Posts

Showing posts from February, 2017

சிவ புராணம் ; ஓம் நம சிவாய

சிவபுராணம் நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! 1 பதிவிறக்கம் செய்ய உரை வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! 2 பதிவிறக்கம் செய்ய உரை ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! 3 பதிவிறக்கம் செய்ய உரை சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்: கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இற

TET NOTIFICATION 2017

TET NOTIFICATION 2017 👉🏼Applications  are  invited  for  Teacher  Eligibility  Test,  Paper  I  and  Paper  II for the year 2017 from the eligible candidates in Tamil Nadu. 👉🏼One  of  the  essential  qualifications  for  a  person  to  be  eligible  for  appointment as  a  teacher  in  any  of  the  schools  referred  to  clause  (n)  of  section  2  of  the  RTE  Act  is that  he/she  should  pass  the  Teacher  Eligibility  Test  (TET)  which  will  be  conducted  by the  appropriate  Government.   👉🏼The  State  Government  has  designated  the  Teachers  Recruitment  Board  as  the Nodal  Agency  for  conducting  Teacher  Eligibility  Test  and  recruitment  of  Teachers  as per G.O. (Ms) No. 181, School Education (C2) Department, Dated 15.11.2011. 1. 👉🏼Schedule of Dates  👉🏼Sale  of     Application   : 06.03.2017  to   22.03.2017  9am to 5 pm 👉🏼Last  Date  for Receipt  of Application  Form : 23.03.2017, 5pm 👉🏼Written  Examination: Paper  I  29.04.2017

TNPTF - மாநில அறிக்கை பிப்ரவரி 2017

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ச.மோசஸ்,பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஊதிய மாற்றக்குழுவை அறிவித்துள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.அதே நேரத்தில் கடந்த ஊதியக்குழுவில் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாகக் களையப்பட வேண்டும் என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழுவை 01.01.2006 முதல் அமல்படுத்தியது.  அதன்படி தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு ஊதிய மாற்றக்குழுவை அமைத்து அரசாணை எண் : 234 நாள் 01.06 2009ன் மூலம் புதிய ஊதியக் விகிதங்களை அமல்படுத்தியபோது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர்கள் 44 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்க

மாணவர்கள் உதவித் தொகை விண்ணப்ப படிவம்

விபத்தில் தந்தை/தாய் இழந்த மாணவர்களுக்கு ரூ75000/- பெறுவதற்கான விண்ணப்ப படிவம் click here to PDF download

JIO -JAI HO

100 கோடி வாடிக்கையாளர்கள் - ஏப்ரல் 1 முதல் ஜியோ கட்டணம் 📡📡📡📡📡 மும்பை: 170 நாளில் 100 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது: ஜியோ ஆரம்பிக்கப்பட்ட 170 நாளில் 10 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். ஒரு நிமிடத்திற்கு 7 பேர் ஜியோவில் இணைகின்றனர். ஜியோ வாடிக்கையாளர்கள் இதுவரை 100 கோடி ஜிகா பைட்களுக்கு மேல் இணைய சேவையை பயன்படுத்தியுள்ளனர். தினமும் 3.3 கோடி ஜிகா பைட்களுக்கு மேல் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் இந்தியாவை இணைய சேவையில் முதலிடத்தில் வைத்துள்ளனர். ஜியோவின் சலுகை காலம் முடிந்த பின்னரும், ஏப்ரல் 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் கிடையாது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஜியோ கட்டணம் அமலுக்கு வரும். தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இலவச வாய்ஸ் கால் சேவையை பெற ஒரு முறை ரூ.99 மற்றும் அன்லிமிடெட் இணைய சேவையை பெற மாதந்தோரும் ரூ. 303 செலுத்தினால் போதும். இதற்காக ஜியோ பிரைம் சேவை என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக வேக டிஜிட்டல் சேவை அளிப்பது ஜியோ மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார். ☎☎

HSC , SSLC PUBLIC EXAM TIME TABLE 2017

+2 & 10 th public exam time table 2017 - PDF file  click here PDF download

தலையங்கம் - புள்ளி விவரமல்ல கல்வி

தலையங்கம் *புள்ளி விவரமல்ல கல்வி* தோழர்களுக்கு வணக்கம்.. தற்போதைய அரசு பள்ளி மாணவர்களின் நிலையை எடுத்து சொல்வதற்காக இந்த நெடிய பதிவு... 👉🏼தற்போது அரசு பள்ளிகளில் பின்பற்றபட்டு வரும் அடைவுதேர்வு முறை கானல் நீராகவே உள்ளதாக கருதுகின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள்... 👉🏼ஏனெனில் தேர்வு என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது என்ன ? குறிப்பிட்ட பாடப்பகுதியில் குறிப்பிட்ட கால அளவு கொடுத்து சோதித்து அறியும் மதிப்பபீடு தானே, ஆனால் இந்த அடைவு தேர்வுகள் அப்படியல்ல.. 👉🏼தீடிரென்று ஒரு நாள் எந்தவித பாடப்பகுதியும் குறிப்பிடாமல் பயில்வதற்கு போதிய கால அவகாசம் தராமல் நடத்தப்படுவது வியப்பு... 👉🏼தற்போது 2முதல்5 ம் வகுப்பு பயிலும் இம்மாணவனுக்கு தரப்படும் அடைவுதேர்வு மொழிப்பாடத்தில் வாசித்தல் , பார்க்காமல் எழுதுதல் கணிதத்தில் அடிப்படைதிறன் அவ்வளவு தான் , இதைக்கூட சொல்லித்தராமல் ஆசிரியர்களை...  குறை சொல்ல கிளம்பிவிடாதீர்கள் , கொஞ்சம் சிந்திக்கவும்... இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கு தீடிர் அடைவுத்தேர்வு 1.செக்கோஸ்லோவியா , அமெட்யூர், காஜ் , ஆம்ஸ்டர்டம் , மிஸ்ச்சீவியஸ் .... இது போன்ற வாக்கியங்கள

TNPSC GROUP IV RESULT

TNPSC GROUP IV RESULTS EXAM DATE NOVEMBER 6,2016 GROUP-4 RESULT http://www.tnpsc.gov.in/ResultGet-g42017rank.html

முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

💥 *Breaking News* ⚠5-ந்து முக்கிய திட்டங்களில் கையெழுத்து. 🌱 *தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.* 🌱வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 🌱மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு - முதலமைச்சர் பழனிசாமி 🌱உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம்  - முதலமைச்சர் பழனிசாமி 🌱மீனவர்களுக்கான தனிவீடு வசதித் திட்டம் செயல்படுத்த ரூ.85 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி

FLASH NEWS சட்டப்பேரவை ?

Flash news சட்டப்பேரவையில் நற்காலி உடைப்பு. மைக் உடைப்பு கடும் அமளி... அவை மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைப்பு... ஓபிஎஸ் அணியின் பலம் 16 ஆக உயர்ந்தது! ரகசிய ஓட்டெடுப்பு: சபாநாயகர் நிராகரிப்பு.... சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கை வைத்தனர். ஆனால், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். எவ்வாறு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை எனவும் கூறினார். வேறொரு நாள் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கையையும் நிராகரித்த சபாநாயகர், கூவத்தூர் ரிசார்ட் குறித்து செம்மலை பேசியதையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார். கவர்னர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டு இன்றைய சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது என தனபால் தெரிவித்தார்.... For more http://tnsocialpedia.blogspot.com

சசிகலாவிற்கு 4ஆண்டு சிறை

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். இரண்டு நீதிபதிகளுமே ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர். கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அப்படியே ஏற்கப்படுகிறது என நீதிபதிகள் தெ

சசிகலா கனவு பலிக்காது...

சொத்து குவிப்பு வழக்கு: சசிக்கு 4 வருட சிறை புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

TET வாட்ஸ் அப் குருப்

🙏🏼TNSOCIALPEDIA🙏🏼 👉🏼நமது tnsocialpedia - TETதேர்வுக்கு தயாராக சிறிய முயற்சியாக வாட்ஸ் அப் குருப்பை உருவாக்கி உள்ளது. *👉🏼TET தேர்வு தொடர்பான தகவல்கள் மட்டுமே பகிர வேண்டும்..* 👉🏼மற்ற வழக்கமான எந்த ஒரு மெசஜ்-ம் அனுப்ப கூடாது... 👉🏼தவறாகவும் பயன்படுத்த கூடாது 👉🏼படிப்போம்!!! உயர்வோம் !!! பயன் பெறுவோம்!!! நன்றி!!! குருப் லிங்க் இதோ 👇🏼👇🏼👇🏼👇🏼 https://chat.whatsapp.com/EB4ZZIotabk2Hh2mBaNEPE

முதல்வர் பேட்டி

இதய தெய்வம் புரட்சித்தலைவி நினைவிடத்திற்கு வந்து மாண்புமிகு அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு, நான் அமைதியாக அமர்ந்தேன். என் மனசாட்சி உந்தப்பட்டதால் நான் இங்கு வந்தேன். ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கு சில உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு அம்மாவின் ஆன்மா உந்துதல் கொடுத்தது. மாண்புமிகு அம்மா அவர்கள் நோய் வாய்ப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டிய போது என்னிடம் வந்து ‘கட்சியும் ஆட்சியும் காப்பாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது’ என்று அவர்கள் வந்து சந்தித்து கேட்ட போது மாண்புமிகு அம்மா சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாற்று ஏற்பாட்டிற்கு இப்போது என்ன தேவை என்று நான் கேள்வி கேட்டேன். அசாதாரணமன சூழல் நேர்ந்தால் நாம் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு நான் அரை மணி நேரம் அம்மாவின் நிலையைக் கண்டு அழுது புலம்பினேன். என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்ட போது உடனடியாக பொதுச்செயலாளர் பதவியையும், முதல்வர் பதவியையும் ஏற்று நடத்துவதற்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டு

தமிழகத்தின் புதிய பாதை

ஓபிஎஸ் அதிரடி சரவெடி பேட்டி ...! *இதோ அந்த மனசாட்சியின் வார்த்தைகள்...* திடீர் தியானத்திற்கான காரணம் குறித்த ஓ.பி.எஸ்., விளக்கம்: மனசாட்சி உந்தப்பட்டதால் ஜெ., நினைவிடத்திற்கு வந்தேன். ஜேயலலிதா நோய்வாய்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் , 70 நாட்களுக்கு பிறகு அவர் என்னிடம் சில விசயங்களை சொன்னார். பொதுச்செயலராக மதுசூதனனை நியமிக்குமாறு ஜெயலலிதா என்னிடம் கூறினார். 2 முறை இக்கட்டான சூழ்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றேன். பொறுப்பேற்ற பின், திவாகரன் என்னிடம் வந்து சசிகலாவை பொதுச்செயலராக ஆக்க சொன்னார். அதற்காக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அனைவரும் ஏற்றுக்கொண்டனர். சசிகலாவும் ஏற்றுக்கொண்டார். நான் செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலுாட்டியது. சசிகலா முதலமைச்சராக வேண்டும் என வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் என்னிடம் கூறினார்.எனது அமைச்சரவையில் இருக்கும் வேறொருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்றார். என்னை வைத்துக்கொண்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும்? உதயகுமார் மதுரையில் போய் அவராக சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று பேட்டி கொடுத்தார். மெரினா எழுச்சியின்போ

ஓபிஎஸ் அதிரடி சரவெடி

*_முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு._* 🎙உண்மை நிலைமையை கூறப்போகிறேன் -  பன்னீர்செல்வம். 🎙ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன்.கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன். 🎙ஜெயலலிதாவின் நிலையை கண்டு மருத்துவமனையில் அழுது புலம்பினேன். 🎙வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது சசிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 🎙செல்லூர் ராஜு, உதயகுமார் மீதும் குற்றச்சாட்டு. 🎙முதல்வராக என்னையை அமரவைத்து கொண்டு அவமானப்படுத்தினார்கள். 🎙சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பற்றி எனக்கு தகவல் இல்லை.உதயகுமார் பேட்டியை பார்த்து செல்லூர் ராசு என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு மதுரை போய் அவரும் பேட்டி கொடுக்கிறார். 🎙ராஜினாமா செய்ய ஆளாக்கபட்டேன்.கட்டாயப்படுத்தி கையெழுத்து. 🎙தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன். 🎙மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன் 🎙ஒட்டுமொத்தத்தையும் போட்டு உடைத்தார் -  *ஓ.பி.எஸ்*.

TNPTF உரிமையின் குரல்

கொரில்லா முறையில் போராட்டம்- 'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, போராட்டம். சென்னை:போலீசின் தடுப்புகளை மீறி, ஆசிரியர்கள் பதுங்கியிருந்து, கொரில்லா முறையில், மறியல் செய்தனர். 'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, இரண்டு கட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தின.மூன்றாம் கட்டமாக, நேற்று, 10 ஆயிரம் பேர், சென்னை தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் வராமல் தடுப்புகள் அமைத்து,ஆசிரியர்கள் தடுக்கப்பட்டனர்.திடீரென, ஏராளமான ஆசிரியர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் எதிரே உள்ள கண் மருத்துவமனை வளாகத்தில், தனித்தனியாக வந்து போலீசார் அசந்த நேரத்தில், கொரில்லா படை போல், மறியல் செய்தது கண்டறியப்பட்டது. மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

எங்கள் உரிமை எங்கள் போராட்டம்!!!

*💪🏼TNPTF👍🏼* *சென்னை முற்றுகையாக மாறிய 10,000 TNPTF போராளிகளின் இயக்குநரக முற்றுகையின் வரலாறு!* CPS ஒழிப்பு, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கிணையான ஊதியம், 8-வது தமிழக ஊதியக்குழு அமைத்தல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி TNPTF அழைப்பு விடுத்த இயக்குநரக முற்றுகைப் போருக்கு 2.2.2017 முதலே பல தோழர்கள் சென்னையில் குழுமத் தொடங்கினர். இரவு முதலே TNPTF மாநில அலுவலகம் காவல்துறை கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. 3.2.2017 அதிகாலை மாநிலத் தலைவர் தோழர்.மோசஸ் சென்னை மாநகரத் துணை ஆணையரால் அழைத்துச் செல்லப்பட்டு போராட்டத்தைக் கைவிட பொறுப்பாளர்களிடம் பேச நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் மறுத்து விட்டார். *சென்னை நுழைவுகளான தாம்பரம், வண்டலூர், பூவிருந்தமல்லி, மகாபலிபுரம், எண்ணூர், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மதுரவாயல உள்ளிட்ட பகுதிகளில் தோழர்கள் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.* வாகன மறுப்பை எதிர்த்து மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் எதிர்ப்பு முழக்கமிட காவலர்கள் விடுவித்தனர். வாகன மறுப்பை அறிந்த ஏனைய தோழர்கள் இரயில் மூலம் DPI விரைந

TNPTF ALWAYS MASS...

சென்னையை குலுக்கிய *TNPTF* இன் முற்றுகைப்போராட்டம் வீரம்மிக்க போராட்ட துளிகள் முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு முதல் நாளே TNPTF போராளி சிங்கங்களின் குகையான மாநில மையகட்டிடத்தை சூழ்ந்தது காவல் துறை... DPI வளாகத்தை நெருங்க முடியா வண்ணம் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.... மாநிலத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்த வாகனங்களும் பூந்தமல்லி, மகாபலிபுரம், வண்டலூர், எண்ணூர், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மதுரவாயல் உள்ளிட்ட சென்னையின் அனைத்து நுழைவாயில்களிலும் காவல் துறையின் அடக்குமுறையால் வாகனங்கள் திருப்பப்பட்டது. இதனால், முற்றுகைப்போராட்டம் நடக்காது என்ற மனக்கோட்டையை  தகர்த்தது சங்கரநேத்ராலயா மருத்துவமனையில் நோயாளிகள் போல் பதுங்கிப்பாய்ந்து நம் சிங்கங்கள்..... காவல்துறை சுதாரிப்பதற்குள் நம் கட்டுக்குள் வந்தது DPI வளாகம்.. ஒரே ஒரு வாகனம் கூட அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் களப்பணியில் முன்வைத்த காலை புறமுதுகிட்டு பின்வைக்காதா போராளிகள் தாங்கள் வந்த வாகனத்தை அங்கேயே விட்டு பொதுவாகனமான இரயிலேறி போராட்டக்களத்தை சூழ்ந்து காவல் துறையை கதிகலங்கவிட்டது. நம்மை ஓரிடத்தில் சேரவிட்டால்

TNPTF முற்றுகை போராட்டம்.

முற்றுகைப் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் கைது'! டி.பி.ஐ.வளாகத்தில் பரபரப்பு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பது உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை கல்லூரி சாலையில் உள்ள மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை (டி.பி.ஐ) முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தின்போது போலீசாருக்கும், போரட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுதவிர, போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ள ஆசிரியர்களை, டி.பி.ஐ. செல்லும் வழியில் ஆங்காங்கே வழிமறித்து போலீஸார்  கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக நலக்கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் வருகை தொடருவதால் நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.               போராட்டம் குறித்து ஆரம்பப்பள்ளி

TNPTF மாநில அளவிலான முற்றுகை போராட்டம் பிப்ரவரி 3, 2017

*🔹🔷TNPTF விழுதுகள்🔷🔹* *பொதுச்செயலாளர் செய்தி* ```30.01.2017``` பேரன்புமிக்க தோழர்களே! வணக்கம். புரட்சிகரான போராட்ட வாழ்த்துகள்! பிப்ரவரி-03, நம் இயக்க வரலாற்றில் முக்கியதுவம் வாய்ந்த நாள். *முத்திரைப் போராட்டமாம் நம் முற்றுகைப் போராட்டத்திற்கு* இன்னும் மூன்று தினங்களே உள்ளன. மாநிலம் முழுவதும் முற்றுகைப் போராட்ட களப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  மண்டல அளவிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை,  ஈரோடு ஆகிய இடங்களில் உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் முற்றுகைப் போராட்டம் என்று நாம் எடுத்த முடிவை விஞ்சிடும் வகையில் வட்டார, நகரக் கிளைகளின் களப்பணிகள் நம்பிக்கையூட்டி இருக்கின்றன. *15 அம்சக் கோரிக்கைகளுக்கான இந்த முற்றுகைப்போர் அரசின், கல்வித் துறையின் கேளாச்செவிகளை நிச்சயம் சென்றடையும்.* தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து நடத்திய வீரஞ்செறிந்த போராட்டமே தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திட வல்லுநர் குழுவை அமைக்க வைத்தது என்பது வரலாறு.

BUDGET 2017

*மத்திய பட்ஜெட் 2017 - 2018*    *முக்கிய அம்சங்கள்* மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரை. 2017- 2018 பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று (புதன்கிழமை) காலை 11.08 மணியளவில் தாக்கல் செய்தார். முதன்முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்: தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பெண்களில் பங்களிப்பு 55% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் (2016 - 2017) பெண்கள் பங்களிப்பு 40% ஆக இருந்தது. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். 100 நாள் வேலைதிட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கான அறிவிப்புகள்: இந்த நிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.1% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ராபி பருவத்தில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் ஏக்கர் கணக்கு அதிகம். 2017 - 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 ல