Posts

Showing posts with the label நேயர்கள் படைப்பு

MENU

Show more

தேர்வு - வசன கவிதை...

Image
தேர்வு!!!                   தோழர் - மணிகண்ட பிரபு #துவக்க நிலையில் அடுத்த மாசம் இந்நேரம் தீபாவளி அப்பிடிங்கிற மோடிலேயே இருக்கும் அடுத்த மாசம் இந்நேரம் பரிட்சை அப்பிடீங்கிற பரபரப்பு. இருக்கிற காலண்டர்லயே சாமி படம் போட்ட காலண்டரை மனசுக்குள்ள மைண்ட் மேப்பா போட்டுக்குவோம்.அதைதான் துணி துவைக்கிற க்ளிப் வைத்து எடுத்துட்டு போவோம்.கொஞ்சம் வேப்பிலை சொருகி. எக்சாம் பேட் எடுத்திட்டு வருபவனை இளிச்சவாயன் மாதிரி பார்ப்போம். ஒன்றாவது,இரண்டாவதெல்லாம் சிலேட்டில் பரிட்சை எழுதின எங்களுக்கு மூன்றாவது பி க்ளாஸில் தான் பேப்பரில் பரிட்சை எழுதப் பழகினோம். முதல்முறையாய் ரூல்ட் பேப்பரில் பரிட்சை எழுதினது மறக்க முடியாதது.வீட்டு நாயை நீவிக்கொடுப்பது மாதிரி பேப்பரை சரியாக மடித்து நீவுவோம்.முதல் பக்கம் முடிந்தவுடன் கூகுள் மேப் இல்லாத காலத்தில் வழிதெரியாம முழிப்பது போல 2வது பக்கத்துக்கு பதிலா 3வது பக்கத்தில் எழுதிடுவோம்.இது அப்ப வரலாற்று பிழை மாதிரி எல்லாரும் டீச்சர்கிட்ட முறையிடுவாங்க.. இந்த வருசம் நீ பெயில் னு பக்கத்திலிருப்பவங்க கோரசா சொல்லுவாங்க.முதல...

பொங்கல் சிறப்பு கவிதை - கல்விசிறகுகள் ஆர்.கே

எண்ணாமல் இருந்த பேரும், ஓய்வையே மறந்த பேரும், உண்ணாமல் இருந்த பேரும், உறங்காமல் உழைத்த பேரும், கண்ணான கல்விதனை கற்றுத்தந்து காலத்தை வென்ற பேருமான ஆசிரிய நண்பர்களுக்கு, வணக்கம். வண்டெனப் பறந்து,      வாலிபர் உலகில் தொண்டு புரிந்திட்ட       தூயவனாம் தமிழ்மகனின் தலைநன்னாளாம், திங்கள் பன்னிரண்டு திகழும் ஆண்டில் ஓரெழுத்தால் உயர்ந்து நிற்கும்  தை முதல்நாள். இன்னனாளிலே . ....... புதுப்பானை புதியகோலம் புது மஞ்சள் புது காய்கள் புத்தரிசி இவைகொண்டு, தித்திக்கும் தீங்கரும்பின் துணையுடன்,புத்தாடை கட்டி, நன்னெறி வளர்த்து நற்பயன் செய்து உள்ளத்தால் பொய்யாது, உயர்நிலை நின்று, ஒழுக்கத்தால் பிறர்போற்றும் உயர்வாழ்க்கை வாழ்ந்து, சீர்பெற உழைத்து சிறப்புடன் வளர்ந்து, மலரினும் மென்மையாய், வானினும் தூய்மையாய், நிலையினிற் செம்மையாய், நினைவினிற் பசுமையாய், தொலைவழி போயினும் தோன்றிடும்  இன்பமாய்   கொண்டாடுவோம் இத்தைத் திருநாளை. கவலைகள் கழிந்து புன்னகைகள் புகுகின்ற, உழவர்களால் ஆன திருநாளாம், உழவர்களுக்கான திருநாளாம் இன்னன்னா...

பொங்கல் சிறப்பு கவிதை - கவிஞர் பஞ்சா

🌷🌷💐💐🌻🌻 தமிழுக்கு திருக்குறளாம்.. தமிழினத்திற்கு பொங்கல் திருநாளாம்.. தைத்திங்கள் பிறந்தவுடன் மகிழ்ச்சி கொண்டோமே.. தரணி முழுதும் தமிழர்களாகிய நாம் யாவருக்கும் வழி பிறக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஆனந்தம் கொள்வோமே.. வாசலிலே வண்ணக் கோலங்கள்.. வீடுதோறும் பொங்கல் செய்ய மண்பாண்டங்கள்.. பால் பொங்கும் பச்சை அரிசி பொங்கலை மஞ்சள் கிழங்குடனும் பன்னீர் கரும்புடனும் பல்வகை காய்கறிகளுடனும் புத்தாடை அணிந்து சூரியனுக்கு படைத்து வணங்குவோமே... நன்மைகள் பல நடக்கட்டும் என வேண்டி மகிழ்வோமே..🌷🌷💐💐🌻🌻..அனைவருக்கும் உங்கள் கு.பஞ்சாவின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்..💐💐💐 கு.பஞ்சாட்சரம் ஆசிரியர் பெரும்பாக்கம் அச்சரப்பாக்கம் ஒன்றியம்

பொங்கல் சிறப்பு கவிதை- தோழர் மணிகண்ட பிரபு

கடுப்பு பொங்கல்-மணி ஆறு மணிக்கு அலாரம் வைத்து எழுந்தது மலையேறியாச்சு டி.வி பார்த்து முகநூலில் லைக்கிட்டு வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொல்லி பட்டி மன்றம் பார்த்தவுடன் பாதிப் பொங்கல் முடிந்தது தேங்கி வழிந்து கொண்டிருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் க்ளியர் சார்ட் செய்தவுடன் அன்ரூல்ட் நோட்டில் எழுதிப் பழகிய நிம்மதி ரிமூவ் டேக் செய்தபின்பும் கேன்டி கிரஷ்க்கு தவிர்த்து பொங்கல் தின்று படுத்தால் நாள் முழுதும் தூக்க தண்டனை தான் ரேசன் கடை கரும்பு தின்னுட்டு வீதியை பார்த்தால் பணமில்லாத ஏடிஎம் மாதிரி வெறிச்சோடி கிடக்குது கட்டிடமும் கட்டிடமும் சார்ந்த இடத்தில் இருந்துகொண்டு வயலும் வயல்சார்ந்த இடம் பார்த்து வருத்தமடையுது மனம் வார விடுமுறையில் தான் வாழ்க்கை கொஞ்சம் மிஞ்சுகிறது வலிகளை நினைத்தால் துக்கம் மட்டுமே எஞ்சுகிறது"! தோழமையுடன் மணிகண்டபிரபு, திருப்பூர் ,TNPTF

பொங்கல் சிறப்பு கவிதை - தோழர் செல்வ.ரஞ்சித்

🌞🐮🌾🌞🐮🌾🌞🐮🌾 பெயரீற்றில் பால் விகுதியற்று ஸ்ரீயும் ஜீயும் உயர்வென்றும் ஷ்சும் ஸ்சும் அழகென்றும் பிறப்பிலே இரக்கத் தொடங்கி பொருளற்ற பெயர் சூட்டி கனியிருக்கக் காய்கவர்ந்தோம்! பெற்றோர் உற்றாரை அழைத்திட பேசிப் பழகி மகிழ்ந்திட அயல்மொழியே சிறப்பு என்றும் ஆங்கிலமே அறிவு என்றும் தாய்மொழியை மொழிய மறுத்து செவிலியிடம் சிறையானோம்! ஏர்முனை பலம் கூட்டாது ஏறுகளின் நலம் பேணாது இயற்கை உழவ(வி)னை மதியாது செயற்கை உரத்தைச் சேற்றாக்கி செர்சியின் மடிநீரைப் பாணமாக்கி நோயுற்று நோவானோம்! தானிய உணவைத் தரமறுத்து விந்தில்லா விதை விதைத்து விளையும் நிலத்தையும் பாழாக்கி தரணியின் கழிவினைத் தரமென்று பீசா-லேசே பெருமை என்று பிஞ்சுவெம்ப மலடானோம்! மொழியொழித்து இனமழிக்க இந்தியமும் நடிக்கிறது . . .! செயற்கையளித்து அடிமையாக்க இன்னலுலகம் துடிக்கிறது . . .! *இயற்கையோடே மொழியுயர்த்தி* *இனந்தழைக்க முடிவெடு!* இனத்தின் மொழியும் இந்நாளில் மொழிகிறது. . . ., இனமும் மொழியும் *தமிழே என்று!* இனத்தின் புதுநாள் *தைமுதலே என்று!* இயற்கை உழவாலும் சர்க்கரை...

பொங்கல் சிறப்பு கவிதை- கவிஞர் வாலிதாசன்

அன்போடு வளர்ந்த இனம் அடக்க நினைத்தால் அத்துமீறி அழிக்கும் குணம் யாவரையும் சொந்தமாக நினைத்தோமே யாவராலும் ஒடுக்கப்பட்டு நிக்கோமே தமிழா - ஒரு நொடி தமிழா தமிழா - உன் குடி தமிழா தமிழனுக்கெதிரா எச்சரிக்கை- நாள்தோறும் போலி சுற்றறிக்கை; வந்தபடி இருக்குதே - வசதியா தந்தபடி இருக்குதே- எம் மனக்கழுத்தை நெருக்குதே- நெஞ்சழுத்தத்தில் சுருக்குதே; வரைமுறை யறிந்தவனே- பரம்பரை குணம் தெரிஞ்சவனே; ஐம்பெரும் நிலத்தில் வாழ்ந்த இனம்- அறத்தை மூச்சாய் நினைத்த இனம்; சோறு கொடுக்கற சாமியடா- பேரு எடுக்கற காளையடா; மாட்ட அடக்குற கூட்டமடா- காட்ட  செழிக்குற வாட்டமா? பிள்ளையப்போல் வளர்க்குறம் காளை- அது எங்க உசுருக்கும் மேல; நடுவீட்டிற்குள் நுழைஞ்ச நாயைப் போல- நாட்டுக்குள் பீட்டா வேல; வஞ்சகனும் இருக்கிறான் கொஞ்சமேனும் சூடு சுரணை இருக்குதா? பக்கத்து மாநிலத்தான் வக்கத்து போனதால வாலாட்டறான்- கேரளம் மாநிலத்தான் சோரம் ஆனதால காலாட்டறான்; தமிழா - இது உன் மொழி தமிழா தமிழா - ஒரு நொடி தமிழா எங்கள் நிலத்தில் வந்து நரிகளின் சத்தமா?- எங்கள் நிலத்தில் எருதுவிடல் என்ன குத்தமா? ...

நேயர்கள் வாரம்- தினசரி -ஹைக்கூ

நேயர்கள் வாரம்- தினசரி -ஹைக்கூ திரு.பஞ்சாட்சரம், ஆசிரியர், அச்சரப்பாக்கம் ஒன்றியம் Pancha Kuppusamy தினசரி நாட்காட்டியின் அறைகூவல் ... இன்று கொடுக்கும் மரியாதை நாளை எனக்கு இல்லையே!!! பஞ்சாவின் தேடல் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து...

நேயர்கள் வாரம்- அம்மா -கவிதை

நேயர்கள் வாரம்- அம்மா -கவிதை திரு.பஞ்சாட்சரம்,ஆசிரியர்,  அச்சரப்பாக்கம் ஒன்றியம் Pancha Kuppusamy  தாயின் கருவறைக்குள்... அம்மா ஆயுள் முழுவதும் உன் கருவறைக்குள் இருக்க ஆசைதான்.ஆனால் எனக்கு உடன்பிறப்புகள் இல்லாமல் போய்விடுமே. . தொப்புள்கொடியால் நீ என்னை தாலாட்டும்போது உன் முகம் காண்பேன் .அப்பாவின் கையைப்பிடித்து உன் வயிற்றை தடவச்சொல்லும்போது அப்பாவின் முகம் காண்பேன்.. நான் அசையும்போது ஏற்படும் அந்த இன்ப வலி நான் பிறக்கும்போது எப்படி நீ தாங்குவாயோ??.. அதனால் என்னை மற்றவர்கள்போல் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தி மருத்துவச்சின் கையில் தவழச்செய்யாதே.. உலகில் உன்னைதான் முதலில் நான் காண வேண்டும் அம்மா... பஞ்சாவின் தேடல் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து....

நேயர்கள் வாரம்- ஹைக்கூ-வெண்டை

நேயர்கள் வாரம்- ஹைக்கூ-வெண்டை Pancha Kuppusamy ஹைக்கூ-திரு.பஞ்சாட்சரம்,ஆசிரியர்,அச்சரபாக்கம் ஒன்றியம் வெண்டைக்காயின் கொழுப்பு... லேடிஸ் ஃபிங்கர் என்றுதான் என் பெயர்.. ஆனால் எவரும் மோதிரம் போடுபவராக தெரியவில்லை.. என் விரல்களை ஒடித்துவிட்டுதான் செல்கிறார்கள்... பஞ்சாவின் தேடல் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து..

நேயர்கள் வாரம் -தூரிகை வரைந்த ஓவியம்....

நேயர்கள் வாரம் -தூரிகை வரைந்த ஓவியம்.... கவிதை -திரு.பஞ்சாட்சரம்,ஆசிரியர், அச்சரபாக்கம் ஒன்றியம் அன்பு உள்ளங்களே வண்ணங்களில் குழைத்து எண்ணங்களை இழைக்கும் ஓவியனின் அழகிய விரல்களால் நான் நடனமாடுகின்றேன்... என்னை யாரென்று தெரிகிறதா தூரிகை என்றால் உமக்குப் புரிகிறதா... இது பலரும் அறியாத பெயர்தான்... விளம்பரம் இல்லாததால் துயர்தான்... இனியாவது தெரிந்துகொள்ளுங்கள் என்னையும் புரிந்துகொள்ளுங்கள்... ஓவியனின் கற்பனைகளை பிரதிபலிக்கும் கண்ணாடி நானல்லவா .. டாவின்சியின் மோனலிசா ஓவியம் வரைந்து வான்புகழ் பெற்றதில் பங்கும் எனக்கு உண்டல்லவா... கலைகளில் ஒன்று ஓவியம்... நான் படைப்பதோ அனைத்தும் காவியம்... சுவரில் பார்க்கும் ஓவியங்களெல்லாம் உங்களில் பலரை மயக்குவதுண்டு.. ஆனால் அவைகளை வரையும்போதெல்லாம் உடல் தேய்ந்து பலநேரம் நான் மயங்கியதுண்டு... என் உடலை வருத்தி ஓவியங்களை படைக்கின்றேன் நீங்கள் ரசிப்பதற்காக.. பல்வண்ணங்களுடன் இணைந்து திறம்பட பணிபுரிகின்றேன் நீங்கள் புசிப்பதற்காக... அரசர்கள் ஆண்ட அரண்மனைகளிலும் அவர்கள் கட்டிய கோயில்களிலும் எத்தனை எத்தனை ஓவியங்கள்...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

KALAI THIRUVIZHA DANCE 2026