MENU

Show more

TNPTF இரங்கல் செய்தி

*மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின்  மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அஞ்சலி*  

  இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் பேரன்பையும், ஆதரவையும் பெற்றவரும்,

  தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சி - முன்னேற்றத்திற்காகவும் அரும்பணியாற்றியவரும்,

  தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக விளங்கியவருமான மரியாதைக்குரிய *தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா* அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
    தமிழக மக்களால் ' *அம்மா* என்று அன்புடன் அழைக்கப்பட்ட மரியாதைக்குரிய *முதல்வர் செல்வி. ஜெயலலிதா* அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும் வலிமைமிக்க - துணிவுமிக்க தலைவராகவும் விளங்கிய சாதனைப் பெண்மணி ஆவார்.

    அவர் தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய மதிப்புமிக்க தலைவர். அவரது நினைவு தமிழ்மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்!

     மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன்,  அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்* சார்பில் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
         இவண்:
ச.மோசஸ்,
மாநிலத் தலைவர்,
செ. பாலச்சந்தர்,
பொதுச்செயலாளர்,
ச.ஜீவானந்தம்,
மாநிலப் பொருளாளர்,
TNPTF.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28