Posts

Showing posts from March, 2016

CCE EXCEL WORK FAQs

CCE EXCEL FILE CLARIFICATIONS click here CCE FAQs

CCE 9th STD ENGLISH MEDIUM

CCE 9th STD CCE. Easy MARK LIST- ENGLISH MEDIUM click here.to download

CCE GRADE CALCULATING EXCEL FILE

🙏🏼Tnsocialpedia🙏🏼 CCE முறையில் கிரேட் மதிப்பிடும் சிரமம் இனி இல்லை மாணவர் பெயரையும் மதிப்பெண்ணையும் உள்ளீடு செய்தால் அனைத்து பதிவேட்டிற்கான கிரேடும் தானகாவே கணக்கிட உதவும் எக்ஃசல் பைல் Password :cce123 📕I to VII std CCE MARK LIST English medium I to VII std CCE MARK LIST English medium click here to download 📗IX std CCE MARK LIST TAMIL MEDIUM.. முப்பருவ தேர்வு IX std CCE MARK LIST IX std CCE MARK LIST Tamil medium click here to download 📘I to VIII CCE MARK LIST முப்பருவ தேர்வு மதிப்பெண் பட்டியல் மிக எளிய முறையில் தயாரிக்க ... 1 to 8th std  1 to 8 th std CCE FORMAT click here to download.... For more www.tnsocialpedia.blogspot.com

I to VIII std CCE MARK LIST English medium

I to VIII std CCE MARK LIST English medium click here to download

IX std CCE MARK LIST TAMIL MEDIUM

முப்பருவ தேர்வு IX std CCE MARK LIST IX std CCE MARK LIST Tamil medium click here to download

I to VIII CCE MARK LIST

முப்பருவ தேர்வு மதிப்பெண் பட்டியல் மிக எளிய முறையில் தயாரிக்க ... 1 to 8th std  1 to 8 th std CCE FORMAT click here to download

Mutal transfer pudukotai to madurai , sivagangai ,dindukal

Ramalakshmi, SGT,. Working place- Thirumayam union, Pudukottai dt. Need place - Madurai, Sivagangai(thirupatur, singampunari, thiruphvanam), Dindigul (Natham ) Contact :  ramlaxmi8291@gmail.com

Mural transfer thiruvanamalai to salem

I am C.M.GOPINATH working as b.t asst English in govt boys higher secondary school,kannamangalam, thiruvannamalai district. I want mutual to salem district.if anybody is willing please contact me. gopinath.nsa@gmail.com

Mural transfer request t.v Malai to south dists- Tamilnadu

S.Marichamy, S.G.Teacher, Pudupalayam Block, Thiruvannamalai Dist. Cell No.9786902983 Need mutual transfer to Madurai, Theni, Dindigul, Sivagangai, Virudhunagar, Ramanathapuram..

இன்டெர்நெட் வேகம் இந்தியாவில் குறைவு

ஆசியாவிலேயே இண்டர்நெட் வேகம் மிகவும் குறைந்த நாடு எது தெரியுமா? இந்தியாவாம்!  ஆசியாவிலேயே இண்டர்நெட் வேகம் மிகவும் குறைந்த நாடு இந்தியா என்று இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இந்த புள்ளிவிபரத்தில், சராசரி வேகத்தில் 115-வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா. இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரம் "Fourth Quarter, 2015, State of the Internet Report" வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது வழக்கம். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள இந்த புள்ளிவிபரம் முக்கியான ஒன்று. அந்த புள்ளிவிபரத்தில், உலக அளவில் இண்டர்நெட்டின் சராசரி வேகம் 23 சதவீதம் அதாவது, 5.6 எம்.பி.பி.எஸ். அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா அதிகபட்சமாக 26.7 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் சேவையை வழங்கியிருக்கிறது. மிகக்குறைந்த சராசரி வேகத்தில் இண்டர்நெட் சேவையை கொண்டிருக்கும் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் வருத்தம்

Image
ஏன் வெற்றிபெற்றேன் என வருந்துகிறேன்" - சூப்பர் சிங்கர் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் வருத்தம் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது பற்றிய சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது ஆனந்த தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளார். தான் ஏன் வெற்றி பெற்றோம் என வருத்தப்படுவதாக அதில் தெரிவித்துள்ளார். ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் பேஸ்புக்கில் பகிர்ந்த ஆங்கிலப் பதிவின் முழு தமிழ் வடிவம் இதோ, "கடந்த 2 நாட்கள், என் வெற்றியை நான் கொண்டாடியிருக்க வேண்டிய அந்த இரண்டு நாட்களும் எனக்கு கெட்ட கனவு போல கடந்தன. இந்த கடினமான நேரத்தில் என்ன ஆதரித்தவர்களுக்கும், விஜய் டிவிக்கும் நன்றி. 10 மாதங்களாக போட்டியிட்டு, பாடல்கள் கற்று, வெற்றி பெற்ற பிறகு வெற்றியின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக நினைத்தேன், 10 வருடங்கள் என்னுடைய நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த பெரிய மேடை அது. ஆனால் சில நல்ல உள்ளங்கள், போலியான ப்ரொஃபைல்களை உருவாக்கி, ஏற்கனவே இணையத்தில் இருக்கும் ஒரு தகவலை வைத்துக் கொண்டு அதை அவதூறாக பரப்பிவருகின்றனர் சூப்பர் சிங்கர் போட்டி

MUTAL TRANSFER

🙏🏼Tnsocialpedia🙏🏼 /mutal transfer/ ஆசிரிய நண்பர்கட்கு வணக்கம்... மாவட்ட & ஒன்றிய மனமொத்த மாறுதல் தேவைப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் பணிபுரியும் விவரங்களை நமது Tnsocialpedia -ல் வெளியிட்டு பயன் பெறலாம்... தகவல்களை tnsocialpedia@gmail.com& வாட்ஸ் அப் மூலமாக அனுப்பலாம்... குறிப்பு : தகவல் இணையத்தில் வெளியாகும் என்பதால் தொடர்புக்கான தொலைபேசி எண் அதற்கேற்றாற் போல வழங்கவும்.. நன்றி www.tnsocialpedia.blogspot.com

ஏ.டி.எம்., மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!

💥💥💥ஏ.டி.எம்., மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்! ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்து உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மின் இணைப்பு வழங்கப்படும். மாதந்தோறும், மின் கட்டணம் வாயிலாக, 2,500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.மின் கட்டண மையங்களில், கூட்டம் நிரம்பி வழிவதால், பலர் பணத்தை தொலைத்து விடுகின்றனர். இதையடுத்து, 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு', இணைய தளம், அஞ்சல் நிலையம், அரசு சேவை மையங்களில், மின் கட்டணம் செலுத்தும் வசதியை, மின் வாரியம் துவக்கியது. அந்த வரிசையில், தற்போது, ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை அறிமுகம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

🙏🏼Tnsocialpedia🙏🏼 வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை? வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை. இதனால், நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்பதால், 24ல், இங்கு வங்கிகள் இயங்கும். பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து, மார்ச், 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் மட்டும் நடக்கும் என்பதால், மற்ற வங்கிகள், 28ல் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார். www.tnsocialpedia.blogspot.com

தொழில்முனைவோர்களை தேடும் அமேசான்

Image
தொழில்முனைவோர்களை தேடும் அமேசான் தொழிலில் புதிய புதிய வாய்ப்புகளை தேடுவதுதான் நிறுவனங்கள் வளர்வதற்கான ஒரே வழி. சேவைகளை விரிவுபடுத்துவது, எளிமைப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முடியும். வாய்ப்புகளைக் கொடுக்கிறோம் வாருங்கள் என விற்பனையாளர்களை நோக்கி அமேசான் வாகனத்தை தள்ளிக் கொண்டு வருகிறது. ஆம் அமேசானில் விற்பனையாளராக வேண்டும் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆட்கள் வந்து உங்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள் என புதிய சந்தையை உருவாக்கி உள்ளது அமேசான். சமீபத்திய இந்த அறிவிப்பு ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள பல நிறுவனங்களுக்கும் சவாலாக இருக்கும் என்றே தெரிகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் பல போட்டியாளர்கள் இருந்தாலும் அமேசான் தனது சேவைகள் மூலம் முன்னணி நிறுவனம் என்கிற இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போது அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் உள்ளூர் அளவிலான தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றன. இப்படி பல தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைக்க பல நாட்கள் ஆகின்றன. பல நடைமுறைகளை வைத்துள்ளன இந்த நிறுவனங்கள். அமேசான் இதற்கு எ

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்கள் பயணம் பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6¾ லட்சம் கோடி) செலவில் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் அங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி (வயது 52), ரஷிய விண்வெளி வீரர் மிக்கேல் கொர்னியங்கோ (55) ஆகிய இருவரும் சமீபத்தில் பூமிக்கு திரும்பினர். இப்போது அவர்களுக்கு பதிலாக அமெரிக்க விண்வெளி வீரர் ஜெப் வில்லியம்ஸ், ரஷிய விண்வெளி வீரர்கள் ஓலக் ஸ்க்ரைபோச்கா, அலெக்சி ஓவ்சினின் ஆகிய 3 பேரும் ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மூலம் நேற்று (மார்ச் 19) இந்திய நேரப்படி அதிகாலை 2.56 மணிக்கு கஜகஸ்தான் நாட்டில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் அங்கு சில காலம் தங்கி இருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபடுவார்கள். அவர்களில் ஜெப் வில்லியம்ஸ் ஏற்கனவே 3 ம

பேஸ்புக்கிலும் சம்பாதிக்கலாம்

பேஸ்புக் தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு பேஸ்புக் சமூக வலைதளம்,அதன், மென்பொருள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்துவதில் ஏற்படும் தவறுகளை கண்டுபிடித்து, சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு, நான்கு கோடியே, 84லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது. சமூக வலைதளமான பேஸ்புக் தன் மென்பொருள் பயன்பாட்டில் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து, சுட்டிக் காட்டுபவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறது. இது குறித்து,பேஸ்புக் நிர்வாகி ஆடம் ரூடர்மான் கூறியதாவது: இந்தியாவில், 14.2 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்; மென்பொருள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் முன்னணியில் உள்ளனர்; அவர்களின் ஆய்வுகள் மிகுந்த பயனளிக்கின்றன. கடந்த, 2011ல் பரிசளிப்பு திட்டம் துவங்கியதில் இருந்து, இதுவரை தவறை கண்டறிந்த, இந்தியர்களுக்கு, 4.84 கோடி ரூபாய் பரிசு வழங்கியுள்ளோம்.

IGNOU CONVACATION 2016

📝🖋📚📜 இக்னோ-வின் 29-வது பட்டமளிப்பிற்கான இணைய வழிப் பதிவு வழிமுறை: படி-1 ***** https://webservices.ignou.ac.in/convregistration/Default.aspx என்னும் இணையப்பக்கத்திற்குச் செல்லவும் படி-2 ****** வழிமுறைகளுக்குப் பின்னர் இறுதியில் இருக்கும், Click here to Register என்னும் பொத்தானை அழுத்தவும் படி-3 ****** புதியதாகத் திறந்துள்ள பக்கத்தில் தோன்றும், Enter Enrolment No. அருகிலுள்ள எழுத்துப் பெட்டியில் உங்களின் பதிவு எண்ணைத் தட்டச்சு செய்து search பொத்தானை அழுத்தவும். படி-4 ****** தங்களின் பெயர், படிப்பு, மையம் உள்ளிட்ட விபரங்கள் திரையிடப்படும். சரி எனில், Whether willing to attend the Convocation at Regional Centre என்பதற்கு அருகிலுள்ள தேர்வுப் பெட்டியில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் தங்களின் விருப்பத்தினை Yes / No என்பதைத் தெரிவு செய்து உறுதிப்படுத்தவும். அதன் கீழ் தோன்றும், Email Address Mobile No. உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்கவும். இங்கு நீங்கள் வழங்கும் செல்லிடபேசி எண்ணிற்குத் தான் பணப்பறிமாற்றத்திற்கான திறவுச்சொல் அனுப்பப்படும். Pay Now பொத்தானை

தேர்தல் 2016

4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு? தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த நான்-கு லட்-சத்து, 23 ஆயி-ரத்து, 441 அரசு ஊழியர், ஆசிரியர்கள், புதிய ஓய்-வூ-திய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அர-சின் பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால், பணியின்போது இறந்த ஊழியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை; நீதிமன்றம் மூலமே சிலர் பலன் பெற்றனர். கடந்த, 2011 சட்டசபைத் தேர்தல் அறிக்-கை-யில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்-வூ-திய திட்டம் ரத்து செய்யப்படும்,' என அ.தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்-சிக்கு வந்த பின், எந்த முயற்-சியும் எடுக்-கவில்-லை அதிருப்தி அடைந்த ஊழியர்கள் தொடர் வேலை-நி-றுத்த்தில் ஈடு-பட்-டனர். இதனால், 'புதிய ஓய்-வூ-திய திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார்; ஆனால், அரசாணை வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை பயன்படுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் ச

சிறு சேமிப்பு வட்டி குறைப்பு

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்து நிதியமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. அப்போது சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் 0.25% குறைக்கப்படுவதாகவும், இந்த வட்டிவிகிதம் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான காலாண்டு வட்டி விகிதத்தை இன்று மாற்றியமைத்துள்ள மத்திய அரசு, புதிய வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது. அதன்படி, பிபிஎப் திட்டத்துக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் 8.7 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி 8.7 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலகத்தில் சேமிக்கப்படும் கால வரையறையுடன் கூடிய சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு டெபாசிட்டுக்கு 8.4 சதவீதத்தில் இருநது 7.1 சதவீதமாகவும், 2 ஆண்டு டெபாசிட்டுக்கு 8.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், மூன்றாண்டு டெபாசிட்டுகளுக்கு 8.4 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகவ

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

Image
10ம் வகுப்பு பொது தேர்வு; தேர்வுத்துறை நடவடிக்கை இத்தேர்வுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் அரசுத் தேர்வுத்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றின  செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் புள்ளி விவரங்கள்: இடைநிலைப் பொதுத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,054 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10,72,223 மாணவ/மாணவியர்கள் (தனித் தேர்வர்கள் உட்பட) தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.    பள்ளி மாணவ/மாண வி யர்களில் மாணவர்கள் 5,14,798 பேர்,  மாணவியர் 5,08,852  பேர் ஆவர். மாணவிகளை விட 5,946  மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர்.    பள்ளி மாணவர்களை தவிர 48,573 தனித்தேர்வர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.  சென்னை மாநகரில் 574 பள்ளிகளிலிருந்து மொத்தம் 53,168 மாணவ/மாணவியர்கள் 209  தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர்.   இவர்களில் 25,795  மாணவர்கள் மற்றும் 27,373  மாணவிகள் உள்ளடங்குவர்.  புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 48 தேர்வு மையங்களில், 298  பள்ளிகளைச் சார்ந்த 17,041  மாணவ/மாணவியர் தேர்வெழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் 8346  பேர் மற்றும் மாணவியர் 8695  பேரும் ஆ

வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்கள்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்குவதற்காக 3 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்குமாறு பொதுமக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதையடுத்து வண்ண வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக வழங்குவதற்காக சென்னை மாவட்டத்தில் 3 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடசென்னை வாக்காளர்களுக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திலும், மத்திய சென்னை பகுதி வாக்காளர்களுக்கு மண்டலம்-8, சென்னை மாநகராட்சி அலுவலகம், பழைய கதவு எண்.12பி, புதிய கதவு எண் 36பி, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர் மற்றும் தென்சென்னை வாக்காளர்களுக்கு மண்டலம்-13, சென்னை மாநகராட்சி அலுவலகம், கதவு எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, சென்னையில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இவை வழங்கப்படும். பொதுமக்கள் ரூ.25 செலுத்தி 001டி என

ரகசிய கேமராவை தெரிந்து கொள்ள....

ரகசிய கேமராவை தெரிந்து கொள்ள..... பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.... முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்.... இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.... ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.... இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்..

பி.எப் வரி ரத்து

Image
திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு நிதியமைச்சர் அருண் ஜேட்லி.  பி.எஃப். தொகை எடுப்பில் 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அருண் ஜேட்லி செவ்வாயன்று அறிவித்தார். 2016-17-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, ஏப்ரல் 1, 2016-க்குப் பிறகான பி.எஃப். பிடித்தத் தொகையில் எடுப்பின் போது 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தொழிற்சங்கங்கள் மற்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். சார்பு தொழிற்சங்கம் இந்த வரிவிதிப்பை இரட்டை வரிவிதிப்பு என்று கடுமையாக சாடியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அருண் ஜேட்லி, “இத்திட்டம் குறித்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் மத்திய அரசு பி.எஃப். வரிவிதிப்புத் திட்டத்தை ஆய்வு செய்ய விரும்புகிறது, எனவே இந்த வரிவிதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுகிறது” என்றார். முன்னதாக இந்தத் திட்டம் குறித்து பல குழப்பமான அறிவிப்புகள் வெளியாகின, பி.எஃப். தொகையின் மீ

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்:

Image
விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன் விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே… ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்:  விஜயசங்கர் ராமச்சந்திரன்    விஜயசங்கர் ராமச்சந்திரன் இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு என்று தெரிந்துகொண்டதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்றக் ‘கனவான்களுக்கு’ என் நன்றி. ஊடங்கள் அவர்களுடைய பிரைம் டைமில் ஜேஎன்யூவிற்கு இடம் கொடுத்தனர், ஜேஎன்யூவை அவதூறு செய்வதற்காக மட்டுமே. எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. குறிப்பாக ஏபிவிபி மீது வெறுப்பு இல்லை. ஏனெனில், ஜேஎன்யூவில் இருக்கும் ஏபிவிபி அம