மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள்
மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். மத்திய பொது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: வரி விவரங்கள்: * வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை. * புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15% வரை அதிகரிப்பு * 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை. வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும். * 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு. * வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது. வரிச் சலுகைகள்: * ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட