Posts

Showing posts from November, 2015

அரசு ஊழியர்கள் நிதி உதவி

வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - அரசு ஊழியர்கள் முடிவு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்று தலைமை செயலாளர்ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவு செயலாளர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில், “தலைமை செயலகம் முதல் அனைத்து அரசு துறைகளிலும்பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர்களும், தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை “வெள்ள நிவாரண நிதி”யாக நவம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ள சம்மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார். அதேபோன்று அரசு அலுவலக ஒன்றியம் சார்பில் மாநில தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் ஜெயக்கொடி ஆகியோரும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசுக்குகடிதம் எழுதியுள்ளனர்.

தொடர் மழை விடுமுறை

☔☔☔☔☔☔☔ சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர் மாவட்டங்களுக்கு நவம்பர் 22-ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு ☔☔☔☔☔☔☔

புயல் இல்லை

தமிழகத்தில் தற்போது புயலுக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. அத்துடன், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த சில தினங்களாக வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை தொடங்கி மறுநாள் காலை வரை இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப் படையினர் களமிறங்கியதால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் ஞாயிறன்று 22ம் தேதி மிகப்பெரிய புயல் தமிழகத்தைத் தாக்கும் என்று பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரவி வரவே, மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இவர்களுக்கு நிம்மதி தரும் தகவல் ஒன்றினை கூறியுள்ளார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன். புயல் தாக்

மழை உதவிக்கு....

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இயற்கை பேரிடர் பாதிப்பு உதவிக்கு 24 மணி நேர உதவி எண்களை அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் மழை, புயல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிப்பு ஏற்பட்டால், உதவி பெறுவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. மாவட்டங்களுக்கு 1077; மின்வயர் அறுந்தால் 1913 குடிநீர் வாரிய புகார் தெரிவிக்க 044-45674567.

sastra uni B.Ed2 015

SASTRA UNIVERSITY DIRECTORATE OF DISTANCE EDUCATION Admission to B.Ed Programme (2 years) For Jan 2016-Dec 2017 >Medium- The Medium of Instruction for B.Ed Programme will be in English >Programme Fee- Rs.63,000 to be paid in one instalment for the entire two year B.Ed Programme >Application Cost- Rs.600 on Payment or Rs.650 by post >Selection Procedure- Selection will be based on Merit Basis >Last Date for receipt of Application forms is 30.11.2015 till 5.00 pm >Application & Prospectus avail in www.sastra.edu

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். அதோடு இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய இயலும். எனவே, இதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை www.tndge.in எ

VAO EXAM 2015

VAO EXAM 2015 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.12.2015 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கை எண். 19/2015 விளம்பர எண். 425 தேதி: 12.11.2015 பதவிக் குறியீட்டு எண்: 2015 பணி குறியீட்டு எண்: 050 பதவி: கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள்: 813 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 கல்வித் தகுதி: 12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும். கட்டணம் விவரம்: நிரந்தரப்பதிவுக் கட்டணம்: ரூ.50. தேர்வுக் கட்டணம்: ரூ.75. வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 16.12.2015 நிரந்தர பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின

தத்தளிக்கிறது தமிழகம்

தமிழகம் : ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலான கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த திங்கட்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் உண்டானது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்ததால் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், பெங்களூரிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக நிலை கொண்டிருந்தது. அது தற்போது வங்கக்கடலுக்கு இடம் பெயர்ந்து மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. அதேபோல, வங்கக்கடலில் அந்தமான் அர

கனமழை எதிரொலி

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (14-11-2015) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.☔☔☔☔ வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து, தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இது நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை காரணமாக, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.☔☔☔☔☔☔

நேயர்களுக்கு வணக்கம்...

நேயர்களுக்கு வணக்கம்... சில தவிர்க்க இயலாத காரணங்களினால் உங்கள் TNSOCIALPEDIA தகவல் சேவை வெளியிட இயலாமைக்கு வருத்தங்கள்... தொடர்ந்து உங்கள் பேராதரவை நல்கி இவ்வலைப்பூவை முதன்மை பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி இப்படிக்கு அரமேஷ் ஆசிரியர் TNSOCIALPEDIA

TSP DAILY NEWS 5.11.15

🙏TSP NEWS🙏 💐Nov 5,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 🌻பருவமழை பாதிப்பு நிவாரண, இழப்பீடு உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு www.tnsocialpedia.blogspot.com 🌻டெங்கு தடுப்பு நடவடிக்கை கோரி போராட்டம்: தமிழிசை உட்பட பாஜகவினர் 150 பேர் கைது 🌻சசிபெருமாள் மரணம்: நீதி விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு 🌻மழைக்காலம் முடியும் வரை விடுமுறை கிடையாது: அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 'திடீர்' உத்தரவு 🌻உயர் நீதிமன்றப் பாதுகாப்பு குறித்து தமிழக அரசின் மனு தள்ளுபடி: கருணாநிதி கருத்து 🌻 மும்பை கடற்கரை அருகே ஹெலிகாப்டர் விபத்து: பைலட்கள் மாயம்  🌻ஷாருக்கான் விருதை திருப்பித்தர வேண்டும்: யோகா குரு பாபா ராம்தேவ் 🌻சென்னையில் மேற்கு வங்க முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன் மீது தாக்குதல்  🌻மும்பையில் போலீஸ் ஸ்டேசனில் இளம்ஜோடி மீது தாக்குதல்  🌻விவாதத்திற்கு மத்திய அரசு தயார்: வெங்கையா நாயுடு  🌻தீபாவளி பண்டிகையை முன

TSP DAILY NEWS 4.11.15

🙏TSP NEWS🙏 💐Nov 4, 2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻தங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.2,684 🌻 கடந்த ஓராண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு 6 ஆயிரம் புதிய கிளைகள்  '🌻கோவன் மீது தே.பா., சட்டம் பாயாது': உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி 🌻 தங்க பத்திரத்துக்கான விலை நிர்ணயம்   🌻பீஹாரில் 2 நக்சலைட்டுகள் கைது   '🌻ஹூண்டாய்' இயக்குனர் மாற்றம்   '🌻வாட்ஸ் ஆப்' மூலம் தேர்வு: போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்' 🌻சோட்டா ராஜன் கூட்டாளி கைது 🌻மதச்சார்பற்றவர் மோடி: காஷ்மீர் முதல்வர்: பிரதமர் நரேந்திர மோடி சகிப்புத்தன்ளை கொண்டவர்; மதச்சார்பற்றவர்;. www.tnsocialpedia.blogspot.com 🌻குரல்மாதிரியை கொடுக்க இந்திராணி ஒப்புதல் 🌻மோடி அரசுக்கு எதிராக சர்வதேச சதி 🌻தங்கபாலுவுக்கு இளங்கோவன் சவால் 🌻நெல்லை பள்ளிளுக்கு இன்று விடுமுறை சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻தந்தத்திற்காக வழக்கு ; புத்தகம் எழுதி சிக்கலில் மாட்டிய ஜெயராம்..! '🌻வேதாளம்' யு.கே.வில் 58 இடங்களில் ரிலீஸ் 🌻ஜி.வி.பிரகாஷ் வரை இறங்கி

TSP DAILY NEWS 3.11.15

🙏TSP NEWS🙏 💐Nov 3, 2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் ☔வைகோவின் மக்கள் நலக் கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு அழைப்பு ☔எல்லை அருகே ஆர்ப்பாட்டம்: நேபாள போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் பலி ☔எங்களுக்கு சகிப்புத்தன்மையை கற்றுத்தர காங்கிரஸுக்கு தகுதி இல்லை: மோடி ஆவேசம் ☔வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு ☔வரி ஏய்ப்பு செய்வது இனி கடினமாகிவிடும்: ஜேட்லி நம்பிக்கை www.tnsocialpedia.blogspot.com ☔இந்தியாவில் ஐ.எஸ். தாக்கத்தை தடுக்க மத்திய அரசின் மாதிரி திட்டம் தயார் ☔பிஹார் வாக்காளர்களைக் குழப்பியதா மாஞ்சி கட்சியின் தொலைபேசி சின்னம்? ☔சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய படை பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு www.tnsocialpedia.blogspot.com ☔பலியான ராணுவ வீரருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி: அகிலேஷ் யாதவ் ☔ பாடகர் கோவனை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி ☔ நெல்லைக்கு 'சுவிதா' ரயில்கள் இயக்கம்  ☔மாணவர்கள் கடத்தல் : மூவர் கைது: 3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ் ☔ மூன்று நாட்களுக்கு முன், எகிப்த

TSP DAILY NEWS 2.11.15

🙏TSP NEWS🙏 ☔Nov 2, 2015☔ www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் ☔தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் www.tnsocialpedia.blogspot.com ☔விரும்பிய உணவை உண்ணும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து www.tnsocialpedia.blogspot.com ☔இந்த ஆண்டில் அண்டை நாடுகளால் 650 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு: எல்லையை தாண்ட வேண்டாம் என எச்சரிக்கை ☔எதிர்கால விலையேற்றத்தை தவிர்க்க 3.5 லட்சம் டன் பருப்பை சேமிக்க மத்திய அரசு திட்டம் www.tnsocialpedia.blogspot.com ☔தேர்தலில் அதிமுக, திமுகவை வீழ்த்துவோம்: கும்பகோணத்தில் விஜயகாந்த் உறுதி ☔மக்கள் நல கூட்டு இயக்கத்தின் செயல் திட்ட அறிக்கை நாளை வெளியீடு: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் வைகோ தகவல் www.tnsocialpedia.blogspot.com  ☔காங்கிரஸ் தலைவர்களிடையே பதவிப் போட்டி: இளங்கோவன் குற்றச்சாட்டு ☔அதிமுக சார்பில் 15 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.15 லட்சம் நிதி ☔நாகையில் கனமழை எதிரொலி: அரசு குடியிருப்பு இடிந்து விழுந்தது ☔ ராகுல், அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்