CellPhone தொலைந்து விட்டதா? IMEI எண்ணை மாற்றினாலும் கண்டுப்பிடிக்கலாம் - எப்படி தெரியுமா? செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றிவிட்டாலும் ‘சிஇஐஆர்’ திட்டம் மூலம் செல்போனை கண்டுபிடித்துவிடலாம் தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் கூறியதாவது, "பெரும்பாலும் செல்போன் தொலைந்துவிட்டால், தொலைந்தது திரும்ப கிடைக்காது என்ற எண்ணத்தில் பலரும் விட்டுவிடுவார்கள். ஒருசிலர் மட்டுமே காவல் துறையிடம் புகார் அளிக்கிறார்கள். இவ்வாறு திருடுபோகும் செல்போன்கள் பல்வேறு சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்பதால் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டியது அவசியம். போலீசாரிடம் புகார் அளித்தாலும்கூட, செல்போனில் இருக்கும் 15 இலக்க சர்வதேச செல்போன் சாதன அடையாள எண்ணை (ஐஎம்இஐ) மாற்றிவிட்டால், செல்போனை கண்டுபிடிப்பது சிரமம் என்ற எண்ணம் உள்ளது. மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘சிஇஐஆர்’ திட்டம் மூலம், தொலைந்த செல்போனின் ஐஎம்இஐ எண், சிஇஐஆர் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இந்த ஐஎம்இஐ எண்ணில் எப்போதும்