நன்றி : செய்திகதிர் 

கலைஞர் - பொன்விழா ஆண்டு

Image
டாக்டர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள்- எனும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ... இந்த பொன்விழா கொண்டாட்டத்திற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி யூ டியுபில் வெளியிட்டுள்ள காணொளி... நன்றி : Puthiya Thalaimurai / https://youtu.be/1grQPQJTClM

Southern Railway Chennai Recruitment 2018 328 Safaiwala Posts

Image
Southern Railway Chennai Recruitment 2018 328 Safaiwala Posts at www.rrcmas.in: Organization Name:   Railway Recruitment Cell, Chennai ( Southern Railway Chennai ) Employment Category:  Central Govt Jobs Total No. of Vacancies:  328 Job Location:  Tamilnadu Latest Southern Railway Chennai Vacancy Details: Name of the Post & No of Vacancies: Southern Railway Chennai Invites Applications for the Following Posts 1. Safaiwala - 257 Posts 2. Nursing Superintendent - 35 Posts 3. Health & Malaria Inspector - 24 Posts 4. Haemo Dialysis Technician - 01 Post 5. Extension Educator - 01 Post 6. Radiographer - 01 Post 7. Pharmacist - 01 Post 8. ECG Technician - 01 Post 9. Laboratory Assistant. Gr. II - 07 Posts Eligibility Criteria for Southern Railway Chennai Vacancy 2018: Educational Qualification: 1. Safaiwala (C1) -  Pass in 10th Standard or equivalent recognised by State/Central Board of Secon

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு

Image
ஜிஎஸ்டி வரிக் குறைப்பு: இன்று முதல் இந்தப் பொருட்களின் விலை எல்லாம் குறையும்.!             Image courtesy : the hindhu  சானிட்டரி நாப்கின், காலணிகள், குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட 88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகித குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சனிக்கிழமை நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான 28 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28% வட்டி விகிதத்தின் கீழ் இருந்த பல பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. மேலும் இந்த வரி விகித குறைப்பு ஜூலை 27 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்த நிலையில் எந்தப் பொருட்களின் விலை எல்லாம் இன்று முதல் குறைகிறது என்ற முழுப் பட்டியலினை இங்குப் பார்க்கலாம். 28%-ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருட்கள் குளிர்சாதனப் பெட்டிகள், வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின், 27 இஞ்ச் வரையிலான டிவி, வேக்கம் கிளீனர், பெயிண்ட், முடி வெட்டும் சேவர்கள், ஹேர் கர்லர், முடி உலர்த்திகள், செண்ட், ஸ்ப்ரே, லித்தியம் பேட்டிரிகள். 18%-ல் இருந்து 12% ஆகக் குறைக்கப்பட்ட பொருட்கள் ஹேண்ட் பேக், பர்ஸ், நகை பெட்டி, மர பிரேம்கள், கண்ணடிகள், கெரோசின் அடுப்பு, அலங்காரத

கலைஞர் நலமாக உள்ளார்...

Image
கலைஞர் நலமாக உள்ளார் செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாழ்க டாக்டர் கலைஞர் ! வளர்க தமிழ் !

இன்று சந்திர கிரகணம்

#சந்திர_கிரகணம் ! 🌘இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் விளம்பி வருடம் ஆடி மாதம் 11ம்நாள்  ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது. 🌘 அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ரெட் மூன் என அழைக்கப்படுகிறது. 🌘 கிரகணம் ஏற்படும் நாளில் பௌர்ணமி வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 🏵💮சந்திர கிரகணம் 💮🏵 🌘 சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 🌘 சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். 🙂மிகப்பெரிய சந்திர கிரகணம் 🙂 🌘 இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 🌘 சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி 🌘 சந்திர கிரகணம் மத்திம காலம் இரவு 01.52 மணி 🌘 சந்திர கிரகணம் முடிவு காலம் இர

அப்துல் கலாம் நினைவு தினம்

Image
*ஏ. பி. ஜே. அப்துல் கலாம்*  *அவர்களின் நினைவு தினம்*                      இன்று *இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர்,* *மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை* *நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர்,* *வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை* *வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.*              *பிறப்பு:* அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 *இடம்:* இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  *பிறப்பு:* *1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும்,* *ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம்* *மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.* *இளமைப் பருவம்:* *அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார்.* *ஆனால்

List of merit scholarship scheme 2018

Image
List of merit scholarship scheme 2018 Click here download PDF

கணிணி அறிவோம் - பகுதி 12 - ஜி மெயில்

Image
கணிணி அறிவோம் - பகுதி 12 - ஜி மெயில் பயன்பாடு How to attach documents in gmail நன்றி : a2ztube / YouTube channel

ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?

⚖ *_சட்டம் அறிந்துகொள்வோம்!_* 📃 *ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?* ▪ *பயன்தரும் தகவல்* எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். ▪ *இன்ஷூரன்ஸ் பாலிசி!* *யாரை அணுகுவது..?* பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்

கலைஞர்கருணாநிதியின் உடல்நிலை அறிக்கை

Image
கலைஞர்கருணாநிதியின் உடல்நிலை அறிக்கை தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரை வீட்டில் இருந்த படி கவனித்து வரும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: சிறுநீர் பாதையில் தொற்று கருணாநிதிக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக அனைத்து வசதிகளும் வீட்டில் செய்யப்பட்டுள்ளது. வயதின் காரணமாக கருணாநிதி உடல்நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காய்ச்சல் உள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிக்கின்றனர். உடல்நலம் காரணமாக அவரை பார்க்க யாரும் வீட்டிற்கு வரவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி : தினமலர் 

குகையில் இருந்து மீண்ட சிறுவர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு…

Image
குகையில் இருந்து மீண்ட சிறுவர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு… சமீபத்தில் தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் அவர்களுடைய பயிற்சியாளரும் தாய்லாந்து மீட்புப்படையினர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஒன்பது நாட்களுக்கு பின்னர் சிறுவர்கள் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட செயல் ஒரு உலக அதிசயமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் தகுந்த மருத்துவ சிகிச்சைக்குக் பின்னர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கிட்டத்தட்ட மரணத்தின் எல்லை வரை சென்று மீண்ட இந்த சிறுவர்கள் தற்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். தங்களுக்கு மீண்டும் வாழ்வளித்த கடவுள் புத்தருக்கு நன்றி சொல்லும் வகையில் தற்காலிக துறவை மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று தாய்லாந்தில் உள்ள புத்தர் கோவிலில் கூடிய அந்த சிறுவர்கள் மொட்டையடித்து, துறவிகளுக்கான ஆடையை அணிந்து கொண்டனர். இருப்பினும் சில நாட்கள் மட்டுமே துறவறம் மேற்கொள்ளவிருப்பதாக அவர்கள் கூறியுள்ளது ஒரு ஆறுதலான செய்தி.

கணிணி அறிவோம் - ஜிமெயில்

Image
கணிணி அறிவோம் - பகுதி 11 கணிணி அறிவோம் எனும் இப்பகுதி இனி தினந்தோறும் வெளிவரும்... இன்று ஜி மெயில் ஐ.டி உருவாக்குவது எப்படி என்பதை காணலாம்...

5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்!

Image
5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்! Written By: Tamilarasu /Tamil good returns அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பங்குச்சந்தையின் மீது தான் கவனம் செலுத்துகின்றனர். பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்வதற்குப் பங்குகள் மற்றும் சந்தையை முழுவதுமாகப் புரிந்துகொண்டால் மட்டும் போதாது. அதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வர்த்தக ஏற்ற இறக்கங்களை மிக அதிகமாகச் சகித்துக்கொள்ளும் தன்மையும் வேண்டும்.மற்றொரு புறம், நீண்டகால அடிப்படையில் பணம் சம்பாதிக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்குப் பங்கு பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்கள் சிறந்த முதலீட்டு முறையாகத் திகழ்கிறது. பரஸ்பர நிதி திட்டங்கள் பங்கு முதலீட்டில் உள்ள ஆபத்துகளை எதிர்க்கும் சக்தி இல்லாதவையாக இருந்தாலும், நிதி மேலாளர்கள் தங்களின் பங்கு முதலீட்டின் தொழின்முறை அறிவை பயன்படுத்துவதால், நேரடி பங்கு முதலீட்டை காட்டிலும் பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகிறது பங்கு பரஸ்பர நிதி முதலீடுகளும் பங்குச்சந்தையைப் போலவே ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வருமா

2018-19 கல்வி ஆண்டு பள்ளி நாட்காட்டி

*2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை:* ஜூன்: விடுமுறை நாட்கள் 2,3,9,10,15,16,17,23,24,30 (10 நாட்கள்) வேலை நாட்கள் 20 சனி வேலை நாள் இல்லை CRC பயிற்சி இல்லை ************* ஜூலை:  விடுமுறை நாட்கள் 1,7,8,14,15,22,29 (7 நாட்கள்) சனி வேலை நாள் 21,28 CRC பயிற்சி இல்லை வேலை நாட்கள் 20+24=44 **************** ஆகஸ்ட் : விடுமுறை நாட்கள் 4,5,11,12,15,18,19,22,25,26 (10 நாட்கள்) சனி வேலை நாள் இல்லை CRC பயிற்சி ஆகஸ்ட் 4 வேலை நாட்கள் 44+21=65 நாட்கள் ************** செப்டம்பர்: விடுமுறை நாட்கள் 1,2,9,13,15,16,21 மற்றும் 23 முதல் 30 வரை (15 நாட்கள்) சனி வேலை நாள் செப்டம்பர் 8 CRC பயிற்சி நாள் செப்டம்பர் 15 முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 22 வரை முதல் பருவத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை  (10 நாட்கள்) வேலை நாட்கள் 65+15=80 ********** அக்டோபர்: விடுமுறை நாட்கள் 1,2,6,7,13,14,18,19,20,21,28 (11 நாட்கள்) சனி வேலை நாள் அக்டோபர் 27 CRC பயிற்சி அக்டோபர் 6 வேலை நாட்கள் 80+20=100 ************** நவ

இந்த ஆறு விசயங்கள் தெரிந்தாலே நீங்கள் கோடீஸ்வர்ர் ஆகலாம்...

Image
இந்த ஆறு விசயங்கள் தெரிந்தாலே நீங்கள் கோடீஸ்வர்ர் ஆகலாம்... யூ டியுப்பில் இந்த தலைப்பை பார்த்தவுடன் சிரிப்பு வரத்தான்  செய்தது , ஆனால் எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது , ஆழ்மன எண்ணங்களை இந்த பிரபஞ்சம் செயல்படுத்துகிறது.. கோடீஸ்வரர் ஆகினால் மகிழ்ச்சி தானே , எதுக்கும் நீங்களும் இந்த வீடியோ பார்த்துட்டு ட்ரை பண்ணிதான் பார்ப்போமே ...  நன்றி : https://youtu.be/XxVCzbCuM7U Sattaimuninathar /YouTube channel மறக்காம கமென்ட் பண்ணுங்க நண்பர்களே... நீண்ட நாட்களுக்கு பிறகு நம் வலைதள வாசகர்களுடன் பேசிய மகிழ்வில் - R.R 

பள்ளி ஆண்டு செயல் திட்டம் 2018-19 ( LIST OF HOLIDAYS)

Image
தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளுக்கான 2018-19 ஆண்டு செயல் திட்டம் Click here to download PDF

செல்வ மகள் சேமிப்பு திட்டம் -முழு விளக்கம் வீடியோ

Image
செல்வ மகள் சேமிப்பு திட்டம் - முழு விளக்கம் நன்றி : your mutual fund/ YouTube channel

பாலிடெக்னிக் அட்மிஷன் 2018

Image
அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி முதலாமாண்டு பட்டய சேர்க்கை 2018

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு

Image
5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்தி, அவர்கள் தேர்ச்சி பெற, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் அவர் கூறியதாவது: மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில், அவர்களுக்கு, இரண்டாவது முறையாக மறு தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்ட திருத்த மசோதா, விரைவில், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் சொத்துவரி 100 சதவீதம் வரை உயர்வு

தமிழ்நாடு முழுவதும் சொத்துவரி 100 சதவீதம் வரை உயர்வு- வீடுகளுக்கு 50 சதவீதம் அதிகரிப்பு தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டில் இருந்து சொத்துவரி உயர்த்தப்படாமல் இருக்கிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 17-ந்தேதி அன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான அறிக்கையை 2 வார காலத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர் ஹர்மிந்தர்சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப

பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்

பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'*_ *சென்னை:  பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, உடனடி துணை தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவு, http://www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில், இன்று (ஜூலை 24) வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு முடிவில் சந்தேகம் உள்ளவர்கள், நாளை முதல் இரண்டு நாட்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.