MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 23.4.18

*🔥  T  N  P  T  F  🔥*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 சித்திரை 10 ♝ 23•04•2018*

🔥
🛡தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கு தத்கல் முறையில்  இன்றும், நாளையும்  அந்தந்த DIET-ல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

🔥
🛡மகப்பேறு விடுப்புகாலத்தை பணிக்காலமாகதான் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

🔥
🛡தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றிய துலுக்கவிடுதி நடுநிலைப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம், பெற்றோருக்கு ரூ 1000 புதிய திட்டம் - நாளிதழ் செய்தி

🔥
🛡பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - பகுதிநேர ஆசிரியர்கள் கவலை! மாற்றுப்பணி வழங்கி முழு ஊதியம் வழங்க கோரிக்கை.- நாளிதழ் செய்தி

🔥
🛡"புதிய பாடத்திட்டத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன"  என  அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில்  தெரிவித்துள்ளார்.

🔥
🛡தமிழக அரசின் இணையதளம் " www.tn.gov.in" சர்வர் பிரச்னையால் முடங்கியுள்ளது என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🔥
🛡நிர்மலாதேவி விவகாரத்தில்  நீளும் விசாரணை.  உயர்கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம் - நாளிதழ் செய்தி

🔥
🛡மாணவர் எண்ணிக்கை குறைவால் எந்த பள்ளியும் மூடப்படாது - கல்வி  அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

🔥
🛡சென்னையில்  இன்று முதல்  இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.

🔥
🛡தனியார் பள்ளி கட்டணம் -  அரசு நிர்ணயம் >
KGs    - 3750
I-V       - 4550
VI-VIII - 5500
IX-X     - 6300

🔥
🛡 கிருஷ்ணகிரி அருகே மோட்டூரில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த அஞ்சலா வீட்டில்
ஏ.சி. வெடித்து இறந்தார்.


செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்..

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026