Posts

Showing posts from March, 2018

ஈஸ்டர் நன்னாள் வாழ்த்துக்கள்...

Image
✝இனிய ஈஸ்டர் நன்னாள் வாழ்த்துக்கள்... ✝இந்த இனிய நன்னாளில் அன்பும், நம்பிக்கையும், வளமும், நலமும் உயிர்த்தெழுந்து மகிழ்ச்சி நிறையட்டும், வாழ்த்துக்கள்... ✝கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலத்திற்குப் பின்னர் வருவது பண்டிகை ஈஸ்டர் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் நிகழ்வாக ஈஸ்டர் பண்டிகை உள்ளது. நட்புடன் R.R🙏🏼

USEFUL HIGHER STUDY WEBSITE LINKS

+2 முடித்த மாணவர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள்... ALL INDIA ENTRANCE EXAMS FOR HIGHER STUDIES - AFTER 12th 1.JEE main (Joint entrance examination main) Written Exam B.E/B.Tech /B.Arch http://jeemain.nic.in for NIT’S and IIIT’S. 2. JEE ADVANCE (Indian Institute of Technology Joint Entrance Exam) Written Exam B.E/B.Tech in IIT www.advance.nic.in 3. NEET Written Exam M.B.B.S/ B.D.S in India www.aipmt.nic.in now this exam is replaced by NEET. 4. AFMC- (Armed Forces Medical College Entrance Exam Written Exam M.B.B.S(Should Serve 7 Years in Armed Forces) www.afmc.nic.in 5. NID NEED(National Entrance Exam for Design Written Exam National Institute of Design and other Design Institutes www.nid.edu 6. CLAT- (Common Law Admission Written Exam National Law Universities www.clat.ac.in Test) 7. BITSAT(Birla Institute of Technology Science Admission Test) Online Exam B.E in Pilani, Hyderabad and Goa www.bits-pilani.ac.in 8. NCHMCT(National Council for Hotel Management Catering Tech
Image
இன்று வேதாத்திரி மகரிஷி மகாசமாதி அடைந்த தினம்! 💚சென்னையை ஆடுத்த கூடுவாஞ்சேரியில் 1911ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ஆம் நாள் எளிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தார். பத்து வயதாக இருக்கும்போது, மதிய வேளையில் தறியில் நெய்துகொண்டிருந்தார். அவரது அன்னையார் உணவு உண்ண அழைக்கும் வேளை வந்தது. ஆனால் அன்னையாரோ அவரைக் கூப்பிடாமல் சமையலறையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அன்னை கண்கலங்கி நின்றதை ஆந்தப் பிஞ்சு உள்ளத்தால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. தனது அன்னையின் கால்களைக் கட்டிக்கொண்டு, ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார். அன்னை அவரை இறுக அணைத்தபடி, “ஏன் செல்லமே நாங்கள் உன்னை தவமிருந்து பெற்றோம். ஆனால் இன்று உன் பசிக்குக் கூழ் கொடுக்க முடியாமல் தவிக்கும் பாவியாக இருக்கிறேனடா” என்று கூறி அழுதார். சிறுவனான வேதாத்திரியும் அழுதுவிட்டார். வறுமை ஏன் ஏற்படுகிறது? கடவுள் யார்? நான் யார்? உயிர் ஏன்றால் ஏன்ன? என்பன போன்ற வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்ற வேட்கை அவருக்கு எழுந்தது. பிற்காலத்தில் இக்கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டு, பாமர மக்களின் தத்துவ ஞானியாக விளங்கினார் வேதாத்திரி மகரிஷி. வேதாத்த

கேள்வித்தாள் அவுட்...

கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து, 10ம்வகுப்பில் கணிதத் தேர்வையும், 12-ம் வகுப்பில் பொருளாதாரப் பாடத் தேர்வையும் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 10-ம்வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. ஏறக்குறைய 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இதில் 10-ம் வகுப்பு கணிதம்(கோட்-041), பாடத்துக்கான கேள்வித்தாளும், 12-ம் வகுப்பான பொருளியல்(கோட்0390) கேள்வித்தாளும் தேர்வுக்கு முன்னதாக நேற்று இரவு சமூக ஊடகங்களில் வெளியானதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான செய்திகள் நாளேடுகளிலும், செய்தி சேனல்களிலும் வெளியாகின. இதையடுத்து, 10-ம்வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் இன்று அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 10ம்வகுப்பு, 12-ம்வகுப்பு பாடங்களின் தேர்வுத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்தது. பொதுத்தேர்வின் பொதுநலன், நேர்மை, நியாயம், மாணவர்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வை நடத்த முடி

உஷார்- உளவாளி போன்கள்...

ஜூனியர் விகடன் - பதிவு  அலசல் உங்கள் போனுக்குள் ஓர் உளவாளி! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி தென் தமிழகத்தின் ஒரு மாநகரில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண் அவர். சமீப நாள்களாக அவருக்கு ஒரு பிரச்னை. அவ்வப்போது அவர் மொபைல் போனில் திடீரென சில குரல்கள் கேட்கின்றன.  ‘‘இன்னிக்கு கோயிலுக்குப் போகணும்னு சொன்னியே... இன்னுமா கிளம்பலை?’’ என்று அது கேட்கும். ஆம்... அன்று அவர் கோயிலுக்குப் போக வேண்டும் என்று தன் தோழியுடன் பேசியபோது சொல்லியிருந்தார். அதைத்தான் அந்தக் குரல் சொன்னது. இப்படியாக, ‘பால் கொதிக்கிறது’, ‘மொட்டை மாடியில் துணி காய்ந்துவிட்டது’ என அவரின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை அவருக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது அந்த மொபைல் குரல். முதலில், அது ஏதோ பேய் அல்லது ஆவியின் வேலை என்றுதான் அவர் நினைத்திருக்கிறார். ஆனால், போகப் போக அந்தக் குரல் விரசமான விஷயங்களையெல்லாம் பேசத் தொடங்கியது. அந்தப் பெண்ணின் பல அந்தரங்க அடையாளங்களை யெல்லாம் குறிப்பிட்டுப் பேசியது. ‘எந்நேரமும் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள்’ என்ற உணர்வு அவருக்கு அதீத பயத்தைத் தந்தது. ஒரு கட்டத்தில் இந்த விஷயங்களை மறைக்கவும் தெரிய

வள்ளுவர் பிறந்த இடம் குமரி ?

#திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்... வரலாற்று ஆய்வாளரும் 'ஆய்வுக் களஞ்சியம்' மாத இதழ் ஆசிரியருமான டாக்டர் எஸ். பத்மநாபன்  திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர் தரும் தகவல்களை பார்ப்போம்... கரை கண்டேஸ்வரர் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் முட்டம் கடற்கரையில் இருந்து  5 கி.மீ. தொலைவிலும் உள்ள கிராமம் அதன் பெயர் #திருநாயனார்குறிச்சி எளிமையான கிராமம், மற்ற கிராமங்களைப் போலவே நவீன வடிவம் பூண்டிருக்கிறது..   கரை கண்டேஸ்வரர் ஆலயம் முன்பு உள்ள கிராமத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தார்... "இதுதான் திருவள்ளுவர் பிறந்த ஊர்" என்கிறார்... "வள்ளுவர் இங்குதான் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? '' "நிறைய ஆதாரங்கள் இருந்ததால் தான் மூன்று முதல்வர்களிடமும் இதைப்பற்றி பேசியுள்ளார்.. எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் தனது ஆய்வு குறித்து பேசியிருக்கிறார்...ஐம்பது ஆண்டுகளாக திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார் அவரது

கணிணி கல்வியில் பின்தங்குகிறதா தமிழகம்???

Image
தகவல் தொழில்நுட்ப கல்வியில் பின் தங்கும் தமிழக கல்விமுறை மத்திய அரசு தகவல்... கணினியே இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் வெறும் பெயருக்காக மட்டும் அறிவியல் பாடத்துடன் இணைக்கும் தமிழக  அரசு.புதிய பாடத்திட்டமும் பொய்த்து போனது .. அறிக்கையில் மட்டும் கணினி பாடம் அரசுப்பள்ளியில் இல்லாத நிலை இன்றும் ! மடிக்கணினி மட்டும் இலவசமாக கொடுக்கும் அரசு அதற்கான கல்வியை மட்டும் கொடுக்க மறுப்பது ஏன்???        மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது வரவேற்புக்குரியது என்ற போதிலும் மாணவர்களுக்கு முறையான கணினி கல்வியை  வழங்கினால் மடிக்கணினியை தனது சுய சம்பதியத்திலே  வாங்கும் நிலையை தமிழக அரசு என்று ஏற்படுத்த போகிறது.கல்வியில் இலவசத்தை தவிர்த்து அதற்கான கல்வியை மட்டும் இலவசமாக தாருங்கள் அரசுப்பள்ளியும்,மாணவர்கள் மேன்மை அடைவர்கள். பல இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி மட்டும் இலவசம்  பள்ளி ஆய்வகத்தில் கணினி எங்கே?? இந்த திட்டம் 2011-2012ஆம் கல்வி ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையில் இருந்த போதிலும் தமிழக  அரசுப்பள்ளியில் மட்டும் கணினிப்பொறி இல்லா நிலையை உருவாக்கிவிட்டது அரசு.

III TERM SA QUESTIONS 2018

Image
மூன்றாம் பருவ வினாத்தாள் 1 முதல் 5 வகுப்பு வரை (TAMIL MEDIUM) Click here to download PDF - PRINTABLE VERSION FILE

புதிய பாடத்திட்டத்தில் பாடநூல்கள் தயாராகிறது

Image
பாட புத்தகம் தயாரிப்பு : மார்ச் 28க்குள் முடிக்க கெடு Image courtesy : deccan chronicle தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதில், வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. புதிய பாடத்திட்டத்தின்படி, பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பிரபல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், புதிய பாடப்புத்தகத்தை எழுதியுள்ளனர். அவற்றில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கான புத்தகங்கள், முழுமையாக சரிபார்க்கப்பட்டு, அச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒன்பது மற்றும் பிளஸ் 1 புத்தகங்களின் அம்சங்கள், படங்கள், க்யூ.ஆர்., கோடு போன்றவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், க்யூ.ஆர்., கோடு அடிப்படையில், மொபைல் ஆப்பில், வீடியோ படங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாட புத்தக ஆய்வு பணிகளை முழுமையாக முடித்து, மார்ச், 28க்குள் அச்சடிக்க வழங்குமாறு, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், இற

உஷார் - வெயிலின் கொடுமை

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதுபோல், இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் உடலில் வெப்ப நோய்களும் வரத் தொடங்கிவிட்டன. கொடூரமாகக் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தால், சரும நோய்கள் வருவது அதிகமாகிவிட்டது. வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. என்றாலும், நம் உணவிலும் உடையிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், இவற்றை வரவிடாமல் தடுப்பதும் எளிது. சருமம் கறுப்பாகிறது, ஏன்? சருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்குச் சருமம் கறுப்பாகிவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம், சூரியக் கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாகச் சருமத்தைத் தாக்கும்போது, அதிலுள்ள பி வகை புறஊதாக் கதிர்கள் சருமத்தின் செல்களிலுள்ள டி.என்.ஏ.க்களை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காகச் சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது. சருமம் தன்னைத்தானே சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எடுத்துக்கொள்கிற தற்காப்பு நடவடிக்கை என்று

ஆழ்ந்த இரங்கல்...

Image
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்   தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார். வாழ்க்கை வரலாறு: இன்று காலமான விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1942ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பகுதியில் பிறந்தவர். இவர் 21வது வயதில்(1963ம் ஆண்டு) மோடோர் நியூரான் எனும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். 1965 ம் ஆண்டு இவருக்கு ஜேன் வில்டி என்பவருடன் திருமணம் நடந்தது. ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அண்டவியலும்(Cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும்(Quantum gravity ) ஆகியவை இவர் ஆய்வு செய்ததில் முக்கியமானதாகும். கருந்துளையினும் ( Black holes) துணிக்கைகள் (Pa

SILENT LETTERS IN ENGLISH

*SILENT LETTERS IN ENGLISH* *& PRONUNCIATION OF WORDS* 1. Slient B Bomb /bɒm/ Climb /klaɪm/ Comb /kəʊm/ Crumb /krʌm/ Debt /det/ Doubt /daʊt/ Dumb /dʌm/ Lamb /læm/ Limb /lɪm/ Plumber /ˈplʌmər/ Subtle /ˈsʌtl/ Thumb /θʌm/ Tomb /tuːm/ Womb /wuːm/ 2. Silent C Ascend /əˈsend/ Ascent /əˈsent/ Crescent /ˈkresnt/ Descend /dɪˈsend/ Descent /dɪˈsent Disciple /dɪˈsaɪpl/ Fluorescent /ˌflɔːˈresnt/ Muscle /ˈmʌsl/ Obscene /əbˈsiːn/ Resuscitate  /rɪˈsʌsɪteɪt/ Scenario /səˈnærioʊ/ Scene /siːn/ Scent /sent/ Science /ˈsaɪəns / Scissors /ˈsɪzərz/ 3. Silent D Wednesday /ˈwenzdeɪ/ Sandwich  /ˈsænwɪtʃ/ Handkerchief /ˈhæŋkərtʃɪf/ Handsome /ˈhænsəm/ 4. Silent G Align /əˈlaɪn/ Assign /əˈsaɪn/ Benign /bɪˈnaɪn/ Campaign /kæmˈpeɪn/ Champagne /ʃæmˈpeɪn/ Cologne /kəˈloʊn/ Consign /kənˈsaɪn/ Design /dɪˈzaɪn/ Feign  /feɪn/ Foreign /ˈfɔːrən/ Gnarly /ˈnɑːrli/ Gnome /noʊm/ Reign /reɪn/ Resign /rɪˈzaɪn/ Sign /saɪn/

போலியோ சொட்டு மருந்து அளிக்க மறவாதீர் (11.3.18)

Image
தமிழகம் முழுவதும் நாளை (11/3/2018) போலியோ சொட்டு மருந்து முகாம்... தமிழகம் முழுவதும் நாளை (11/3/2018) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.கடந்த ஜனவரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக நாளை அளிக்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஏற்கனவே கொடுத்திருந்தாலும், நாளைய முகாமிலும் சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

மகளிர் தின வாழ்த்துகள்..

*👉🏽இனிய மகளிர் தின வாழ்த்துகள்..* 👉🏽ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்; 👉🏽பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; 👉🏽நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்; 👉🏽ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்; பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ! - பாரதி

பெரியார் என்றுமே பெரியார்..

Image
தந்தை பெரியார் யார் ?? சில தகவல்கள்.......... 1. தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய், தனது 94 ஆம் வயதுவரை மக்கள் பணியில் ஈடுபட்டவர். 2. செல்வக் குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி)  சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர். 3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாய் மாற்றாதவர், அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர்.  தனது வாழ்நாளில் ஏறக்குறைய 8200 நாட்கள் சுற்றுபயணம் செய்து சுமார் 11,000 நிகழ்ச்சி/கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியவர். முதிர்ந்த வயதிலும், சிறுநீரக பாதிப்பால், மூத்திர வாளியை கையோடு பிடித்துகொண்டு சுற்றுபயணம் செய்து கூட்டங்களில் பேசியவர். 4. அக்காலத்திலேயே விதவை மறுமணத்தை ஆதரித்தவர், பெண் கல்வியை வலியுறுத்தியவர், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கவேண்டும் என்று சொன்னவர்.  5. மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது என ஜாதியத

CPS NEWS

Image
*CPS NEWS:* *CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்யாமல் தமிழக அரசிடம் விரைந்து அறிக்கை வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று (05.03.2018) நீதியரசர் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.* *நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பதில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை.*

TNPTF பொதுச்செயலாளர் முதல் அறிக்கை

Image
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலாளர் அறிக்கை* *பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!வணக்கம்.* *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 12வது மாநிலத் தேர்தல் வீரஞ்செறிந்த புதுக்கோட்டை மண்ணிலே மிகுந்த எழுச்சியோடும்,உற்சாகத்தோடும் நேற்று(04.03.2018)நடைபெற்றது* *இயக்கத்தின் அமைப்பு விதிகளுக்கு உட்பட்டும்,தொழிற்சங்க இலக்கணத்தோடும்,உயர்ந்தபட்ச ஜனநாயக நெறிமுறைகளோடும் நடைபெற்ற அத்தேர்தலில் மாநிலம் முழுவதுமிருந்து பங்கேற்றுச் சிறப்பித்த பேரியக்கத்தின் அனைத்து மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மால மையம் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது* *தமிழ்நாட்டு ஆசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் பேரியக்கத்தின் மாநிலத் தேர்தல் நிகழ்வுகளை காண்பதற்காக மாநிலம் முழுவதுமிருந்து புதுக்கோட்டைக்கு உணர்வுபூர்வமாக வருகைதந்து பார்வையாளர்களாகக்கலந்துகொண்டு சிறப்பித்த இயக்கத் தோழர்களை மாநில மையம் பாராட்டி மகிழ்கிறது* *மாநிலத் தேர்தல் நிகழ்வுகளை மிக நேர்த்தியாகவும்,ஜனநாயக மாண்புகளோடு

TNPTF தேர்தல் முடிவுகள் 2018

Image
*_தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - தேர்தல் முடிவுகள் :_* தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 12வது *மாநிலத் தேர்தல் முடிவுகள்* *மாநிலத் தலைவர்* தோழர். மு.மணிமேகலை (திருநெல்வேலி மாவட்டம்) *பொதுச் செயலாளர்* தோழர்.ச.மயில் (தூத்துக்குடி மாவட்டம்) *மாநிலப் பொருளாளர்*  தோழர் க.ஜோதிபாபு *துணை பொதுச் செயலாளர்* த.கணேசன் *STFI  பொதுக்குழு உறுப்பினர்* - தோழர். S.மோசஸ் *மாநில துணைத்தலைவர்கள்* 1.பெ.அலோசியஸ் துரை ராஜ் (காஞ்சி மாவட்டம்) 2.மலர்விழி 3.ஜான் கிறிஸ்து 4.ஜோசப் ரோஸ் 5.தமிழ்செல்வி 6.ரஹிம் 7.உஷா *மாநில செயலாளர்கள்* 1.மல்லிகா 2.சித்ரா 3.ஹேமலதா 4.முருகேசன் 5.வின்சென்ட் 6.முருகன் 7.பிரசன்னா மேற்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும்   வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐

Redmi note 4 - online shop

TRB ANNUAL PLANNER-2018 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Image
TRB ANNUAL PLANNER 2018