MENU

Show more

தமிழகத்தின் புதிய பாதை

ஓபிஎஸ் அதிரடி சரவெடி பேட்டி ...!

*இதோ அந்த மனசாட்சியின் வார்த்தைகள்...*

திடீர் தியானத்திற்கான காரணம் குறித்த ஓ.பி.எஸ்., விளக்கம்: மனசாட்சி உந்தப்பட்டதால் ஜெ., நினைவிடத்திற்கு வந்தேன். ஜேயலலிதா நோய்வாய்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் , 70 நாட்களுக்கு பிறகு அவர் என்னிடம் சில விசயங்களை சொன்னார்.


பொதுச்செயலராக மதுசூதனனை நியமிக்குமாறு ஜெயலலிதா என்னிடம் கூறினார்.


2 முறை இக்கட்டான சூழ்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றேன். பொறுப்பேற்ற பின், திவாகரன் என்னிடம் வந்து சசிகலாவை பொதுச்செயலராக ஆக்க சொன்னார். அதற்காக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அனைவரும் ஏற்றுக்கொண்டனர். சசிகலாவும் ஏற்றுக்கொண்டார். நான் செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலுாட்டியது. சசிகலா முதலமைச்சராக வேண்டும் என வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் என்னிடம் கூறினார்.எனது அமைச்சரவையில் இருக்கும் வேறொருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்றார். என்னை வைத்துக்கொண்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும்? உதயகுமார் மதுரையில் போய் அவராக சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.


மெரினா எழுச்சியின்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.ஜல்லிக்கட்டுக்காக, அவசர சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தேன். ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுத்தேன். இதுகுறித்து பேச பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினேன்.

குடிநீர் பிரச்னைக்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். ஒட்டு மொத்த நாடும் அ.தி.மு.க., மீது தவறான எண்ணம் ஏற்பட்டுவிடும் என எண்ணி, என்னால் எந்த பங்கமும் ஏற்படக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டப்பட்டதே எனக்கு தெரியாது. சசிகலாவை முதலவராக்க கட்டாயப்படுத்தினர். என்னை கட்டாயப்படுத்தியதால் நான் ராஜினாமா செய்தேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியே போராடுவேன்

For more
http://tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28