Posts

Showing posts from June, 2017

TET RESULTS 2017 PAPER 1&2

TET EXAM 2017 RESULTS PUBLISHED SINGLE CLICK - DIRECT TO RESULT PAGE click here for result

சதுர்ங்க வேட்டை -2 ட்ரய்லர்...

*சதுரங்க வேட்டை - 2 TRAILER EXCLUSIVE* சதுரங்கவேட்டை படத்தின் 2-ம் பாகத்தில் அரவிந்த் ஸ்வாமி, திரிஷா நடிக்கிறார்கள். இதோ அப்படத்தின் ட்ரய்லர்... CLICK HERE

நீதிபதி சந்துரு - ஆசிரியர் சங்கம் மக்களாட்சியின் வடிவம்

ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா? மேனாள் நீதிபதி கே.சந்துரு     மீண்டும் ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றம் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது. இம்முறை பள்ளிக் கல்விக் குறைபாடுகளைக் களையும் பொருட்டு அரசிடம் 20 கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார். வழக்கு மறுபடியும் விசாரணைக்கு ஜுலை 14 அன்று வரவுள்ளது. அதற்குள் அரசு தனது பதில்களை அளிக்குமா அல்லது வழக்கு மறுபடியும் தள்ளிப்போடப்படுமா என்பது தெரியாது. மேலும், ஜுலை 3 முதல் நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய வழக்குகளின் பட்டியல் மாறிவிடும் என்பதனால் அவரே இவ்வழக்கைத் தொடர்ந்து நடத்துவாரா என்றும் தெரியவில்லை. பள்ளிக் கல்வித் துறையிலுள்ள சீர்கேடுகளைக் களைந்து மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் யாருக்கு இருப்பதற்கில்லை. ஆனால், கல்வி உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை அழுக்குகளையும் வெளுக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்தான் என்று கருதுவது சரியல்ல. அதேபோல், ஆசிரியர்களுடைய அமைப்புகளினால்தான் சீர்கேடுகளைக் களைய முடியவில்லை என்று எண்ணுவதும் சரியல்ல. கவலை தரும் கேள்வி ஆசிரியர் அ

ஜூலை 2017மாத பள்ளி நாட்காட்டி

All schools July 2017 Dairy:               >1-AEEO office Grivance day >1-Upper pri crc.                     >8 &15& 22 -Working Saturdays.                             >11-world population day >15- Kalvi valarchi naal                           >10 to14 - Brc primary level All Subject training -Batch 1.                     >24to28 -Brc primary level training -Batch 2 >R.L-Nil >July total holidays -7 > No of working days -24  total working days -42 For more http://tnsocialpedia.blogspot.com

எம்.ஜி.ஆர் - நூற்றாண்டு விழா ஜீலை 2017

Image
பொன்மனச் செம்மல்...  Article courtesy : wikipedia  இராமச்சந்திரன்  இலங்கையின் கண்டிக்கு  அருகேயுள்ள நாவலப்பிட்டியில்  மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். [4] [5] அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில்  பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர்  தமிழ்நாட்டின் கும்பகோணத்தில்  எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி  என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர்  இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இல்லறம் தொகு முதல் திருமணம் தொகு எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்

ரயில் கட்டண உயர்வு

ஆகஸ்ட் 1-இல் ரயில் கட்டண உயர்வு அறிவிப்பு: செப்டம்பர் முதல் அமலாகும் ரயில் கட்டண உயர்வு ஆகஸ்ட் முதல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி மூலம் ஏற்கெனவே கணிசமான அளவில் பயணிகள் கட்டணம் உயரும் நிலையில், மேலும் பயணிகள் கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல்: இந்திய மக்களில் அதிகமானோர் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சேவையாக ரயில்வே திகழ்ந்து வருகிறது. நாட்டில் உள்ள பிற போக்குவரத்து கட்டணங்களைக் காட்டிலும் ரயில்வே பயணக் கட்டணம் குறைவு என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்தச் சூழலில் பல்வேறு அமைச்சகங்களுடன் பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வேயின் நிதி நிலைமை, உள்கட்டுமானம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இப்போது இதற்கு பிரதமர் அலு

40ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?*

*40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?* சென்னை : பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா? எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள். தமிழக அரசு ஆதரித்தால்தான் தனியார் பள்ளிகளில் கூட பணிபுரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்கான புதிய வரைமுறையையும், அரசாணையையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும். தனியார் பள்ளிகளில் கூட கணினி ஆசிரியர்கள் உரிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நீடித்து வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) மூலம் இதுவரை 40 ஆயிரம் பேர் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசு நடத்தும எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் கூட பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாய்ப

வாட்ஸ் அப் பதிவு

தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் - அதற்கான நெத்தியடி பதில்கள்... 1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ? = ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்கள் MLA மற்றும் MP அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது எங்கள் கனவு! பல மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக தன்பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர் இந்நிலையில் இவ்வளவு அக்கரை கொண்ட தாங்கள் ஏன் தன் பிள்ளைகளை சேர்த்து அனைவருக்கும் முன்மாதிரியாக நடந்துக்கொள்ளகூடாது??? 2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ? = ஏன் தமிழ்நாட்டில் தமிழ்வழி பள்ளிகளை விட ஆங்கில வழி பள்ளிகள் மீது தங்களுக்கு இத்தனை அக்கரை ஆங்கிலம் அறிவல்ல மொழி தான் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். தமிழை நாம் காப்பாற்ற இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒரே வாய்ப்பு தமிழ் வழி பள்ளிகள் தான் - தாய் மொழியில் சிந்திப்பவனே புதியதை படைக்க இயலும் ஆங்கில அறிவு அடிமை பணிக்கே உதவும் ஐயா... 3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆ

புனித ரமலான் வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்... 👉🏼☪எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் அன்னவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!! 👉🏼☪எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம். 👉🏼☪ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இன