மார்கழி மாதம் , மாதங்களில் மிகச் சிறந்தது. வைகுண்ட ஏகாதஷி,ஆருத்ரா தரிசனம் ,அதிகாலை நேர வழிபாடு இவற்றுடன் ராமதாசனின் பிறந்த நாளும் இந்த மாதத்தில்தான் வருகிறது. மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். அஞ்சனை மற்றும் கேசரி தம்பதியருக்கு பிறந்த இவர் ருத்ராம்சம் வாய்ந்தவர் . தனக்கு மகனாய் ஈஸ்வரன் பிறக்கவேண்டும் என்று அஞ்சனை இருந்த தவத்திற்கு பலனை அவருடைய அம்சம் வாய்ந்த ஆஞ்சநேயர் பிறந்ததாய் சொல்லுவர். பொதுவாக, ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை, சிவன்,விஷ்ணு,அம்பாள்,முருகன் மட்டும் வணங்குபவர்கள் உண்டு. ஆனால், அந்த தெய்வத்தின் குறிப்பிட்ட ஒரு அவதாரத்தை மட்டும் வணங்குபவர்கள் உண்டா ?? இராமாயண அவதார நோக்கம் முடிந்து ராமன், வைகுண்டம் திரும்பும் நேரம், அனைவரும் அவருடன் செல்கின்றனர்,ஒருவரைத் தவிர. ஆம் . ஆஞ்சநேயர் வைகுண்டம் செல்ல விரும்பவில்லை. ராமரிடம் கேட்கிறார் அவர் “வைகுண்டத்தில் ராம நாமம் உண்டா ?,ராமர் இருப்பாரா ?” “எப்படியப்பா முடியும்? வைகுண்டத்தில், விஷ்ணு மட்டுமே, அவரது நாமம்தான் அங்கே .” என்கிறார் ராமர். “ராம நாமம் இல்லாத இடம் எதுவாய் இருந்தாலும் அது எனக்குத் தேவை இல்