சே குவேரா - பிறந்த தினம் இன்று
புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம் ஜூன் 14 , 1928 . புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம் ஜூன் 14 , 1928 . சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா ( Ernesto Guevara de la Serna ) ( ஜூன் 14 , 1928 – அக்டோபர் 9 , 1967 ) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் ( கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். பெயர் சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்று கருதப்படுகிறது. அவ்விந்தியர், எனது என்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர். ஆனால், தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு வியப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர்....