MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 10.7.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆனி 26 ♝ 10•07•2018*

🔥
🛡உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான   நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡SCERT- தொடக்க/நடு/உயர்/மேல்நிலை ஆசிரியர்களுக்கு
பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான கையேடு சார்ந்து காணொலி மூலம் பயிற்சி - SCERT இயக்குனர் செயல்முறைகள்
வெளியிட்டுள்ளார்.

🔥
🛡கனவு ஆசிரியர் - 2018 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களும், கல்வி அமைச்சரும்  நேற்று   தலைமைச் செயலகத்தில் "கனவு ஆசிரியர்" விருதுகளையும், ஊக்கத் தொகையாக தலா 10,000 ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.

🔥
🛡பயிற்சிக்கு பாடநூல் கொண்டுவராத ஆசிரியர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை!

🔥
🛡சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலய ஆடிதபசை முன்னிட்டு 27ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

🔥
🛡கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

🔥
🛡ஒற்றை சாளர முறையில் வீட்டுக்கடன்:- கூட்டுறவு வீட்டு வசதி  சங்கங்களில் பதிய திட்டம் கொண்டு வர முடிவு

🔥
🛡ஒரே சீருடையில் வரும் மாணவர்கள். தினமும் பயன்படுத்த முடியாத நிலை. நடப்பு கல்வியாண்டில் ஆரம்ப நிலை மாணவர்கள், உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கு சீருடை மாற்றப்பட்டது. ஒரேயொரு சீருடை மட்டுமே வழங்கப்பட்டதால் தினமும் பயன்படுத்த முடியாத நிலை. - நாளிதழ் செய்தி

🔥
🛡வரும் 27,31 ல் வானில் இரண்டு அற்புதங்கள்-பூமியை நெருங்கும் செவ்வாயை வெறும் கண்களால் பார்க்கலாம் - நாளிதழ் செய்தி

🔥
🛡வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: வழக்கம்போல பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு கடும் போட்டி

🔥
🛡சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.



செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026