கணிணி அறிவோம் - பகுதி 4
கணிணி அறிவோம் - பகுதி 4 CLICK HERE FOR PART 3,2&1 பரிமாற்றம்: நான்கு *தலைப்பு: Antivirus usage* வணக்கம். Image courtesy : quoara.com சென்ற பரிமாற்றத்தில் app management குறித்துப் பேசியிருந்தோம். சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம். என் மொபைலும், சிஸ்டமும் சிறந்த முறையில் app management செய்துவிட்ட பின்னரும் தொல்லைகள் தருகிறதே, அதற்கான காரணம் என்ன என யோசித்தால் நாம் இத்தனை நாட்களாக என்ன ஏதென்றே தெரியாமல் பயன்படுத்தி வரும் பிம்ப வார்த்தை 'Virus' தான் அது. பிம்பம்: கணினியாக இருந்தால் நாம் pen drive insert செய்தாலே கணினி பாழாகிவிடும், வைரஸ் வந்துவிடும் என்றும், மொபைலாக இருந்தால் Bluetooth on செய்தாலோ அல்லது பிறரிடமிருந்து Bluetooth வழியாக image/audio/video send or receive செய்தாலோ நம் மொபைலுக்கு வைரஸ் வந்துவிடும் என அதைச் செய்யாமலேயே முடிந்தவரை தவிர்த்துவிடுவோம். உண்மை நிலை: மேற்சொன்னவாறெல்லாம் கிடையாது. நீங்கள் கேள்விப்பட்டவை 1990களில் உண்மையாக இருந்தது. இன்னும் பல பேர் அதை உண்மையென்று நம்பிக்கொண்டிர