Posts

Showing posts with the label தலையங்கம்

MENU

Show more

தலையங்கம் - அரசுபள்ளி ஆசிரியர்களின் பணிகளும், பழிச்சொல்லும்...

 *தலையங்கம்- அரசுப் பள்ளி வாத்தியார்கள் வேலை*  பொதுபுத்தியின் பார்வையாளர்கள் கவனத்திற்கு , ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுபவர்கள் கவனத்திற்கு .....  கடந்த ஒராண்டாக வீட்டிலிருந்தே சம்பளம் வாங்குகிறார்கள் , என போகிற போக்கில் மனசாட்சி இல்லாது பேசிவிட்டு போகும் கூட்டமே கொஞ்சம் இதனை முழுவதும் படியுங்கள்... *2020-21 ம் ஆண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிகள்* *கடந்த 2020 ஏப்ரல் , மே மாதங்களில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக கொரோனா நிவாரண பொருட்களை( தங்கள் சொந்த பணத்தில்) எளிய மக்களுக்கு வழங்கியுள்ளனர்..* *ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.* *D.A , சரண்டர் உள்ளிட்ட பணபலன்களை இழந்துள்ளனர்.*  *பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ரேசன் கடை,போக்குவரத்து , கட்டுபாட்டு அறைகள் போன்ற இடங்களில் பணியாற்றி உள்ளனர்* 1.) லாக்டவுன் முடிந்து தளர்வுகள் வழங்கிய முதலாக சுதந்திர தின விழா கொடியேற்றுதல் நிகழ்வும், எளிய விழாவும் ... ( 15.08.2020)  2.) மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி ( ஆகஸ்ட் 30 வரை )  3.) மாணவர் சேர்க்கை ( கடந்த ஆண்டுகளை விட இந்தாண்ட...

தலையங்கம் - 144 தடை - நமக்கானது...

Image
*தலையங்கம்* *144 தடை உத்தரவு...* 👉🏼இந்தியா முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்கள் பொதுமக்கள் ஊரடங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.. 👉🏼கொரோனா பரவும் விதம் காட்டுத் தீ பரவுவது போல ஒப்பிட படுகிறது.. 👉🏼இதனை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் வெளியில் சென்று வரும் வெளக்கெண்ணைங்களே ? கொரோனா உன்னை தொற்றி கொண்டு உன்னோடு குடும்பத்துக்கும் வரும், கொத்து கொத்தாக குடும்பம் குடும்பமாக மருத்துவமனையில் தனிமைபட்டு கிடக்கும் அவலநிலை வேண்டுமா ?  👉🏼நமக்கெல்லாம் வராது என நினைத்தால் மடத்தனம் வேறு எதுவும் இல்லை. அமெரிக்கா, இத்தாலி , ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே கொரோனாவுக்கு உயிரிழப்பு, இறந்தவர்களை புதைப்பதற்கு இடமில்லை, கவனிப்பதற்கு மருத்துவமனை இல்லை , தினம்தினம் ஆயிரம் மரணத்தை சந்தித்து முறையான இறுதி சடங்கு செய்வதற்கு கூட இயலாமல் நொடிந்து போயுள்ளன... 👉🏼இங்கு சில முட்டாள்கள் சீரியஸ்னஸ் தெரியாமல் டீ கடைக்கு செல்வதும், டூ விலரில் திரிவதும் , கிரிக்கெட் விளையாடுவதும் என விபரீதம் தெரியாமல் திரிந்து கொண்டுள்ளன... 👉🏼குடும்பத்தில் உள்ள பெற்றோர்களே உங்கள் மகனோ / மகளோ ...

தலையங்கம் - தமிழக கலாச்சாரம் சீரழிந்து விட்டதா ?

Image
தமிழக கலாச்சாரம் சீரழிந்து விட்டதா ?           Image courtesy : tutacare.com "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாதரை எண்ணி " தமிழகத்தில் தொடரும் பாலியல் கொடூரங்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன ... சுவாதி படுகொலை , கடந்த ஆண்டு ஒரு அப்பார்ட்மென்டில் ஒரு சிறுமிக்கு நடந்த கொடூரம் யாருக்கும் மறந்திருக்காது , அதனை தொடர்ந்து பல கொடூரங்கள் எண்ணிலடங்கா... பொள்ளாச்சி , சேலம் , மனதை உலுக்கி போடும் கோவை சம்பவம் - என்னதான் பிரச்சனை தமிழ்நாட்டிற்கு... வீரத்திலும் , தியாகத்திலும் உயர்ந்தோங்கிய தமிழர் குடியில் இன்று காமத்திற்கு ஆளாகி பல கொடூரங்களை செய்வது எதனால் ? தண்டனைகள் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாகுமா , இயல்பாகவே நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுபட்டு அறவழியில் பயணிக்கும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவலநிலை ? ஊற்றுக்கண்ணை தேடி வேரறுப்பதை தவிர வேறு வழியில்லை ... 8 கோடி பேர் வாழும் இம்மண்ணில் வேலி போல இருக்க ஆண்மக்கள் , தாயாக , சகோதரியாக, மகளாக , தோழியாக இருக்கும் பெண்களுக்கு எதிராக வன்புணர்வு செய்வது தகுமா ? எதனால் இந்த காம கொடூரங்கள் , தமிழக ஆண்மக்களிடையே ஒருவித மன...

தலையங்கம் - கலைஞருக்கு இதய அஞ்சலி

Image
➖➖➖➖➖➖ *தலையங்கம் - கலைஞருக்கு இதய அஞ்சலி* ➖➖➖➖➖➖ 👉🏼மிகவும் கனத்த இதயத்தோடு தமிழகம் கண்ட சரித்திர நாயகருக்கு இதய அஞ்சலி செலுத்த எழத நினைக்கிறேன்... 👉🏼செம்மொழியாம் தமிழ் எனும் அரும்பெரும் சிறப்பை தமிழுக்கு பெற்றுத் தந்த தமிழருவியே.. 👉🏼கோடானு கோடி தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக , வாழ்வுக்காக , உரிமைக்காக எந்நேரமும் உழைத்து மகிழ்ந்த உன்னத தலைவ! 👉🏼பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் காட்டிய பாதையில் ஆலய நுழைவு மட்டுமல்ல அர்ச்சகரும் ஆகலாம் என சமத்துவம் செய்து காட்டிய சரித்திர புகழோரே ! 👉🏼இணையத்திலும் தமிழ் வளர்த்த தமிழ் அறிஞரே 👉🏼தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் பல திறந்து தமிழகத்தை கணிணியில் முதன்மை பெற செய்த மூதறிஞரே 👉🏼உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு ஓர் அங்கீகாரம் குமரியிலே இந்திய பெருங்கடலிலே வள்ளுவனுக்கு சிலை எழுப்பு வான்புகழ் எய்த வைத்த கலைஞரே... 👉🏼சொல்லி மாளாது தமிழகம் உம்மால் கண்ட பெருமைகள் 👉🏼  தமிழகம் காத்த தலைமகன் இன்னுயிர் பிரிந்த்து என்ற செய்தி கேட்ட போது இடிதாக்கியது போல நெஞ்சம் அதிர்ந்து போனது ... 👉🏼உம்மைப்போல  ஒரு தலைவன் இனி தமி...

தலையங்கம் - வாரிவழங்கி விடவில்லை ?

*தலையங்கம்* ------------------------------ *வாரி வழங்கிவிட வில்லை...* ------------------------------- 👉🏼மொத்த மாநிலத்தின் வருவாயில் 71 % அரசு ஊழியர் , ஆசிரியர் சம்பளமாக வழங்கப் படுகிறது என தவறான கண்ணோட்டம் மக்களிடையே பரப்ப படுகிறது... 👉🏼இதிலுள்ள முழு விவரம் & முழு விளக்கம் எனக்கு தெரிந்தவரை பதிவிடுகிறேன் , நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.... 👉🏼 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958) தற்போது 2018 ல் இந்த மக்கள் தொகை எவ்வளவு உயர்ந்து இருக்கும் அல்லவா ? 👉🏼தமிழ்நாட்டில் மொத்த அரசு ஊழியர் , ஆசிரியர்கள் எண்ணிக்கை சற்றே ஏறக்குறைய 12 லட்சம் பேர்... 👉🏼8 கோடி மக்களுக்கு பணியாற்ற 12 லட்சம் பேர்... 👉🏼மொத்த மக்கள் தொகையில் அரசு ஊழியர் ஆசிரியர் எண்ணிக்கை 2 அல்லது 3 சதவீதம் , அதாவது 97% மக்களுக்கு பணியாற்ற 3% ஊழியர்கள் - இதன் மூலம் ஏற்படும் பணிச்சுமையை உணரமுடியும் ... 👉🏼அரசு என்பது லாப நோக்கம் கருதாது மக்களுக்கு சேவையாற்றும் அமைப்பு , அத்தகு அரசின் நலத்திட்டங்களை இந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர...

தலையங்கம் - நீட் தேர்வு அநீதி

*தலையங்கம்* *✍🏼நெஞ்சு பொறுக்குதில்லையே...* ✍🏼வெளி ஊருக்கு கூட தனியாக போகாத எம் கிராமத்து மாணவர்கள் , வெளி மாநிலத்தில் தேர்வு எழுத வைப்பது பிஞ்சு கனவுகளை சிதைக்கும் இத்தகு நிலை தகுமா ? ✍🏼மருத்துவம் செய்ய நுழைவு தேர்வு சரி தானா ?  அரசியல் பதவிக்கு வர என்ன நுழைவுத் தேர்வு எழுதினீர ??? ✍🏼மருத்துவம் படித்த பிறகு தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பது அது தானே சரி , எத்தனை காலம் இப்படி ஏறி மிதித்திடுவர்... ✍🏼சாது மிரண்டால் காடு கொள்ளாது.. உணர வேண்டிய தருணம் விரைவில்... ✍🏼தேர்வுக்கு முந்தைய நாள் 2000 கி.மீ பயணம் செய்தால் அதுவும் முதன் முறையாக பயணம் செய்தால் எவ்வளவு அலைச்சல் , மன உளைச்சல் , கவன சிதறல் ஏற்படும் , சோர்வு  இதையெல்லாம் உணராமல் இந்த  கொடுமை புரிந்திடல் தகுமோ ? ✍🏼மாணவி அனிதாவின் மரணம் நெஞ்சை விட்டு அகலாத நிலையில் , நஞ்சை வாரி வீசி விட்டீரே ... ✍🏼குட்ட குட்ட குனிந்து கிடக்கும் தமிழ் சமூகம் , தனகென்ன என்று ஒதுங்கி போகும் சுயநல கூடாரம் தமிழ்நாடு என நினைத்து விட்டீரோ ...? ✍🏼ஒவ்வொன்றுக்கும் போராடி தான் பெற வேண்டும் , ஏனெனில் வாக்குகளை காசுக்கு விற்று விட்...

தலையங்கம் - பெண்ணியம் காப்போம்...

*http://tnsocialpedia.blogspot.com* ✍🏽தலையங்கம்... ✍🏽பெண்ணியம் பற்றியும் பெண் சுதந்திரம் பற்றியும் மேடைக்கு மேடை, வீதிக்கு வீதி என எங்கு காணினும் முழக்கங்கள் ஆனால் பெண்ணியம் பட்ட பகலில் நடுரோட்டில் கழுத்தில் அணிந்துள்ள நகையை காக்க போராடிக் கொண்டுள்ளது... *http://tnsocialpedia.blogspot.com* ✍🏽சற்று நிதானியுங்கள்,  என்னதான் பெண் சுதந்திரம் பற்றி பேசினாலும் தற்போது நடந்துவரும் சம்பவங்கள் நம் தமிழ்ச் சமூகம் சீரழிந்து விடுமோ என வருத்தம் கொள்ளச் செய்கிறது... *http://tnsocialpedia.blogspot.com* ✍🏽எப்போது ஒரு பெண் நடுஇரவில் நகைகள் அணிந்து பயமின்றி செல்ல முடிகிறதோ அப்போதுதான் நாடு சுதந்திரம் பெற்றது என்பார் காந்திஜி (எங்கேயே யாரோ கூற கேள்வியுற்ற ஞாபகம்) ஆனால் இன்றோ பட்டப் பகலில் நடமாட முடியவில்லையே... ✍🏽அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த செயின்பறிப்பு சம்பவங்கள் தற்போது எல்லா இடத்திலும் சர்வ சாதாரணமாக நடப்பது வெட்கக் கேடு... *http://tnsocialpedia.blogspot.com* ✍🏽சமீபத்தில் செயினை பறிக்க அந்த பெண்மணியை நடுரோட்டில் பட்டபகலில் தரதரவென இழுத்துச் செல்கிறான் திருடன்... அய்யகோ மனம...

தலையங்கம் - யார் பொறுப்பு...

*தலையங்கம்* *யார் பொறுப்பு...* இந்த நாட்டில்.... 👉🏼நோயாளி இறந்தாலோ- தற்கொலை செய்து கொண்டாலோ மருத்துவர் தண்டிக்கப் படுவதில்லை... 👉🏼விபத்தை ஏற்படுத்திய டிரைவர் உயிரோடு தப்பினாலும் அவருடைய லைசென்ஸ் கேன்சல் செய்யபடுவதில்லை... 👉🏼குற்றவாளி தற்கொலை செய்து கொண்டால் போலீஸோ வக்கீலோ நீதிபதியோ பணிநீக்கம் செய்யபடுவதில்லை... 👉🏼கடன் வாங்கிய வாடிக்கையாளர் தற்கொலை செய்து கொண்டால் வங்கி ஊழியரோ , மேனேஜரோ பணிநீக்கம், கைது செய்யபடுவதில்லை.... 👉🏼உதாரணம் ஏராளம்...சினிமா படம் ஒன்றில்  ஊருக்கு இளைச்சவன் மூன்று பேர்.. என கீழே உள்ளவர்களை சொல்வார்கள்... 1.பிள்ளையார் கோவில் பூசாரி 2.பழைய துணிக்கு பக்கெட் விக்கறவ 3.ஸ்கூல் வாத்தியாரு... 👉🏼அதற்காக இறந்த குழந்தைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என சொல்லுமளவுக்கு நாங்கள் பொறுப்பற்றவர்கள் கிடையாது... புள்ளிவிவர கல்விமுறையில் ஆசிரியர்களுக்கு தரப்படும் நெருக்கடி , ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமை காட்ட வேண்டிய  சூழலை உருவாக்குகிறது... 👉🏼இந்த காரணத்தையாவது இந்த சமூகம் உணர்ந்து கொண்டால் அதுவே ..... ? அதுமட்டும் போதாது... வரு...

நெஞ்சு பொறுக்குதில்லையே..- தலையங்கம்

*தலையங்கம்...* *நெஞ்சு பொறுக்குதில்லையே..* 👉🏼நண்பர்களுக்கு மன வருத்தத்துடன் கூடிய வணக்கங்கள்.. தமிழகம் எத்தனையோ இன்னல்களை சந்தித்து இருந்தாலும் ஒரு சாமனியன் என்ற முறையில் இந்த கந்து வட்டி தற்கொலை என்பதை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியவில்லை... 👉🏼இரண்டு பச்சிளம் குழுந்தைகள் உயிரோடு கருகி உள்ளன.. அஃறிணை கூட அரவணைத்து வாழும் பூவுலகம் ஆறுஅறிவு மனிதனிடம் மனிதாபினம் அற்று விட்டதா என கேள்வி எழுகிறது... 👉🏼சாதாரண கூலி வேலை செய்யும் சாமானியர்கள் எளிதில் வங்கிகளை அணுகிவிட முடியுமா ? அப்படியே அணுகினாலும் , சாமனியர்களின் அடிப்படை தேவைகளான வீடு, கல்யாணம் , காதுகுத்து சாதாரண தேவைகளை கூட நிறைவு செய்து கொள்ள வங்கிகள் தற்போது கடன் வழங்குகிறதா என்றால் இல்லவே இல்லை.. வங்கிகள் கேட்கும் முதல் கேள்வியே பான் கார்டு , 6 மாத வங்கி பரிவர்த்தனை , எந்த கூலித் தொழிலாளி பான் கார்டு வைத்திருப்பார்.. 👉🏼அங்கே வழங்கப்படும் ஒரே வாய்ப்பு  கந்துவட்டி மட்டுமே 👉🏼அப்போது இது போன்ற சாமானியர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூட வாய்ப்பளிக்க மறுக்கிறதா இந்த சமூகம். 👉🏼தற்போது ...

அரசுப்பணிகள் முடக்கம்...

*அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் தமிழகமெங்கும் கைது....முடங்கி கிடக்கிறது அரசுப்பணிகள்* *http://tnsocialpedia.blogspot.com* 👉🏼1.CPS ரத்து 2.ஊதியக் குழு அமல் 3.20%இடைக்கால நிவாரணம் - உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்தி தமிழகமெங்கும் லட்சகணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்... *http://tnsocialpedia.blogspot.com* 👉🏼மாவட்ட அளவில் மாலைநேர ஆரப்பாட்டம் , சென்னையில் பேரணி, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் என படிப்படியாக போராட்டம் தீவிரப் படுத்தப்பட்டு தற்போது செப்டம்பர் 7 முதல் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டு *தினமும் கைதாகி வருகின்றனர்... *http://tnsocialpedia.blogspot.com* 👉🏼40 ஆயிரம் 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் எதற்கு போராட வேண்டும் ? என்ற கேள்வி மக்களிடையே எழக்கூடும்... அனைத்து ஆசிரியர்களும் 40,50 ஆயிரம் வாங்குவதில்லை , அப்படியே வாங்கினாலும் *அது அவர்களின் உயர்கல்வி(M.A/M.SC, B.ED,M.ED, M.PHIL/ PH.D) தகுதிக்கும் மற்றும்  10 ஆண்டு 20ஆண்டு பணி முடித்த பின் வழங்கப்படும் சிறப்பு நிலை தேர்வு நிலை பெற்றத...

போராட்ட விளக்கம் 1

தலையங்கம் *http://tnsocialpedia.blogspot.com* 👉🏼தற்போது அரசு ஊழியர் , ஆசிரியர் போராட்டங்கள் தீவிரமாக இருக்கும் சூழலில் சில விளக்கங்களை மக்களுக்கு தர வேண்டிய கடமை நமக்கு உள்ளது ... 👉🏼முதல் கேள்வி : வெறும் 2% இருக்கும் அரசு ஊழியர் 1% ஆசிரியர்களுக்கு மொத்த மாநில வருவாயில் 40% வழங்கப்படுகிறது இது போதாதா ? *http://tnsocialpedia.blogspot.com* பதில் : 3% அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 97% சதவீத மக்களுக்கான பணிகளை செய்கின்றனர்... இந்த 3% பணியாளர்கள் செயல்பாடுதன் மொத்த அரசும் , ஆட்சியும்... இவர்கள் இல்லையென்றால் ஏதுமில்லை...  கடுமையான விலைவாசி உயர்வு அதே பழைய ஊதியத்தை பெற இயலுமா ? இன்று ஒரு வெளியில்  சாதாரண பணியாளின் ஒரு நாள் சம்பளம் ரூ450 முதல் ரூ 800 வரை ஆனால் கடைநிலை அரசு ஊழியன் வாங்கும் ஒரு நாள் ஊதியம் ரூ 250 , கல்வித் தகுதிகேற்ப தனியார் தரும் மாத வருமானம்  லட்சங்கள் கூட ஆனால் அரசோ தருவது சில ஆயிரங்கள்... *http://tnsocialpedia.blogspot.com* 👉🏼2006ல் அமல்படுத்தப்பட்ட பழைய ஊதியம் 2017 ல் மாற்றியமைக்கப்பட வேண்டுமா? இல்லையா? *http://tnsocialpedia.blogspot.com* 👉🏼அப...

கல்விதகுதியில் முதலிடம் அரசுபள்ளி ஆசிரியர்கள் தான்...

தலையங்கம்... 👉🏼இப்பதிவு இன்று தினசரி நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள தவறான தகவலுக்கு பதில் பதிவாக அமையும் ... 👉🏼"ஆங்கிலம் தெரியாத அரசுபள்ளி ஆசிரியர்கள் " என செய்தி வெளியிட்டிருக்கும் அந்நாளிதழ் எந்த அடிப்படையில் அவ்வாறு எழுதியது என்று தெரியவில்லை... 👉🏼தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90℅ ஆசிரியர்கள் வெறும் D.TED எனும் பட்டய சான்று மட்டும் படித்துவிடவில்லை... பணிக்கு வந்த பிறகோ பணிக்கு வருவதற்கு முன்போ 90℅ ஆசிரியர்கள் இளங்கலை , முதுகலை உடன் B.ED , M.ED & M.PHIL ,உட்பட தேர்ச்சி பெற்றவர்களே. 👉🏼ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு அக்கல்வித்தகுதி போதாது என்று அந்நாளிதழ் நினைக்கறதா ? அல்லது தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதை விட கூடுதல் கல்விதகுதி பெற்றுள்ளனர் என நிரூபிக்க இயலுமா... 👉🏼சரி மாணவர் சேர்க்கைக்கு இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? 👉🏼தனியார் பள்ளிகள் போல வெற்று விளம்பரங்கள் அரசு பள்ளிக்கு உள்ளதா ? 👉🏼அரசுபள்ளி ஆசிரியர்கள் அரட்டை அடிப்பதாக சொல்கிறது அந்நாளிதழ், ஏனெனில் கற்பித்தல் பணி மட்டும் தானே தரப்படுகிறது... 👉🏼என்னென்ன பிற பணிகளை அரசுபள்ளி...

தலையங்கம் - புள்ளி விவரமல்ல கல்வி

தலையங்கம் *புள்ளி விவரமல்ல கல்வி* தோழர்களுக்கு வணக்கம்.. தற்போதைய அரசு பள்ளி மாணவர்களின் நிலையை எடுத்து சொல்வதற்காக இந்த நெடிய பதிவு... 👉🏼தற்போது அரசு பள்ளிகளில் பின்பற்றபட்டு வரும் அடைவுதேர்வு முறை கானல் நீராகவே உள்ளதாக கருதுகின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள்... 👉🏼ஏனெனில் தேர்வு என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது என்ன ? குறிப்பிட்ட பாடப்பகுதியில் குறிப்பிட்ட கால அளவு கொடுத்து சோதித்து அறியும் மதிப்பபீடு தானே, ஆனால் இந்த அடைவு தேர்வுகள் அப்படியல்ல.. 👉🏼தீடிரென்று ஒரு நாள் எந்தவித பாடப்பகுதியும் குறிப்பிடாமல் பயில்வதற்கு போதிய கால அவகாசம் தராமல் நடத்தப்படுவது வியப்பு... 👉🏼தற்போது 2முதல்5 ம் வகுப்பு பயிலும் இம்மாணவனுக்கு தரப்படும் அடைவுதேர்வு மொழிப்பாடத்தில் வாசித்தல் , பார்க்காமல் எழுதுதல் கணிதத்தில் அடிப்படைதிறன் அவ்வளவு தான் , இதைக்கூட சொல்லித்தராமல் ஆசிரியர்களை...  குறை சொல்ல கிளம்பிவிடாதீர்கள் , கொஞ்சம் சிந்திக்கவும்... இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கு தீடிர் அடைவுத்தேர்வு 1.செக்கோஸ்லோவியா , அமெட்யூர், காஜ் , ஆம்ஸ்டர்டம் , மிஸ்ச்சீவியஸ் .... இது போன்ற வாக்கிய...

தலையங்கம் - ஜல்லிகட்டு 12.1.17

தலையங்கம் - ஜல்லிகட்டு போர் ... 👊🏻நமது tnsocialpedia ஜல்லிகட்டு பற்றி நடத்திய கருத்துகணிப்பில் 99% ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்றே கருத்து தெரிவித்து உள்ளனர்... 👉🏼நம்மில் பலர் ஜல்லிகட்டு விளையாட்டை நேரில் பார்த்தது கூட இல்லை , நான் உட்பட.. பிறகெப்படி இவ்வளவு மக்களின் ஆதரவு என ஆராய்ந்து பார்த்தால் தமிழன் , தமிழர் பாரம்பரியம் என உணர்வு பூர்வமாக சிந்திப்பதே... 👉🏼ஆங்கில , மேற்கத்திய கலாச்சாரம் நம்மை ஆட்கொண்டாலும் இன்னமும் நாம் தமிழன்னையை போற்றுதலுக்கு உரியதாகவே கருதுகிறோம்... 👉🏼உலகில் மூத்த குடி எங்கள் தமிழ்க் கொடி.. 👉🏼எத்தனை அதிசயங்கள் இந்த தமிழ் மண்ணில் இருந்தாலும் தேசியம் எனும் பாரபட்சத்தால் தமிழர் பெருமை, தமிழின் அருமை மறுக்கப்படுகிறது, மறைக்கப்படுகிறது... 👉🏼எங்கோ மலேசியா , கனடா என உலகெங்கும் தமிழ் போற்றப்பட்டாலும் இந்திய மண்ணில் தமிழன் நிலைமை சுண்ணாம்பு தடவிய கண் தான்... 👉🏼அதே வழியில் இன்று ஜல்லிகட்டும் மறுக்கப்பட்டு உலக வரலாற்றில் மறைக்கப்பட உள்ளது.. 👉🏼உச்சநீதிமன்ற கருத்தை விமர்சிப்பதாக அல்ல, உணர்வுகளை மதிக்காத தலைமை என்பது வருத்தமளிக்கவே செய்கிறது.. ...

தலையங்கம் : அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி

தலையங்கம் : அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி 👉🏼ஒரு வருட பள்ளிவேலை நாட்கள் 220 👉🏼 காலை 9மணி முதல் மாலை 4.30வரை கட்டாயம் பள்ளியில் தான் இருக்க வேண்டும்... 👉🏼விடுமுறை நாட்களில் voter list சேர்த்தல், நீக்கல் திருத்தம் பணி வருடத்திற்கு 15 to 30 நாட்கள், ஞாயிறு சிறப்பு முகாம் 👉🏼இது தவிர Aadhar சரிபார்த்தல், Ration card சரிபார்த்தல் பணி 👉🏼அரசு தரும் நலத்திட்டங்களை பள்ளியில் கொண்டு சேர்த்தல் 👉🏼நாடாளுமன்ற , சட்டமன்ற , ஊராட்சி , இடைத்தேர்தல் பயிற்சி (5நாட்கள்)& தேர்தல் பணி (4நாட்கள் 24×7) குறிப்பு : வெகு தொலைவில் பணி வழங்கப்படும் 👉🏼தேர்வுத்தாள் திருத்தம், மதிப்பெண்பட்டியல் தயாரித்தல் , தேர்வு முடிவு வெளியீடு 👉🏼பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்துதல்... 👉🏼பாடத்திட்டம் தயாரித்தல் , கற்பித்தல் பதிவேடுகள் (50க்கும் மேலாக) பராமரித்தல்... 👉🏼ஒவ்வொரு மாதம்  1அல்லது 2 சனிக்கிழமைகளில் பயிற்சி (விடுமுறைக்கு அனுமதி இல்லை) 👉🏼ஒவ்வொரு வருடமும் பள்ளி சார்ந்த பஞ்சாயத்து அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு , பத்து வருடத்திற்கு ஒரு முறை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு... ...

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தம்

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தங்கள்... 🏏நம்ம நாட்ல கிரிக்கெட்க்கு தர்ற முக்கியத்துவத்தை வேறு எந்த விளையாட்டுக்கும் தருவதில்லை என்ற புகார் பரவலாக இருக்கத்தான் செய்கிறது.. 🏏விளம்பர நிறுவனங்களின் வியாபார தந்திரத்தாலும் நாம் பழக்கபடுத்தப் பட்டு இருந்தாலும் , உண்மையாகவே நமக்கு மிக பிடித்த விளையாட்டு கிரிக்கெட்தானே. 🏏அதற்காக மற்ற விளையாட்டுகள் குறைந்தது என்று சொல்லவில்லை, கிரிக்கெட் மனங்கவர்ந்த விளையாட்டு என்றே சொல்ல வருகிறேன்.. 🏏அசாரூதின் , கங்குலி என கிரிக்கெட் ஜாம்பவான்களை படிப்பில் தொடர்பு படுத்தி வளர்ந்தேன், ஒவ்வொரு தேர்விலும் பேனா தான் எனது பேட், கேள்வித்தாள் தான் எதிரணி பந்துவீச்சு , வினாக்களை விடைகளாக அடித்து நொறுக்கி 50, 100, 200 என சதம் கண்டே மகிழ்வேன்... இது நமது மாணவர்களை படிப்பில் முன்னேற உதவும் டெக்னிக்... 🏏எதற்காக இந்த கிரிக்கெட் புராணம் இப்போது என நீங்கள் கேட்பது புரிகிறது.. கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 3 சதங்கள் தான் காரணம்.. 🏏சதம் அடிப்பதே கடினமான சூழலில் முச்சதம் அடித்து இந்திய பேட்டிங் திறமையை உலகறிய செய்துள்ளார்.. 🏏இன்னும் எத்தனையோ இளைஞர...

தலையங்கம் - ஆரம்பம் 25.12.2016

தலையங்கம் - ஆரம்பம்... 👉🏼என் நெஞ்சில் குடியிருக்கும் வாசக பெருமக்களே... 👉🏼பேச்சின் ஆரம்பம் தான் நம் அஸ்திவாரம் என்பதை நன்குணர்ந்தே மேற்சொன்ன அடைமொழியை குறிப்பிட்டேன்... 👉🏼இந்த tnsocialpedia வலைப்பதிவுகள் கடந்த இரு வருடமாக(2015முதல்) செயல்பட்டு வருகிறது , நல் ஆதரவும் கிடைத்துள்ளது... 👉🏼பல தரப்பட்ட பயனுள்ள செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை என்றுமே நினைவில் கொள்வேன், சில நாட்களாக என்னுள் ஒரு சிந்தனை... என் மனதில் தோன்றும் சமூக ஆக்கத்தை எழுத்தாக மாற்றி வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று., அதன் விளைவே இனி இந்த தலையங்க பகுதி... 👉🏼வழக்கம்போல பயனுள்ள செய்திகளோடு எனது எண்ண சிதறல்களும் வெளிவரும்... சுவையான உணவில் உப்பு மிக அவசியமானது, அதேபோன்றே தலையங்கமும் அமையும்..கரித்து விடாது கருத்தாக அமையும் ஆதலால்.. 👉🏼தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... டிசம்பர் 25 இறைமகனார் கிறித்து பிறந்தது போல நமது வலைப்பூவில் இன்று தலையங்கம் பிறந்துள்ளது... 👉🏼நிச்சயம் குழந்தை சான்றோனாக மாறும் சமூக மாற்றத்தை காணும் என்பதில் உறுதியோடு ஆரம...

இரண்டாவது ஆண்டில் Tnsocialpedia ...

🙏🏼Tnsocialpedia🙏🏼 நேயர்களுக்கு வணக்கம்... உங்கள் Tnsocialpedia உங்களின் பேராதரவோடு ஓராண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.... இந்த ஓராண்டில் 27000 பார்வையாளர்களை பெற்றுள்ளது... உங்களுக்காக முக்கிய செய்திகள், சினிமா , விளையாட்டு , ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் உதவும் பல்வேறு பதிவுகள், MUTAL TRANSFER , Study materials , key answers, இரத்த நன்கொடையாளர் பதிவுகள், குட்டி கதைகள், சுயசரிதைகள், நேயர்கள் படைப்புகள், online shopping, Bible reader, live cricket scores , Live share market indices இன்னும் பல பயனுள்ள பதிவுகள் பதிவிடுகிறோம் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.... மேலும் உங்கள் மேலான கருத்துக்களை tnsocialpedia@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.... உங்கள் பேராதரவை நல்கும் Tnsocialpedia... நன்றி... இங்ஙனம் R.R www.tnsocialpedia.blogspot.com

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026