MENU

Show more

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தம்

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தங்கள்...

🏏நம்ம நாட்ல கிரிக்கெட்க்கு தர்ற முக்கியத்துவத்தை வேறு எந்த விளையாட்டுக்கும் தருவதில்லை என்ற புகார் பரவலாக இருக்கத்தான் செய்கிறது..

🏏விளம்பர நிறுவனங்களின் வியாபார தந்திரத்தாலும் நாம் பழக்கபடுத்தப் பட்டு இருந்தாலும் , உண்மையாகவே நமக்கு மிக பிடித்த விளையாட்டு கிரிக்கெட்தானே.

🏏அதற்காக மற்ற விளையாட்டுகள் குறைந்தது என்று சொல்லவில்லை, கிரிக்கெட் மனங்கவர்ந்த விளையாட்டு என்றே சொல்ல வருகிறேன்..

🏏அசாரூதின் , கங்குலி என கிரிக்கெட் ஜாம்பவான்களை படிப்பில் தொடர்பு படுத்தி வளர்ந்தேன், ஒவ்வொரு தேர்விலும் பேனா தான் எனது பேட், கேள்வித்தாள் தான் எதிரணி பந்துவீச்சு , வினாக்களை விடைகளாக அடித்து நொறுக்கி 50, 100, 200 என சதம் கண்டே மகிழ்வேன்... இது நமது மாணவர்களை படிப்பில் முன்னேற உதவும் டெக்னிக்...

🏏எதற்காக இந்த கிரிக்கெட் புராணம் இப்போது என நீங்கள் கேட்பது புரிகிறது.. கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 3 சதங்கள் தான் காரணம்..

🏏சதம் அடிப்பதே கடினமான சூழலில் முச்சதம் அடித்து இந்திய பேட்டிங் திறமையை உலகறிய செய்துள்ளார்..

🏏இன்னும் எத்தனையோ இளைஞர்கள் துடிப்புடன் , ஆர்வத்துடன் உள்ளூர் விளையாட்டுகளில் அசத்தி வருகின்றனர்..

🏏சிபாரிசு அடிப்படையில் தேர்வு நடத்தாமல் திறமை அடிப்படையில் தேர்வு செய்தால் கருண் நாயர் போல எங்கவூர் முனுசாமியும் குப்புசாமியும் கூட மிளிர்வார்கள்...

🏏வாழ்த்துக்கள் கருண்நாயர்..

நட்புடன்
R.R

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28