Posts

Showing posts from December, 2016

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017

🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹 பிறக்கும் இனிய புத்தாண்டு,2017 நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!! 🎂Happy New Year 2017🎂 🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼 நட்புடன் R.R

NEW YEAR SHOPPING -

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தம்

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தங்கள்... 🏏நம்ம நாட்ல கிரிக்கெட்க்கு தர்ற முக்கியத்துவத்தை வேறு எந்த விளையாட்டுக்கும் தருவதில்லை என்ற புகார் பரவலாக இருக்கத்தான் செய்கிறது.. 🏏விளம்பர நிறுவனங்களின் வியாபார தந்திரத்தாலும் நாம் பழக்கபடுத்தப் பட்டு இருந்தாலும் , உண்மையாகவே நமக்கு மிக பிடித்த விளையாட்டு கிரிக்கெட்தானே. 🏏அதற்காக மற்ற விளையாட்டுகள் குறைந்தது என்று சொல்லவில்லை, கிரிக்கெட் மனங்கவர்ந்த விளையாட்டு என்றே சொல்ல வருகிறேன்.. 🏏அசாரூதின் , கங்குலி என கிரிக்கெட் ஜாம்பவான்களை படிப்பில் தொடர்பு படுத்தி வளர்ந்தேன், ஒவ்வொரு தேர்விலும் பேனா தான் எனது பேட், கேள்வித்தாள் தான் எதிரணி பந்துவீச்சு , வினாக்களை விடைகளாக அடித்து நொறுக்கி 50, 100, 200 என சதம் கண்டே மகிழ்வேன்... இது நமது மாணவர்களை படிப்பில் முன்னேற உதவும் டெக்னிக்... 🏏எதற்காக இந்த கிரிக்கெட் புராணம் இப்போது என நீங்கள் கேட்பது புரிகிறது.. கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 3 சதங்கள் தான் காரணம்.. 🏏சதம் அடிப்பதே கடினமான சூழலில் முச்சதம் அடித்து இந்திய பேட்டிங் திறமையை உலகறிய செய்துள்ளார்.. 🏏இன்னும் எத்தனையோ இளைஞர

புதிய தலைமுறை செய்திகள் 28.12.16

புதிய தலைமுறை நாளிதழ் 28.12.16 click here to download PDF

புதிய தலைமுறை இன்று 26.12.16

புதிய தலைமுறை நாளிதழ் இன்று 26.12.16 click here 1.7.mb PDF file

தலையங்கம் - ஆரம்பம் 25.12.2016

தலையங்கம் - ஆரம்பம்... 👉🏼என் நெஞ்சில் குடியிருக்கும் வாசக பெருமக்களே... 👉🏼பேச்சின் ஆரம்பம் தான் நம் அஸ்திவாரம் என்பதை நன்குணர்ந்தே மேற்சொன்ன அடைமொழியை குறிப்பிட்டேன்... 👉🏼இந்த tnsocialpedia வலைப்பதிவுகள் கடந்த இரு வருடமாக(2015முதல்) செயல்பட்டு வருகிறது , நல் ஆதரவும் கிடைத்துள்ளது... 👉🏼பல தரப்பட்ட பயனுள்ள செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை என்றுமே நினைவில் கொள்வேன், சில நாட்களாக என்னுள் ஒரு சிந்தனை... என் மனதில் தோன்றும் சமூக ஆக்கத்தை எழுத்தாக மாற்றி வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று., அதன் விளைவே இனி இந்த தலையங்க பகுதி... 👉🏼வழக்கம்போல பயனுள்ள செய்திகளோடு எனது எண்ண சிதறல்களும் வெளிவரும்... சுவையான உணவில் உப்பு மிக அவசியமானது, அதேபோன்றே தலையங்கமும் அமையும்..கரித்து விடாது கருத்தாக அமையும் ஆதலால்.. 👉🏼தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... டிசம்பர் 25 இறைமகனார் கிறித்து பிறந்தது போல நமது வலைப்பூவில் இன்று தலையங்கம் பிறந்துள்ளது... 👉🏼நிச்சயம் குழந்தை சான்றோனாக மாறும் சமூக மாற்றத்தை காணும் என்பதில் உறுதியோடு ஆரம

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

🎂🙏🏼🎄🙏🏼🎄🎂🌲 இறைவன் பூமிக்கு அனுப்பி வைத்த தெய்விக இறை மகன் ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை "கிறிஸ்துமஸ் விழா"வாக கொண்டாடி கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வ 💐வாழ்த்துக்கள்💐 👉🏼தாயை கனம் பண்ணுபவனுக்கு என் பரலோக ( 24 மணி நேர மகிழ்ச்சி ) ராஜ்யத்தை அருளுவேன்... ஆயுளையே கூட்டிக் கொடுப்பேன் என்று சொல்லி தாயின் உறவை மகிமைப்படுத்தி ஞானம் தந்த ஏசு பிரானுக்கு நன்றி கூறி  அருள் பெறுவோம்... 🎄🎂🌲🎂🎄🎂🌲 For more http://tnsocialpedia.blogspot.com

புதிய தலைமுறை இன்று -23.12.16

புதிய தலைமுறை நாளிதழ் PDF 23.12.16 click here to download

தமிழகத்தில் கணிணி கல்வி தேவை- பொதுமக்கள் கருத்து

கேள்விக்குறியாகும் கணிணி கல்வி... 👉🏼தமிழகத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என பல நிலைகளில் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் முறையே நியமிக்கப்பட்டு வருகின்றனர் 👉🏼ஆனால் அனைத்துவகை பள்ளிகளுக்கும் கணிணி வழங்கப்பட்டுள்ள நிலையில் கணிணி கற்பிக்க முறையான ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்ற சூழல் உள்ளது... 👉🏼இதனால் கணிணி பாடத்தில் மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது... 👉🏼நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆன்ட்ராய்ட் பயன்பாடு என நம் அன்றாட சாதாரண பயன்பாட்டிற்கே கணிணி அடிப்படை அறிவு தேவைப்படும் நிலையில் பள்ளி அளவிலே கணிணி பற்றிய போதிய கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மிகவும் அவசியமாகிறது... 👉🏼ஆனால் பள்ளிகளில் போதிய கணிணி ஆசிரியர்கள் நியமிக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப் படுகிறது... 👉🏼இன்று  demonetization மக்களை மிகவும் பாதிக்கிறது என்றால் அதற்கு மக்களிடையே காணப்படும் கணிணி அறிவின்மையே காரணம் 👉🏼எனவே புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனடியாக பள்ளிகளில் கணிணி கல்வி ஏற்படுத்திட வேண்டும், வரப்போகும் முதுகலை ஆசிரி

வாட்ஸ் அப் செய்திகள் 22.12.16, 10pm

*🔊இரவு செய்திகள்@22/12/16🔊* 🔴வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளது. 8 பேர் கொண்ட குழு தமிழகம் வரவுள்ளதாக மத்திய உள்துறை தகவல் தெரிவித்துள்ளது. 🔴சேலம் மாவட்டம் செக்கானூர் பகுதி கிராம மக்களுக்கு வருவாய்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் 7ம் எண் மதகு உடைந்துள்ளது. 🔴காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் பணி நீக்கம் செய்யப்பட்ட  ராமமோகன ராவ் 🔴பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார். 🔴பிரதமர் மோடி, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் கூற வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார். 🔴சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரெய்ட் நடந்தது.பல போலி வங்கி கணக்குகள் மூலம் ₹150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 🔴ஆந்திர மாநிலம் சித்தூரில் த

புதிய தலைமுறை செய்தி 18.12.16 PDF 1.6MB

PT INDRU click here todownload PDF

ப்ளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2016

*மார்ச் 2, பிளஸ் 2, மார்ச் 8, பத்தாம் வகுப்பு தேர்வு* பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குவதாக தமிழக பள்ளி கல்வித்தேர்வு துறை அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 19 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *தேர்வு அட்டவணை:* 02.03.17- மொழித்தாள் - 1 03.03.17 - மொழித்தாள் 2 06.03.17- ஆங்கிலம் 1 தாள் 07.03.17 - ஆங்கிலம் 2ம் தாள் 10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல் 13.03.17 - வேதியியல், கணக்கு பதிவியியல் 17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ் 21.03.17- இயற்பியல், பொருளாதாரம் 24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங் 27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் 31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல் அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8 ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *பத்தாம் வகுப்பு தே

Adobe photo shop user manual PDF

photo shop PDF click here

புதிய தலைமுறை நாளிதழ் PDF 14.12.16

PT TODAY PDF click here to download

2TERM QUESTIONS 1TO5th STD

SA 2TERM QUESTION PAPERS(1to5thstd) click here to downlaod

வர்தா புயல் கரையை கடக்கிறது எச்சரிக்கை

*சென்னையில் தற்போது வர்தா புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது : 140 கி.மீ. வேகத்தில் காற்று* சென்னை: சென்னையில் தற்போது வர்தா புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது. மேலும் 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வட கிழக்கே 50 கி.மீ. தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணிக்குள் பழவேற்காடு - கும்மிடிபூண்டி அருகே வர்தா புயல் கரையை கடக்கும் என அவர் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடந்த பிறகு மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரை காற்று வீசுக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். வர்தா புயல் 13 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது. இதேபோல் புயல் கரையை கடந்த பின்னர் தெற்கு திசையில் இருந்து பலத்த காற்றும், கன மழையும் தொடரும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார். புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்க

வர்தா புயல் தீவிரம்

♈🇮🇳 பலத்த சூறாவளி காற்றினால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்கவும். புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது. காவல்துறை பணியில் உள்ளது. மாநகராட்சி ஊழியர்களும் பணியில் உள்ளனர்.முடிந்த வரை முயற்சி செய்கின்றனர்.

வர்தா புயல் - உதவி எண்கள்

🅱REAKING வர்தா புயல் - உதவி எண்கள் அறிவிப்பு  044- 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694,  044-2536 7823, 2538 7570

கடலோர மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சென்னையிலிருந்து 140கி.மீ தொலைவில் "வர்த்தா" புயல்! 4 மாத மழை இன்று ஒரே நாளில் பெய்யும். கும்மிடிபூண்டி - சென்னை இடையே மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு! கரையை கடந்த பின் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதி தீவிர புயலால் தான் தனுஷ்கோடியை கடல் உள்வாங்கியது. எனவே புயலின் தீவிரத்தை உணரவேண்டும். கடந்த 1994 வருட புயலின் போது மெரினா காமராஜர் சாலை வரை நீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாத பேரழிவு பட்டியலில் இந்த புயலும் சேருமா? என இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும்.

புதிய தலைமுறை நாளிதழ் 12.12.16 (1.5.MB)

புதிய தலைமுறை நாளிதழ் 12.12.16 (1.5.MB) PUTHIYA THALAIMURAI DEC12,2016-1.5MB PDF

வர்தா புயல் - முன்னெச்சரிக்கை

11.12.2016 - மாலை 4.30 மணியளவில் பதிவிடப்பட்டது. வர்தா புயல் அப்டேட்: தமிழ்நாடு வெதர்மேனின் சிறப்புப் பகிர்வு ===================================== தகவல் சுருக்கம்: ----------------------------------------------------- வர்தா புயல் மேலும் தீவிரமடைந்து நாளை சென்னையிலேயே அல்லது சென்னை அருகே கரையைக் கடக்கும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையைக் கடக்கும். 1994-ம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வளவு சீற்றத்துடன் புயல் கரையை கடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும். ================================== விரிவான் தகவல்: வர்தா புயலானது சென்னை அருகே அல்லது சென்னையிலேயே கரையை கடக்கும்போது சென்னையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்றுவீச வாய்ப்புள்ளது. இதுமாதிரியான நிகழ்வு கடைசியாக கடந்த 1994-ம் ஆண்டு நிகழ்ந்தது. 2010-ல் சென்னையில் கரையை கடந்த ஜல் புயலும், 2012-ல் மகாபலிபுரத்தில் கரையைக் கடந்த நிலம் புயலும் எதிர்பார்த்ததைவிட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தின. இதனால், புயல் கரையை கடக்க

வருகிறது வர்தா புயல்

சென்னை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நாளை மாலை வார்தா புயல் அதிவேகமாக சென்னை-ஆந்திரா இடையே கரையை கடக்கும். இன்று மாலை முதல் காற்று மிக வேகமாக வீசும் என்பதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படலாம். எனவே அத்யாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் download PDF

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் click here PDF

SA II TERM EXAM MODEL QUESTIONS VI STD

TAMIL VI STD 2TERM ENGLISH VI STD 2TERM SCIENCE VI STD 2TERM SOCIAL VI STD 2TERM

மகாகவி பாரதி அவதரித்த தினம் இன்று டிசம்பர் 11

 பொய்யோ?மெய்யோ? நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ? வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

R.L LIST 2017

*வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017*  08.1.2017 ஞாயிறு –வைகுண்ட ஏகாதேசி 09.01.2017-திங்கள்-கர்வீன் முகைதீன் அப்துல் காதர் 11.01.2017-புதன்- ஆருத்ரா தரிசனம் 13.01.2017-வெள்ளி-போகி 09.02.2017-வியாழன்-தைப்பூசம் 24.02.201-வெள்ளி-மகா சிவராத்திரி 01.03.2017-புதன்-சாம்பல் புதன் 04.03.2017-சனி-வைகுண்டர் ஆராதனை 11.03.2017-சனி-மாசிமகம் 13.04.2017-வியாழன்-பெரிய வியாழன் 14.04.2017-வெள்ளி-அம்பேத்கார் பிறந்த நாள் 16.04.2017-ஞாயிறு-ஈஸ்டர் 25.04.2017-செவ்வாய்-ஷபே மிராஜ் 10.05.2017-புதன்-சித்ரா பவுர்ணமி / புத்தர் ஜெயந்தி 12.05.2017 –வெள்ளி-ஷபே பாரத் 28.05.217-ஞாயிறு- ரம்ஜான் நோன்பு முதல் நாள் 22.06.2017- வியாழன்- ஷபே காதர் 03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு 04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம் 07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா 08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம் 25.08.217-வெள்ளி-சாம உபகர்மா 31-08.2017-வியாழன்-அர்ஃபா 04.09.2017-திங்கள்-ஓணம் 22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு 18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு 02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள் 04.11.2017-ச

மனித உரிமைகள் தினம் இன்று

💥டிசம்பர் 10-சர்வதேச மனித உரிமைகள் தினம்! சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம். மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐக்கிய நாடுகள் 'மனித உரிமை ஆணைக் குழு' உதயமானது. ஐம்பத்து மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக 'சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.  டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது. எனவே இந்த நாளை 1950-ம் ஆ

மக்க கலங்குதப்பா....

மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா மடிப்புடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா என்னப் பெத்த மக ராசா… ஆஏ…… ய் ஏய் எம்புட்டு தூறம்யா போவ ஏன்யா சவ்வா இழுக்குற சியான் -நாட்ட கட்டி  ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ள ம்… ஆமக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா  நாட்டு மக்க தவிக்கிதப்பா என்ன பெத்த மகராசா நீ என்ன பெத்த மகராசா நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா ஆரோசாப்பூ மாலப்போட்டு ரோசாப்பூ மாலப்போட்டு  ராசா நீ அமர்ந்திருக்க ராசா நீ அமர்ந்திருக்க அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா ஆபார்த்தாலே பச்சமுகம்…… ம்…… பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்  பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம் பச்ச முகத்தழகா என் ராசா  பச்ச முகத்தழகா என் ராசா நீங்க பர

TNPTF இரங்கல் செய்தி

*மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின்  மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அஞ்சலி*     இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் பேரன்பையும், ஆதரவையும் பெற்றவரும்,   தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சி - முன்னேற்றத்திற்காகவும் அரும்பணியாற்றியவரும்,   தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக விளங்கியவருமான மரியாதைக்குரிய *தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா* அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.     தமிழக மக்களால் ' *அம்மா* என்று அன்புடன் அழைக்கப்பட்ட மரியாதைக்குரிய *முதல்வர் செல்வி. ஜெயலலிதா* அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும் வலிமைமிக்க - துணிவுமிக்க தலைவராகவும் விளங்கிய சாதனைப் பெண்மணி ஆவார்.     அவர் தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய மதிப்புமிக்க தலைவர். அவரது நினைவு தமிழ்மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்!      மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன்,  அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் *தமிழ்நாடு ஆரம்பப்பள்ள

ஜெ அம்மா இரங்கல் கவிதை

போய் வா நதியலையே.. கள்ளமில்லை கபடமில்லை-நெஞ்சில் பயமில்லை! சொன்னால் சொன்னதுதான்.. சொன்ன வார்த்தையில் மாற்றமில்லை.. முன் வைத்த காலைப் பின் வைத்ததுமில்லை.. எவர் வீட்டு வாசலிலும் இறைஞ்சி நின்றதில்லை.. எவருக்காகவும் எதற்காகவும் எங்கேயும் காத்திருந்ததுமில்லை.. ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.. எனும் வார்த்தைகள் இனி வரப் போவதுமில்லை.. போ.. போய் வா நதியலையே. இனி.. ஒவ்வொரு செயலின் பொழுதும் நிச்சயம் ஒரு கேள்வி வரும்.. அந்த அம்மா மட்டும் இப்ப இருந்துதுன்னா? அந்தக் கேள்விதான் உன் சாதனை.. அந்தக் கேள்விதான் உன் வாழ்க்கை.. போ.. போய் வா நதியலையே.. ஒற்றை விரல் சொடுக்கி எவர் இனி ஆட்சி செய்வர்? இனி எவர் வந்து நிற்பர் அந்த வெள்ளைப் பால்கனியில்? நீ சரித்திரம்தான்.. போ.. இனியாகிலும் அமைதியாய்.. உன்னைச் சுற்றிலும் இனி.. கயவர்கள் இல்லை.. வேடதாரிகள் இல்லை.. கபட நாடகங்கள் இல்லை.. வழக்குகள் இல்லை.. நிம்மதியாய் கண்ணுறங்கு வங்கக் கடலோரமாய்.. போ.. போய் வா நதியலையே..

ஜெ அம்மாவிற்கு இதய அஞ்சலி-கண்ணீரில் இந்த பதிவு

😢TNSOCIALPEDIA😢 http://tnsocialpedia.blogspot.com 😢😢😢😢😢😢😢😢 *😢தமிழக முதலமைச்சருக்கு இதய       அஞ்சலி* 😢தமிழக முதல்வர் இறப்பு , நம் மக்களுக்கு மாபெரும் இழப்பு , அவரை போல் துணிச்சலான பெண்மணியை காண்பது மிகவும் அரிது, அண்டை மாநிலம் பார்த்து வியந்த முதல்வர்,காவேரி நீர்க்கு துணிச்சலான முடிவு எடுத்தவர், ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் சரி சமமாக நின்று சாதனை பெண்மணி இவர், இவரின் இடத்தை யாராலும் நிரப்புவது கடினமே! *😢தமிழக முதல்வர் மரணம் அதனால் இன்று ஒரு நாள் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள்,  தொழிற்சாலைகள், இன்று பொது விடுமுறை* *😢ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 15 மாநில முதல்வர்கள் வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வர உள்ளனர்.* http://tnsocialpedia.blogspot.com 😢பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் முதல்வர் உடல் வைக்கப்பட்டுள்ளது 😢 போயஸ் கார்டனில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற வாய்ப்பு 😢தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலி

தமிழக முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம்

*☦🅾ஜெ.வை எதிர்த்து அரசியல்!: ஓ.பி.எஸ்.ஸின் ஆச்சரியப்பட வைக்கும் அரசியல் பயணம்*🔴🔵 சென்னை: ஜெயலலிதா மறைவை அடுத்து முதல்வராக பதவி ஏற்றுள்ளார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இவர் முதல்வராக பதவி வகிப்பது இது மூன்றாவது முறையாகும். ஓ.பி. எஸ்ஸின் வாழ்க்கை, ஏற்ற இறக்கம் கொண்டது என்றாலும், அபாரமான திருப்புமுனைகளைக் கொண்டது. ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது தந்தை ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். இவருக்கு நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகள். தந்தை ஓட்டக்காரத்தேவருக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது தான் தொழில். ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு 'பேச்சிமுத்து' என பெயரிட்டார். பிறகு பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது. பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் முடித்த பன்னீர் செல்வம். பின்னர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். பன்னீர்செல்வத்தின் மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்று

ஜெ அம்மாவின் வாழ்க்கை குறிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பிறந்த தேதி  :  24.2.1948 இடம்                 :  மைசூர் கல்வி நிலை :  மெட்ரிகுலேஷன் குடும்பம்          :  திருமணமாகாதவர் தொழில்           : விவசாயம் விருதுகளும் சிறப்புப் பட்டங்களும்: 1972 ஆம் ஆண்டு தமிழக அரசினால் “கலைமாமணி” விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” (டி.லிட்.) பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு ஆசிய சபை விருதான “பத்தாண்டின் சிறந்த அரசியல் பெண்மணி” என்ற பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் House of Lords அழைப்பு விடுத்தது.

மறைந்தார் ஜெ-கண்ணீர் அஞ்சலி

மறைந்தார் ஜெ-கண்ணீர் அஞ்சலி *நேற்று இரவு 11:30 மணிக்கு முதல்வர் உயிரிழந்தார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.* *செவ்வாய், புதன், வியாழன்3 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு* *பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலங்களுக்கு அரசு விடுமுறை* *அதிமுக சட்டமன்ற குழுத்தலைவர்ராக ஒ.பன்னீர்செல்வம் தேர்வு* *தமிழக முதல்வரானார் ஓ.பி.எஸ்* *அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் கவர்னரை சந்திக்க புறப்பட்டனர்* *தமிழக முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும்*

முதல்வர் வாழ்க அம்மா வாழ்க

ஓரளவு மகிழ்ச்சியான செய்தி : செல்வி ஜெ. ஜெயலலிதா குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளியிட்ட தகவல்கள் தவறு. அவர் இன்னமும் தீவிர சிகிச்சையில் தான் உள்ளார். - அப்போலோ நிர்வாகம் அறிவிப்பு #அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடி மீண்டும் ஏற்றம்.

தொடர்ந்து சிகிச்சை - முதல்வர் மறையவில்லை

முதல்வர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.அப்பலோ மறுப்பு