Posts

Showing posts from October, 2017

நவம்பர்2017 மாத பள்ளி நாட்காட்டி*

*நவம்பர்2017 மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼வரையறுக்கப்பட்ட விடுப்பு - 2.11.17 👉🏼AEEO அலுவலக குறைதீர் நாள் - 4.11.17 👉🏼குழந்தைகள் தினம் - 14.11.17 👉🏼சனி வேலை நாள் &CRC - இல்லை 👉🏼Community mobilization competition. School level competition-3.11.17 Block level -10.11.17 District level-17.11.17 👉🏼இம்மாத வேலை நாட்கள் -22 மொத்த வேலை நாட்கள் - 121

TNPTF கல்விச் செய்திகள் 31.10.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி 14~31.10.17🗓* ☀ ஏழாவது ஊதியக்குழு - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத் தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும். பிறகு நவம்பர் மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் - கூடுதல் முதன்மைச்  செயலாளரின் கடிதம். (நாள்: 30.10.2017) ☀ தொடக்க கல்வித் துறையில் முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்று பின்னேற்பு கோரிய ஆசிரியர்கள் மீது விதிகள் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் கோரி இயக்குநருக்கு  அரசு இணைச் செயலர் கடிதம். ☀ கனமழை காரணமாக இன்று 9 மாவட்டங்களுக்கு (காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டிணம் ,தஞ்சை,விழுப்புரம், திருவாரூர் ,கடலூர் 9 ஒன்றியங்கள்,புதுக்கோட்டை) விடுமுறை அறிவிப்பு. ☀கனமழை முன்னிட்டு இன்று  காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  விடுமுறை. ☀ கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ம் தேதி உள்ளுர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி தமிழகத்தில் இணைந்ததை கொண்டாடும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சி

சட்டவிரோத " பண்ட்" வட்டி தொழில்..

பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு ஆசைப்பட்டு... 'பண்ட்' நடத்தி வட்டிக்கு வட்டி! கோவை : கந்து வட்டி கொடுமையின் விபரீதங்கள் வெளி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், 'பண்ட்' நடத்தும் நபர்கள் அந்த பணத்தை அதிக வட்டிக்கு விட்டு, மிரட்டி வசூலிப்பது தெரியவந்துள்ளது; வட்டிக்கு பணம் வாங்கும் தொழிலாளர்கள் குண்டர்களின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர். நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் கூலி தொழிலாளி குடும்பமே, 'கெரசின்' ஊற்றி தற்கொலை செய்து கொண்டது. மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை அடுத்து கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக கந்து வட்டி தொடர்பான புகார்களை அளிக்க போலீசார் பிரத்யேக 'வாட்ஸ் ஆப்' எண்களை அளித்துள்ளனர். கோவை உள்பட பல்வேறு இடங்களில் கந்து வட்டி மிரட்டல் தொடர்பான புகார்கள் போலீசாருக்கு குவிந்த வண்ணம் உள்ளது.இதற்கிடையே கந்து வட்டி போன்று பண்டிகை கால 'பண்ட்' நடத்தி, அந்த பணத்தை வட்டிக்கு விட்டு மிரட்டுவதும் நடந்து வரு

10மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (31.10.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு. (31.10.2017) 7.35 am ☔ தமிழகத்தில் தொடர் மழை காரணமாக கீழே உள்ள    மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. 🔹 சென்னை, 🔸 காஞ்சிபுரம், 🔹 திருவள்ளூர், 🔸 நாகப்பட்டினம், 🔹 விழுப்புரம், 🔸 புதுக்கோட்டை 🔹 தஞ்சாவூர் 🔸 திருவாரூர் 🔸 தென்காசி கல்வி மாவட்டம் மட்டும் (திருநெல்வேலி) 🔹கடலூர் மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும். & 🔸 புதுச்சேரி 🔹 காரைக்கால்

பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்' >> பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு, செப்டம்பரில் நடந்த துணை தேர்வு முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள்,💻 www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், நவ.,2 முதல், நவ., 4 வரை, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு

*💻✍TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு!!!📝* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில், 24 காலியிடங்களுக்கு, 2013ல் தேர்வு நடந்தது. இதில், 51 பேருக்கு, வரும், 30ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளதுதடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு, 30 காலியிடங் களுக்கு, 2016ல் தேர்வு நடந்தது. இதில் தேர்வு பெற்ற, 66 பேருக்கு, அக்., 25ல் நேர்காணல் தேர்வு நடக்கும்கைத்தறி துறை உதவி இயக்குனர் பணிக்கு, 14இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில், தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 12 பேருக்கு, வரும், 26ம் தேதி நேர்காணல் நடக்கும்சிறை அதிகாரி பணியில், ஆறு இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 18 பேருக்கு, 27ம் தேதி நேர்காணல் நடக்கும்புவியியலாளர், உதவி புவியியலாளர் பணியில், 53 இடங்களுக்கு, 2016 ஜூனில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 14

_அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது:

*_அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்✍_* >> அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது.  அடுத்த மாதம் தான் கிடைக்கும் என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார். மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.10.2017 முதல் (இந்த மாதம்) அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை கூடுதல் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு மூலம் சுமார் 12 லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த மாதம், அதாவது அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் இன்று வழக்கமாக வழங்கப்படும். அரசு அறிவித்தபடி, இன்று புதிய சம்பளம் கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரிய

11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை சென்னை, 'தமிழகம், புதுச்சேரியில் 11 கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்., 27 ல் துவங்கியது. பருவ மழை துவங்கிய நாளில் இருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை துவங்கியது. வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி இலங்கையிலிருந்து சென்னை வரை மையம் கொண்டுள்ளது. அதனால் நேற்றும், இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையிலும் மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை 8.30மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணைக்காரன்சத்திரம், கொள்ளிடம் செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சீர்காழி, நாகை, சென்னை விமான நிலையம், காரைக்கால் 5; திருத்தணி, செங்கல்பட்டு 4; செங்குன்றம், சிதம்பரம், கொளப்பாக்கம்,தாம்பரம், கடலுார், சாத்தான்குளம் 3; பொன்னேரி,காட்டுக்குப்பம், ராமேஸ்

அயல் நாட்டுப் பேய் - பகுதி 1

இனிய வணக்கம் நண்பர்களே.. புதிய எழுத்தாளர் அறிமுகம் எனும் பகுதியில் முதலாவதாக எனது இனிய நண்பர் மு.வெ.ரா ( புனைப்பெயர் ) எழுதும் தொடர்கதை திங்கள் தோறும் வெளியாக உள்ளது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே, தற்கால சமூக அவலங்களை சொல்லி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.. மு.வெ.ரா அவர்களுக்கு நன்றிகளுடன் , வாழ்த்துக்களும்... R.R             அயல்நாட்டுப் பேய் (பகுதி-1) அ ந்த வெளிச்சமான  பெளர்ணமி இரவில் சிர்த்தபடியே தன் முழு அழகையும் காட்டி மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது அன்றைய நிலவு .' அமைதியான அந்த இரவில் நன்கு கேட்கும் தொலைவில் இருந்த அந்த வானொலிப் பெட்டி தொடர் சேனல் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. சற்றே ஓரிடத்தில்  நிலை பெற்று வானிலை அறிக்கையை கூறியது. "தமிழகத்திற்கான நாளைய வானிலை அறிக்கை . அதிக பட்ச வெப்ப நிலையாக 32 °C வரை பதிவாக கூடும் . வானம் வறண்டும் மேகமூட்டத்துடனும் காணப்படும் " _ . அதை தொடர்ந்து தேன் கிண்ணம் நிகழ்ச்சி , முதல் பாடலாக ஓர் இனிமையான பாடல் ஒலிக்கத் தொடங்கியது. "மழை தருமோ என் மேகம்  மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் ....... மணற்து

நாளை (31.10.17) விடுமுறை...

*🅱REAKING NEWS LIVE* பதிவு செய்த நேரம் : 30.10.17-7.17pm *சென்னை, திருவள்ளூர்  காஞ்சிபுரம் ஆகிய* *3 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (31.10.17) விடுமுறை அறிவிப்பு.. தொடர் மழையால் 3 மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு...*

இன்னும் 24 மணி நேரத்தில் செம மழை...!

இன்னும் 24 மணி நேரத்தில் செம மழை...! யாரும் வெளியே வந்துடாதீங்க! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டிருப்பதால், தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என்றும் புதுச்சேரியிலும் கன மழை இருக்கும் என்றார். ஆனைக்காரன் சத்திரத்தில் அதிகளவில் இன்று காலை வரை 9 செ.மீ., மழையும், சீர்காழி, நாகப்பட்டினம் 6 செ.மீ., மழையும், சென்னை, காஞ்சிபுரம் 5 செ.மீ., மழையும், திருத்தணி, செங்கல்பட்டு 4 செ.மீ., மழையும், ரெட் ஹில்ஸ், சிதம்பரம், தாம்பரம், கடலூர் ஆகிய இடங்களில் 3 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்தார். இதற்கிடையே வரும் 3 ஆம் தேதி வரை தமிழகம், ஆந்திரா, க

ஆதார் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

ஆதார் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்? என கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக தனிநபராக வேண்டுமானால் மனுதாக்கல் செய்யலாம். தனிநபர் எவ்வாறு அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என்பதை எதிர்த்து வழக்கு தொடரலாமோ அதே போல் மம்தாவும் வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினர். இதனையடுத்து, மனுவில் திருத்தங்களை மேற்கொள்ள மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். அத்துடன் ஆதார் தொடர்பாக தனது பெயரில் தனி நபராக மனுதாக்கல் செய்யவும் மம்தா முடிவு செய்துள்ளார். நன்றி : தினமலர் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், 4 வார காலத்தில் மத்திய அரசு பதிலளிக்க கோரி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை..

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிக்கை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் , இலங்கைக்கு அருகே நேற்று நிலை கொண்ட வளிமண்டல சுழற்சி அதே இடத்தில் நிலவுகிறது. இதனால் வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டம் அனைத்து இடங்களிலும் உள் மாவட்டத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் . திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ,ராமநாதபுரம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கன மழை வரை பெய்யும். தென் மாவட்டம் கடலோர மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் ஆணைக்காரன் சத்திரம்பகுதியில் 9 செ.மீ., மழையும், சீர்காழியில் 6 செ.மீ., நாகை , காரைக்கால், சென்னை விமான நிலையம் பகுதியில் 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

IAS புத்தகங்கள்

Rathnam: 📚 *IAS, IPS முதன்மைத் தேர்வு தமிழ் புத்தகங்கள்* 📚 🐒 UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ்  பதவிக்கான சிவில் சர்விஸ் தேர்வினை   தமிழில் எழுதும்  தேர்வர்களுக்கு   *------------------------------------------* 📝 *UPSC MAINS முதன்மைத் தேர்வு மொத்தம் 9 தாள்கள்* 📝 🔴 *PAPER 1 (Indian Language Paper )* 🔴 ✔️ இதில் பொதுத்தமிழ்  300 மதிப்பெண்கள்  ( *90 மதிப்பெண்கள் எடுத்தால்  போதும் அதாவது  30%) 🔵 *PAPER 2  (English Language (Compulsory)* 🔵 ✔️ பொது ஆங்கிலம்  300 மதிப்பெண்கள்  ( *75  மதிப்பெண்கள் எடுத்தால்  போதும் அதாவது  25 %) 🔔இந்த  இரண்டு தாளில்  தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீதி  7 தாள்கள்  திருத்துவார்கள் 🔕இதில் பெரும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை  (தேர்ச்சி போதும் ) *------------------------------------------* ☑️ UPSC முதன்மைத் தேர்வில் நம் வாழ்க்கையை முடிவு செய்வது கீழே வரும்  7  தாள்கள் ✔️ஓவ்வொரு தாளுக்கும்  250 மதிப்பெண்கள் ( 7 X 250 = 1750 ) ✔️இதில் எடுக்கும் மதிப்பெண்களை மட்டுமே  கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்தக்கட்ட

வாட்ஸ்அப்பில் புதிய வசதி

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம் வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ரீகால் அல்லது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கக் கோரும் அம்சம் (Delete for Everyone) வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் WaBetaInfo வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் செலியில் தவறாக அனுப்பிய மெசேஜ்களை அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருவதால், இந்த அம்சம் சீராக வேலை செய்ய மெசேஜ் அனுப்புபவர் மற்றும் அதனை பெறுவோரும் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது. புதிய அம்சம்

போலியோ நோய்க்கான இலவச சிகிச்சை

*போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*            *திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD)* சார்பில் BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled], Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)  நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவரையும் நடக்க வைக்கும் அதிசயம். கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.             *எப்படி அணுக வேண்டும்*                  பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும்.  முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு நமது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு காத்திருப்ப

குளிர் காலத்தில் உடல் நலம் காப்பது எப்படி ?

குளிர் மிகும் காலம்: சூழலுடன் பொருந்துவதற்கான மரபுவழி உடல்நலக் குறிப்புகள்! -  ம.செந்தமிழன் நண்பர்களே, தமிழகத்தின் கார்காலம், இம்முறை குளிர்ச்சியை  மிகுதியாக்க் கொண்டுவர வாய்ப்புள்ளது என உணர்கிறேன். குறிப்பாக, சென்னையில் குளிர்ச்சியின் அளவு கூடுதலாகும் என்பது என் எண்ணம். பொதுவாகவே, பூமியின் பருவநிலை பெருமளவு மாற்றமடைந்துகொண்டுள்ளது. இதுவரை பொழிந்த மழைக்கு, ‘தென்மேற்குப் பருவமழை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்தகால வானிலைச் செய்திகளில், பலமுறை ‘வெப்பச் சலனம் காரணமாக மழை’ பொழிந்தது என்ற வாசகத்தைக் கவனித்திருக்கலாம். தென்மேற்குப் பருவமழை மட்டுமல்லாமல், முன்கணிக்க இயலாத பல்வேறு காரணங்களால் மழை பொழிந்துள்ளது. பெரும்பாலான பகுதிகள் இக்கோடையின் பிற்பகுதியிலிருந்து கனமழை பெற்றுள்ளன. இப்போது வடகிழக்குப் பருவமழைக்கான காலம் துவங்குகிறது.  நிலம் மிகுதியாகக் குளிர்ந்தால் உடலில் பல மாற்றங்கள் உருவாவது இயல்பு. அவற்றுள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். ‘தீவிர வாந்தி, பேதி, வலுவிழந்த நிலை, தலையில் நீர்  கோத்தல், மூச்சிரைப்பு, தாடை மற்றும் பற்களில் தீவிர வலி, பாதங்களில் எரிச்சல் மற்றும் வலி, பாதங்

பெண் ரோபோவுக்கு குடியுரிமை

Image
அதிசயம் ஆனால் உண்மை பெண் ரோபோவுக்கு குடியுரிமை

இன்றைய செய்தி துளிகள்..28.10.17

இன்றைய செய்தி துளிகள்.. >கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னார் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். >மகாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி : மொத்தமுள்ள 2,99,610 விவசாயிகளின் ரூ.899.11 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. >தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றி பெறச் செய்ததில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி. >வரும் தை மாதம் தமிழகத்தின் தற்போதைய ஆட்சி கலைந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தொடங்கும் - டிடிவி தினகரன். >தமிழகத்தில் நவ.6ம் தேதி ரேஷனில் சர்க்கரை விலையை ரூ.25ஆக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் : முக.ஸ்டாலின். >தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படுவதில்லை.18.64 லட்சம் ஏழை மக்களுக்கு ரூ.13.50 என்ற விலையிலேயே சர்க்கரை விற்பனை செய்யப்படும் : அமைச்சர் காமராஜ். >சகோதரர் திருமாவளவன் மற்றும்  பொன்னார் போன்றோர்  எனக்களித்த வரவேற்புரைக்கு நன்றி - நடிகர் கமல்ஹாசன். >மத்திய அரசிடம் தெரிவித்து ரேஷன் சர்க்கரை விலையை குறை

காவு வாங்கும் கந்துவட்டி!!!

காவு வாங்கும் கந்துவட்டி! என்.சுவாமிநாதன் நன்றி : தி இந்து வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத ரணம் அது. மிகக் கொடூரமான முகத்துடன் வெளியில் தெரியாமல் அரித்துக்கொண்டிருந்த கந்துவட்டியின் உக்கிரம், தாமிரபரணி பாயும் மண்ணில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நெல்லை மாவட்டம், தென்காசி அருகில் உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர். அந்தத் துயரத்திலிருந்து தனது குடும்பத்தை மீட்கப் பல முயற்சிகள் எடுத்தவர். ஆட்சியர் அலுவலகத்திலேயே பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் மனமுடைந்த அவர், தனது மனைவி சுப்புலட்சுமி, இரண்டு குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திலேயே தீக்குளித்துவிட்டார். அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டனர். மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார் இசக்கிமுத்து. இரண்டு குழந்தைகளும் கருகிச் சிதைந்த காட்சியைக் கண்ட தமிழகம் பேரதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது. மீள முடியாத வலை இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலெட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்பவரிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். இதற்கு வ

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது...

பருவமழை தாமதம்.. வட கிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில், தென் சீன கடலில் ஏற்பட்டுள்ள, 'ஸவ்லா' புயலால், இந்திய பகுதியில், மழையின் தீவிரம் தாமதமாகி உள்ளதை, 'நாசா' கண்டறிந்து உள்ளது. ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை, அக்., 20ல் துவங்க வேண்டும். 2016, அக்., 26ல், மழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட, ஒரு வாரம் தாமதமாக துவங்கி உள்ளது. ஆனாலும், மழை தீவிரம் அடையவில்லை. இதற்கு, தென் சீன கடலில் நிலவி வரும் கடல் சூழல் காரணம் என, கூறப்படுகிறது. இந்தியாவிற்கு கிழக்கே, தென் சீன கடலில், பிலிப்பைன்ஸ் அருகே, 'ஸவ்லா' என்ற புயல் சுழல்கிறது. நவ., 1ல், ஜப்பானை தாக்கும் என, கணிக்கப்பட்டுள்ள இந்தப் புயல், இந்திய பெருங்கடலின் ஈரப்பதத்தை ஈர்த்து, தீவிரம் அடைகிறது. அதனால், கிழக்கு திசையிலிருந்து, தமிழகத்திற்கு ஈரப்பதம் எடுத்து வரும் காற்றின் வேகம் குறைந்து, மழையின் தீவிரம் அதிகரிக்கவில்லை. இது குறித்து, அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம், ஸ்வ்லா புயல் சுழலும் பகுதியை புகைப்படம் எடுத்துள்ளது. அதில், புயலால் காற்றின் திசை மாறி, இந்திய மற்றும் சீன

TNPTF கல்விச் செய்திகள் 28.10.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி 11~28.10.17🗓* ☀ தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (TNOU) நேரடி முறையில் முழுநேர/பகுதிநேர M.Phil, Ph.D படிப்புகள் அறிமுகம். ☀ NTSE EXAM - HALL TICKET @ 30.10.17 - 4.11.17இல் நடைபெற உள்ள தேர்விற்கு நுழைவுச்சீட்டினை 30.10.17 முதல் www.dge.tn.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். ☀ மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு -  தனித் தேர்வர்களுக்கும் பொருந்தும். 15 வயது நிரம்பிய தனித்தேர்வர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் துறை  ஆணை வெளியிட்டுள்ளது. ☀ அரசுப்பள்ளி கழிவறையைத் திறந்து வைத்த பெண் சப்கலெக்டர் -  விழுப்புரம் மாவட்டம் வல்லம் வட்டாரம் பள்ளிகுளம் நடுநிலைப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட பெண்கள் கழிவறையை சப்கலெக்டர் திரு. எஸ்.சி. மெர்சி ரம்யா திறந்து வைத்து கௌரவப்படுத்தினார். ☀மத்திய அரசு குடியிருப்புகளை வாடகை விட்ட ஊழியர்கள்!! 35 பேர் மீது சி.பி.ஐ வழக்கு. ☀குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பணம் பிடித்தம் செய்ய வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.- சென்னை   உயர்நீதி மன்ற மதுரை கி

TNPTF கல்விச் செய்திகள் 27.10.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 புரட்டாசி 10~27.10.17🗓* ☀தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்துப்பள்ளிகளிலும்  தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு  31.10.2017 அன்று காலை 11 மணிக்கு  தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுக்க உத்தரவிட்டுள்ளார். ☀பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்குள்ள மனமொத்த மாறுதல் கேட்டல் பரிசீலிக்கப்பட்டு அரசு ஆணை வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு ☀புதியதாக பதவி உயர்வு பெற்ற தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் தலா ஒரு தலைமை ஆசிரியர் வீதம்  15 நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கொடைக்கானலில் தலைமைப்பண்பு பயிற்சி. ☀அனைத்து ஆரம்ப, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகளை CEO/DEEO தலைமையில் ஆய்வு (TEAM VISIT) செய்ய உத்தரவிடப்பட்டு  செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் திறனும், கணித திறனும் பார்வையிட உத்தரவு. ☀மாநில திட்ட இயக்குநர் SSA- UDISE- தகவல் மற்றும் புள்ளி விவரங்கள் பள்ளிகள் வாரியாக சேகரித்தல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ☀பத்தாம் வகுப்பு துணை தேர்வு - செப்-அக

Jobs at khadi craft 2017

காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தில் 342 பணியிடங்கள் மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தில் காலியாக உள்ள 342 உதவி இயக்குநர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நவம்பர் 19-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 342 பணியிடம்: இந்தியா முழுவதும் பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Group-B (Gazetted Post) 1. Assistant Director Grade-I (Khadi) - 03 2. Assistant Director Grade-I (Admn & HR) - 11 3. Assistant Director Grade-I (Training) - 02 4. Assistant Director Grade-I (Finance Budget Audit and Accounts) - 16 5. Assistant Director Grade-I (Village Industries) - 04 6. Senior Executive (Economic Research) - 18 Group-B (Non-Gazetted Post) 7. Senior Executive (Ec.R) - 37 8. Senior Executive (Legal) - 07 9. Junior Translator - 02 Group-C (Non-Gazetted Post: Technical & Non-Technical Posts) 10. Executive (

புதிய எழுத்தாளர்கள் அறிமுகம்

Image
நமது TNSOCIALPEDIA வில் வரும் திங்கள்(30.10.17)  முதல் இளம் எழுத்தாளர் மு.வெ.ரா எழுதும் "  அயல்நாட்டு பேய்"  விறுவிறுப்பான தொடர்கதை திங்கள் தோறும் வெளிவர உள்ளது.... தவறாமல் படியுங்கள்...

கந்த சஷ்டி வழிபாடு - இன்று

TNPTF கல்விச் செய்திகள் 25.10.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி 8~25.10.17🗓* ☀காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுகுன்றம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ☀7வது ஊதிய குழு பரிந்துரைகளில் பதவி உயர்வு  பெறுபவர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது - G.O Ms.No. 311 Dt: October 23, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 – Fixation of Pay on Promotion in the revised pay structure - Orders - Issued. ☀ஏழு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் ☀7வது ஊதிய குழுவின் ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியத்திற்கான அரசாணை வெளியீடு.G.O Ms.No. 304 Dt: October 13, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Enhancement of Special Pay – Orders – Issued. ☀காஞ

நெஞ்சு பொறுக்குதில்லையே..- தலையங்கம்

*தலையங்கம்...* *நெஞ்சு பொறுக்குதில்லையே..* 👉🏼நண்பர்களுக்கு மன வருத்தத்துடன் கூடிய வணக்கங்கள்.. தமிழகம் எத்தனையோ இன்னல்களை சந்தித்து இருந்தாலும் ஒரு சாமனியன் என்ற முறையில் இந்த கந்து வட்டி தற்கொலை என்பதை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியவில்லை... 👉🏼இரண்டு பச்சிளம் குழுந்தைகள் உயிரோடு கருகி உள்ளன.. அஃறிணை கூட அரவணைத்து வாழும் பூவுலகம் ஆறுஅறிவு மனிதனிடம் மனிதாபினம் அற்று விட்டதா என கேள்வி எழுகிறது... 👉🏼சாதாரண கூலி வேலை செய்யும் சாமானியர்கள் எளிதில் வங்கிகளை அணுகிவிட முடியுமா ? அப்படியே அணுகினாலும் , சாமனியர்களின் அடிப்படை தேவைகளான வீடு, கல்யாணம் , காதுகுத்து சாதாரண தேவைகளை கூட நிறைவு செய்து கொள்ள வங்கிகள் தற்போது கடன் வழங்குகிறதா என்றால் இல்லவே இல்லை.. வங்கிகள் கேட்கும் முதல் கேள்வியே பான் கார்டு , 6 மாத வங்கி பரிவர்த்தனை , எந்த கூலித் தொழிலாளி பான் கார்டு வைத்திருப்பார்.. 👉🏼அங்கே வழங்கப்படும் ஒரே வாய்ப்பு  கந்துவட்டி மட்டுமே 👉🏼அப்போது இது போன்ற சாமானியர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூட வாய்ப்பளிக்க மறுக்கிறதா இந்த சமூகம். 👉🏼தற்போது இறந்

கந்து வட்டி சட்டம் சொல்வது என்ன?

கந்து வட்டி சட்டம் சொல்வது என்ன? 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 18% மேல் வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை, ரூ. 30 ஆயிரம் அபராதம். தினசரி வட்டி, நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் வசூலுக்கு தடை. 2013 - கந்து வட்டி கொடுமைகள் பற்றி  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலுக்கு நீதிபதி கிருபாகரன் கடிதம். கந்து வட்டி கொடுமையை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி நியமனம். கந்து வட்டி கொடுமையை தடுப்பதற்கான பரிந்துரைகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல். கந்துவட்டி கொடுமைகளை அறிவதற்கு மாவட்டம், தாலுகா அளவில் கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும். காவல் துறையில் புகார் அளிக்கும் போது அதன் நகலை கண்காணிப்பு குழுவிடம் வழங்க வேண்டும். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் போலீசார் சமர்ப்பிக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். சட்டம் குறித்த தகவல்களை திரையரங்குகளில் ஒளிபரப்ப வேண்டும். கந்துவட்டி தொழிலை கு

TNPTF கல்விச் செய்திகள் 24.10.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி 7~24.10.17🗓* ☀3 ஆம் வகுப்பிலிருந்து அரசுப்பள்ளியில் "கணினி அறிவியல்" பாடம் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!! - முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில் ☀மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்--SMC Meeting ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும் மற்றும் SMC MEETING வழிகாட்டு நெறிமுறைகள் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ☀ஜாக்டோ ஜியோ வழக்கு மதுரையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்  விவரம் இன்று தெரியும் ☀ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு ☀ உதவி பெறும் பள்ளிகள்- தமிழ்நாடு பொது கட்டிட உரிம சட்டம் 1965-ன் படி கட்டிட உரிமம் பெறப்பட்ட விவரம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர்  செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். ☀2017-2018-தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலை பள்ளிகளுக்கு அரசிடமிருந்து EXPRESS PAY ORDER -விரைவில் பெற்று வ

இன்று ஐ.நா சபை தினம்..

அக்டோபர் 24 சரித்திரம் படைக்கும் சமாதான சின்னம் - இன்று ஐ.நா., சபை தினம்.. 🌹🌹🌹🌹🌹🌹 உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துதல், நல்லுறவை வளர்ப்பது, ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தல், வறுமை, நோய், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பது ஆகியவை ஐ.நா., சபையின் பணிகளாக உள்ளன. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன், 1945 அக்., 24ல் உருவாக்கப்பட்டது. உலகின் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நா., சபையின் அளப்பரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் அக்., 24ல், ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் கொள்கைகள் மற்றும் பணிகளை விளக்குவதே இதன் நோக்கம். உறுப்பினர்கள். ஐ.நா., சபை உருவாக்கப்பட்டபோது 51 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. இன்று 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது. தற்போதைய தலைவராக அன்டோனியா கட்டார்ஸ் உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவின்றி எதையும் செய்ய இயலாது. கிளை அமைப்புகள் : ஐ.நா.,சபையின் கீழ் சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்பு

பத்து ரூபாய்க்கு மருத்துவம்...

Image
பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மனிதநேய மருத்துவர்* தென்காசி (மெர்சல் டாக்டர் 10 rs) நாயகன் சினிமாவில் பார்த்தால் மட்டும் கை தட்டி பாராட்டும் நாம் நேரில் கை கொட்டி சிரிப்பதா? தென்காசி ரியல் ஹீரோ டாக்டர் இராமசாமி ஐயா.. 10 ரூபாய்க்கு மருத்துவம்:  ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி! ''சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைசேன். 10 ரூபாயே அதிகம் தான். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன்.  நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன்.  ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்கள

சமச்சீர் உணவா? தனிச்சீர் உணவா?

நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா? தனிச்சீர் உணவா? நவீன அறிவியலின் அடிப்படையில் உண்ணப்படும் உணவு முறையின் பெயர் - சமச்சீர் உணவுமுறை. ஒரு மனிதனுக்கு எந்தெந்த அளவில், என்னென்ன சத்துகள் வேண்டுமோ அவை சமமாகக் கலந்திருக்கும் உணவை தேர்வு செய்து சாப்பிடுவதுதான் சமச்சீர் உணவுமுறை. ஒரு நபருக்கு கால்சியம் ஒரு அளவிலும், புரோட்டீன் ஒரு அளவிலும், வைட்டமின்கள் ஒவ்வோர் அளவிலும் தேவையிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவை அனைத்தையும் கொண்டுள்ள உணவுகளைச் சாப்பிடுவதுதான் நவீன காலத்தின் சமச்சீர் உணவு முறை. தனிச்சீர் உணவுமுறை இதற்கு நேரெதிரானது. ஒரு குறிப்பிட்ட உணவில் இந்த வகையான சத்துகள் இருக்கின்றன என்று நம்மால் பிரித்து அறிய முடியும். ஆனால், நாம் வெறுமனே அதைச் சாப்பிட்டாலே போதுமானதா? நம்முடைய உடல் அந்த உணவிலிருந்து குறிப்பிட்ட அந்த சத்துக்களை எடுத்துக்கொண்டு விட்டதா என்பதை எப்படி அறிய முடியும்? உதாரணமாக, இரும்புச்சத்துக் குறைபாடு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படுகிறது. இரும்புச் சத்து கொண்ட ஒரு சிறப்பு உணவு அவருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த உணவில் சத்து இருப்பதும், அவர் உடலுக்கு அது தேவையாக

தெற்கு மேலெழுகிறது - வடக்கு தேய்கிறது...

தெற்கிலிருந்து ஒரு சூரியன் தமிழகம் முன்வைக்கும் மாற்றுப் பொருளாதாரம் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிப் போக்குக்கும்கூட, திராவிட இயக்கத்தின் வழி தமிழ்நாடு ஒரு மாற்று உரையாடலை முன்வைக்கிறது. ஆரம்பத்திலிருந்தே சாதி, வர்க்கம் இரண்டுக்கும் பெரிய முக்கியத்துவம் அளிக்காத ஒரு வளர்ச்சிக் கோட்பாட்டையே டெல்லி முன் எடுத்தது. காங்கிரஸ், பாஜக இரண்டுக்கும் மாற்றாக யோசித்தவர்கள் என்று கம்யூனிஸ்ட்களைக் குறிப்பிடலாம். வங்கத்தில், 34 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கீழ்நிலை வர்க்கத்தின் மீதான அக்கறை யோடு பொருளாதாரத்தை அணுகினார்கள். ஆனால், சாதியப் பாகுபாட்டுக்கு உரிய கவனம் அளிக்காத வர்க்க அடிப்படையிலான அணுகுமுறை இந்தியாவில் தோல்வியையே தழுவியது. சாதியச் சமூகமான இந்தியாவுக்கேற்ற வெற்றி கரமான ஒரு மாற்றுப் பொருளாதாரப் பார்வையை, சமூக நீதிப் பாதையைத் திராவிட இயக்கமே முன்வைத்தது. தீர்க்கமான கோட்பாடுகள் ஏதுமின்றி நடைமுறை அரசியலின் வாயிலாகவே இதைச் சாதித்தார்கள். இடஒதுக்கீட்டின் வழி வாய்ப்புகளையும் அதிகாரத்தையும் பரவலாக்கியவர்கள் வறுமையை எதிர்கொள்ள சமூக நலத் திட்டங்களைக் கருவியாகக் கையாண்டார்கள்.

வாட்ஸ்அப்- புதிய வசதிகள்

 வாட்ஸ்அப் கொண்டுவந்திருக்கும் புதிய அதிரடி மாற்றங்கள்.* *வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். ஆனால், இனி வரப்போகும் வாட்ஸ்அப் அப்டேட்டில் குழுவின் அட்மின், படங்கள், பெயர்கள் மற்றும் ஐகான்களைக் குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.*

வழக்கு மாற்றம்...

Image
ஜாக்டோ ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.அது தொடர்பாக நீதிமன்ற பதிவாளர கடிதம்_

கந்து வட்டி கும்பல் அராஜகம்...

நெல்லை தீக்குளிப்பு சம்பவம்: தாயும் இரண்டு குழந்தைகளும் பலி நெல்லையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (திங்கள்கிழமை) தீக்குளித்தனர். கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார். 70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி காருண்யா, அட்சயா பரணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார். முன்னதாக, தீக்குளிப்பு சம்பவம் குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோபி கூறும்போது, "என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு

Jobs at TNEB

TNEB - தமிழ் நாடு மின்சார வாரியத்தில் 1275 (AE, JE, Assistants) இடுகைகளை நேரடி ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது... இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க... மேலும் அறிய: https://goo.gl/WtDhsJ மொத்த காலியிடங்கள்: 1275 AE காலியிடங்கள் : 350 JE காலியிடங்கள் : 250 TA காலியிடங்கள் : 700 Apply Link: http://www.tamilanjobs.com/tneb-tangedco-recruitment-2017-…/ இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிபாக SHARE செய்யுங்கள்.

டெங்கு - விழிப்புணர்வு அவசியம்..

#டெங்கு_கோனார்_நோட்ஸ். #Dengue_for_dummies. By Dr. Arun Kumar. *டெங்கு காய்ச்சலில் என்ன தான் பிரச்சனை? ஏன் இத்தனை குழப்பம்?* _கேள்வி பதில்._ *_டாக்டர். அ. அருண்குமார், MD(Pediatrics),_* *_குழந்தை நல சிறப்பு மருத்துவர்,_* *_ஈரோடு._* *(கொஞ்சம் நீளமான மெசேஜ் தான். ஆனால் தவறாமல் முழுவதுமாக படியுங்கள்)* டெங்கு காய்ச்சல் கொசுவால் வருகிறது என்றும் அதனால் வரும் பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் அதிகம் என்றும் நம் ஊரில் எல்லாருக்கும் தெரியும். அந்த டெங்கு காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்வது என்று தான் ஆயிரம் குழப்பம். மருந்து கடையில் மாத்திரை வாங்கி தினமும் முழுங்குவதா? பக்கத்து தெரு போலி மருத்துவரிடம் போய் தினமும் 2 ஸ்டெராய்டு ஊசி போட்டுக்கொள்வதா? காய்ச்சல் வந்தவுடன் அலறி அடித்துக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரி போய் களேபரம் செய்வதா? மூலிகை கசாயங்கள் குடித்துக்கொண்டு வீட்டிலேயே மஜாவாக இருப்பதா? என்ன தான் செய்வது? மக்களுக்கு ஒரே குழப்பம். இதில் _வாட்ஸாப் விஞ்ஞானிகள்_ வேறு. *MR தடுப்பூசியின் போது குட்டையை கிளப்பிய அதே கும்பல்* இப்போதும் மக்களை காவு வாங்கியே தீருவோம் என்று பு