Posts

Showing posts from July, 2019

AUGUST 2019 SCHOOL DIARY

Image
*ஆகஸ்ட் மாத(2019) பள்ளி நாட்காட்டி* 👉🏼அலுவலக குறைதீர் நாள் - 03.08.19 👉🏼வரையறுக்கப்பட்ட விடுப்பு - 9.8.19, 14.8.19, 16.8.19 👉🏼அரசு விடுமுறை - 12.8.19- பக்ரீத் , 15.8.19- சுதந்திர தினம், 23.8.19- கிருஷ்ண ஜெயந்தி 👉🏼சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - 17.8.19 👉🏼புதிய பாடத்திட்ட பயிற்சி - UPPER PRIMARY (Subject - 1 batch & 2 batch) >தமிழ் - 8 & 9.8.19 மற்றும் 13 &14.8.19 >ஆங்கிலம் - 19 & 20.8.19 மற்றும் 21 & 22.8.19 >கணிதம் - 8 & 9.8.19 மற்றும் 13 &14.8.19 >அறிவியல் - 19 & 20.8.19 மற்றும் 21 & 22.8.19 >சமூக அறிவியல் - 26 & 27.8.19 மற்றும் 28&29.8.19 ( TRAINING DATES AS PER STATE SCHEDULE VARIOUS TO BLOCK LEVEL ) TRAINING SCHEDULE - Click here 👉🏼இம்மாத விடுப்பு நாட்கள் 11 இம்மாத வேலைநாட்கள் 20 List of holidays 2019 click here

TNPTF கல்விச் செய்திகள் 31.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 15 ♝ &  31•7•2019* 🔥 🛡தொடக்கக் கல்வி - அரசு நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அரசாணையின்படி செயல்பட்டுவரும் 2381 அங்கன்வாடி மையங்களைத் தவிர பிற மையங்களில் செயல்பட்டு வரும் LKG மற்றும் UKG வகுப்புகள் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோருதல்  சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. 🔥 🛡பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி தோன்றிய ஆண்டை தவறாக குறிப்பிட்ட விவகாரத்தில், 13 பேர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் -  பள்ளி கல்வித்துறை உத்தரவு. 🔥 🛡மத்திய அரசு  ஜூலை மாதம் நடத்திய  ஆசிரியர் தகுதி தேர்விற்கான (CTET)  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி 🔥 🛡PG Teachers காலி பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுப்பணி வழங்க கலந்தாய்வு - தூத்துக்குடி CEO உத்தரவு. 🔥 🛡முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான பாடத்திட்டம் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவு விவரங்கள் Emis வலைதளத்தில் முக

II TO VIII STD LESSON PLAN - AUGUST MONTH

LESSON PLAN & GUIDE II STD LESSON PLAN GUIDE III STD LESSON PLAN GUIDE IV STD LESSON PLAN GUIDE V STD LESSON PLAN GUIDE VI TO VIII TAMIL LESSON PLAN GUIDE

TNPTF கல்விச் செய்திகள் 29.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 13 ♝ &  29•7•2019* 🔥 🛡பிளஸ்2 பாடப்புத்தகத்தில் தமிழ் தொடர்பான தவறான பகுதி நீக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி 🔥 🛡அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் சத்துணவு வழங்க உத்தரவு - சமூக நல ஆணையரக நக.எண்.20066-ச.தி.-(2)-2019, நாள். 25.7.2019 - முதலமைச்சர் தனிப்பிரிவில் பதிலளிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡மாநிலம் முழுவதும் இன்று முதல் அரசுப் பள்ளிகளில் இணை இயக்குனர் ஆய்வு - நாளிதழ் செய்தி. 🔥 🛡பணி நேரத்தில் தேநீர் அருந்த  வெளியே சென்ற, காரிமங்கலம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், 11 பேரிடம் விளக்கம் கேட்டு,தர்மபுரி  மாவட்ட கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 🔥 🛡தனியார் பள்ளிகளில்  இருந்து அரசு பள்ளிகளுக்கு  மாறிய 1 லட்சம் மாணவர்கள் ! அசத்திய அரசுப் பள்ளிகள் - நாளிதழ் செய்தி 🔥 🛡7ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி அதிகரிப்பு - நாளிதழ் செய்தி. 🔥 🛡உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மா

MATHS SLOW LEARNERS MATERIAL

MATHS SLOW LEARNERS MATERIAL 6 TO 8 th STD பயிற்சித்தாள் Click here to download PDF

TAMIL LEARING APP

Image
தமிழ் எழுத்துகள் - வாசிப்பு பயிற்சி தமிழ் எழுத்துக்களை வாசிக்க , எழுதி பழக மிக எளிமையான ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்.. முதல் வகுப்பு மாணவர்கட்கும் , வாசிப்பு பயிற்ச்சிக்கும் மிகவும் எளிமையான செயலி.. Click here to DOWNLOAD

THE GOVT SCHOOL TEACHER - SHORT FILM

Image
அரசு பள்ளி ஆசிரியர் அரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றிய குறும்படம் ஒன்று BLACK SHEEP YOUTUBE சேனலில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது... அரசுபள்ளி ஆசிரியர்கள் மீதான நன்மதிப்பை சமூகத்திடம் ஏற்படுத்தும் இந்த குறும்படம் என்பதால் நம் தளத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள். இதோ அந்த குறும்படம்... Video courtesy : black sheep / YouTube Link : https://youtu.be/raxq5CtJyNU

TNPTF கல்விச் செய்திகள் 26.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 10 ♝ &  26•7•2019* 🔥 🛡 இன்று  ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை  அறிவிப்பு 🔥 🛡 நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள்  பொருத்தும் பணி தொடக்கம் 🔥 🛡EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படம் ஜூலை 31 ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் 🔥 🛡திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூரில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் உள்ளிட்ட சிறப்புகளால் அரசுப் பள்ளியைச் சீரமைத்த கோவை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 🔥 🛡நடப்பு ஆண்டில் அரசுப்பளிகளில் மாணவர் சேர்க்கை 1.70 லட்சம் உயர்வு.  தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் வரை மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தகவல்-  நாளிதழ் செய்தி 🔥 🛡நீர் ஆதாரங்களை மீட்க 3003 பனை விதைகள் -  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த  ஆலம்பட்டி  அரசுப் பள்ளிக்கு வந்து வாழ்த்திய ஆட்சியர் 🔥 🛡அரசு ஆ

அரசுப் பள்ளி - புத்தாக்கம்

Image
மூடும் நிலையிலிருந்து அரசுப் பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியர்கள் இரண்டு மாணவர்களே என்ற நிலையிலிருந்து எழுபத்தொரு மாணவர்கள என்ற மாபெரும் வளர்ச்சி - இதோ அந்த காணொளி Video courtesy : Puthiya Thalaimurai / YouTube Link : https://youtu.be/3rnOslmxFzY அச்சாதனையை நிகழ்த்திய ஆசிரிய பெருமக்களுக்கு நமது தளத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்...

TNTP - TEACHERS NEW PLATFORM

Image
TNTP தளத்தினை பயன்படுத்துவது எப்படி ? Video : TNSOCIALPEDIA / YOUTUBE

AMAZING APP FOR BOOK READERS

Image
ANDROID APP FOR BOOKS LOTS OF BOOKS , ALL LANGUAGES AD FREE , EASY TO READ - ITS JUST AMAZING ... Click here to download

TNPTF கல்விச் செய்திகள் 24.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 8 ♝ &  24•7•2019* 🔥 🛡இந்தியா நேற்று முந்தினம் சந்திரயான் - 2 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 🔥 🛡DEE - நீதிமன்ற வழக்குகளைக் கவனிக்கும் பொருட்டு ஒரு சட்ட அலுவலர் பணியிடம் தோற்றுவிப்பு - இயக்குநர் செயல்முறை வெளியீடு. 🔥 🛡தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் விவரங்கள் கோரி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் படிவம் வெளியீடு. 🔥 🛡வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡புதுக்கோட்டை மாவட்ட,  கவரப்பட்டி அரசுபள்ளி  ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றுள்ளது. - நாளிதழ் செய்தி 🔥 🛡B.E., / B.Tech., பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு :இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 24.07.2019. 🔥 🛡கணினி பாடத்தில் மாணவர்களை வஞ்சிக்கும் கல்வித்துறை ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ஒதுக்கி இலவச லேப்டாப் வழங்கி வரும் இந்த அரசு, அரசுப்பள்ளி கணினி ஆய்வகத்தை வைத்திருக்கும் உண்மை நிலை - நாளிதழ் செய்தி

E FILE DATE EXTENDED

Image
E FILE DATE EXTENDED 2019 ORDER COPY

கற்றல் குறைபாடு - RTI விளக்கம்

Image
மாணவர்கள் வாசிக்கவில்லை , எழுதவில்லை என்றால் என்ன குறைபாடு- RTI பதில்...

திருக்குறள் கதைகள்

Image
பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் கதைகள் ... Video courtesy : magicbox Tamil stories Link : https://youtu.be/YskcPKwj20Y

TNPTF கல்விச் செய்திகள் 23.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 7 ♝ &  23•7•2019* 🔥 🛡ஊராட்சி ஒன்றிய / அரசு /நகராட்சி ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சார்ந்த விவரம் கோருதல்  சார்பாக தொடக்கக்கல்வி  இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡தொடக்கக் கல்வி இயக்ககம் - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்படும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளைக் கவனிக்கும் பொருட்டு ஒரு சட்ட அலுவலர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது - மதுரை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சட்ட அலுவலராக திருமதி.சி.சுப்புலட்சுமி, சார்பு செயலாளர், சட்டத்துறை நியமனம் செய்யப்பட்டது - தொடர்நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡 பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில், பிஎச்டி போன்ற படிப்புகளுக்கு  2019-20 ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு 🔥 🛡மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் குறைந்தால் ஆசிரியர்கள் பொறுப்பல்ல - மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் கற்றல் குறைபாடு வகைகள் குறித்து RTI மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளது 🔥

படித்ததில் பிடித்தது - சிறப்பு பதிவு

Image
*கிள்ளுக்கீரைகளா ஆசிரியர்கள்? - முனைவர் மணி.கணேசன்* *JULY 20, 2019*   ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி எனும் பழமொழி தமிழில் உண்டு. அப்பழமொழிக்கேற்ப, இன்றைய ஆசிரியர்களின் நிலை உள்ளது. நியாயமான உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஈவு இரக்கம் இல்லாமல் கைது செய்வதும், ஊதியம் பிடித்தம் செய்வதும், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை பாதிக்கும் 17B தண்டனைகள் வழங்குவதும் மனிதாபிமானம் கிஞ்சித்தும் இன்றி தொடர்ந்து ஒருவித அச்சுறுத்தல் மனப்பான்மை மேலோங்க செயல்படுவதென்பது காலனி ஆதிக்கத்தை நினைவுப் படுத்துவதாக இருக்கிறது.   இதுபோன்ற ஒரு கொடுங்கோல் நிலைமை என்பது இதுநாள்வரை ஆசிரியர்கள் காணாத ஒன்று. மேலும், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் வேண்டுமென்றே பல முட்டுக்கட்டைகள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் மாணவர்கள் சேர்க்கைக் குறைவைக் காரணங்காட்டி அங்கன்வாடி ஆசிரியராகவும் நூலகப் பணியாளராகவும் பணிசெய்யக் கட்டாயப்படுத்தி வருவதென்பது வேதனையளிக்கத் தக்க செயல்களாவன. முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை உபரிப் பணியிடங்களாகக் காண்பித்துக் கீழ் வகுப்புகளில் பணியிறக்கம் செய்வதாவது

LESSON PLAN & GUIDE - NEW SYLLABUS

ALL CLASSES LESSON PLAN & GUIDE NEW SYLLABUS - JULY MONTH LESSON PLAN GUIDE- I TERM Click here

TNPTF கல்விச் செய்திகள் 22.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 6 ♝ & 1 22.7•2019* 🔥 🛡தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956ஆம் நாளை பெருமைப் படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படும் - தமிழக அரசு அறிவிப்பு. 🔥 🛡தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு. 🔥 🛡ஆசிரியர்கள் வருகைப்பதிவுக் கான பயோமெட்ரிக் கருவியில் இனி இந்தி வராது - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி  🔥 🛡அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை  களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய  ஆணைகள் வெளியிடப்படும் : துணை முதல்வர் அறிவிப்பு. 🔥 🛡பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும் -: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. 🔥 🛡TRBக்கு புதிய IAS அதிகாரி நியமனம் - தலைமைச் செயலாளர் உத்தரவு. 🔥 🛡EMIS - தவறான தகவல்கள் பதிவேற்றம் - பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்

TNPTF கல்விச் செய்திகள் 21.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 5 ♝ & 21.7•2019* 🔥 🛡3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம் செய்ய வேண்டியதில்லை என பள்ளிக்கல்வி  இயக்குநரின்  செயல்முறையில் (நாள்:20/07/2019)  தெரிவிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡EMIS வலைத்தளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி தற் போது செய்யப்பட்டுள்ளது. 🔥 🛡EMIS-விவரங்களை -BEO,DEO,CEO பள்ளிகளுக்கே நேரில் சென்று கள பரிசோதனை மற்றும் ஆய்வு செய்ய (FIELD VISIT AND CROSS CHECK ) இயக்குநர் உத்தரவு 🔥 🛡சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி பெறும் தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிர்வாக மானிய விகிதத்தை மாற்றி அமைத்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.அரசாணை எண் 119 -நாள் 29.06.2019 🔥 🛡பள்ளிக் கல்வி - 2018-19 ஆம் கல்வியாண்டில் அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெ

TNPTF கல்விச் செய்திகள் 19.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 3 ♝ & 19•7•2019* 🔥 🛡தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உதயம் : காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம்,  நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகிறது - தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு. 🔥 🛡தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை TNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன. EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும். User name என்பது நம்முடைய ஆதார் எண்ணின் கடைசி எட்டு இலக்கம். Password என்பது ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் மற்றும் @ என்ற குறியீடு மற்றும் நம்முடைய பிறந்த வருடம் ஆகும். 🔥 🛡மாணவர்கள் இல்லாத 45 பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும் : மாணவர்கள் சேர்ந்தவுடன் நூலகம் மீண்டும் பள்ளியாக மாற்றப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல். 🔥

TAMIL READING CARDS

Image
தமிழ் வாசித்தல் பயிற்சி TAMIL READING 32 CARDS SLOW LEARNERS MATERIALS

TNPTF கல்விச் செய்திகள் 18.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 2 ♝ & 18•7•2019* 🔥 🛡பள்ளிக் கல்வித் துறை - 2019 - 2020 ம் கல்வியாண்டு-NEET மற்றும் JEE - 2021 - போட்டித்தேர்வுகள் - அரசுப்பள்ளிகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தக்க்ஷனா நிறுவனம் (புனே) மூலம் போட்டித் தேர்விற்கு தயார் செய்வதற்கான ஓராண்டு பயிற்சி வழங்குவது சார்ந்து  முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு 🔥 🛡EMIS இல் மாணவர்கள் விவரங்கள் Update செய்யாமை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர்  அறிவுரைகள் -(17-07-2019) வழங்கி உத்தரவு 🔥 🛡 வேலூர் மாவட்டத்தில் விதிமீறி காமராஜர் பிறந்தநாள் விழா - தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்" 🔥 🛡தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://tntp.tnschools.gov.in/lms. இந்த டிஎன்டிபிஇணையதளத்தில் அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடபுத்தகங்கள், புதிய பாட திட்டத்திற்கான கற்றல், கற்பித்தல், பயிற்சி வளங்கள், இயங்குறு பாடங்கள் போன்றவை மிகஎளிமையான வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 🔥 🛡ஒரு

VI TO VIII GUIDE FOR ALL SUBJECTS

VI TO VIII GUIDE FOR ALL SUBJECTS NEW SYLLABUS TAMIL & ENGLISH MEDIUM Click here to download

நூலகங்களாக மாற்றப்படும்- கல்வி அமைச்சர்

Image
45 அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் - கல்வி அமைச்சர் தகவல்

TNPTF கல்விச் செய்திகள் 17.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 1 ♝ & 17.7•2019* 🔥 🛡'மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியாது' - மத்திய அரசு திட்டவட்டம். 🔥 🛡அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு - சட்டப்பேரவையில் கல்வித்துறை அறிக்கை தாக்கல். 🔥 🛡3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல் - அரசாணை வெளியீடு. 🔥 🛡தபால் துறை தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த ஞாயிறு நடைபெற்ற அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு. 🔥 🛡மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  கல்வித்துறையில் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்துமாறு மாநில அரசை  வலியுறுத்தல்  : 15க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளை இணைக்கும் பணிகள் தீவிரம். 🔥 🛡ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு

கல்வித்துறையின் புதிய முடிவு - அதிர்ச்சி

அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முடிவு: இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம். அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மேலும், தேவைக்கேற்ப உபரி ஆசிரியர்கள் பணியிறக்கம் செய் யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன *தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 58 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட பல காரணங் களால் உபரி ஆசிரியர்கள் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதி கரித்து வருகிறது* *16,110 ஆசிரியர்கள் உபரி* *கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கையின்படி, அரசுப் பள்ளிகளில் 16,110 ஆசிரி யர்கள் உபரியாக உள்ளது கண்டறி யப்பட்டுள்ளது. இவர்களை கலந் தாய்வு மூலம் பணிநிரவல் செய்ய முடிவு செய்து, அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியிட்டது* *அதேநேரம் உபரிய

TNPSC GROUP IV - STUDY MATERIAL

Image
TNPSC GROUP IV STUDY MATERIALS Click here for STUDY PLAN Click here for physics hints Click here for TNPSC MATERIALS

TNPTF கல்விச் செய்திகள் 16.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 31 ♝ & 16•7•2019* 🔥 🛡ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் TNTP ( Tamilnadu Teachers Platform) இணையதளத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான சுற்றறிக்கை -  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡உபரி பட்டதாரி ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க  தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. 🔥 🛡அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க முடிவு மேலும் இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம் -  நாளிதழ் செய்தி 🔥 🛡சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமனாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில்  நேற்று ஒரே நாளில்  கல்வி வளர்ச்சி நாள் விழாவில் 7.50 லட்ச ரூபாய்க்கு நன்கொடை அளித்து அசத்திய பெற்றோர்கள் 🔥 🛡தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 🔥 🛡அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி மகப்பேறு விடுமுறையின் போது தற்காலி

GUIDE FOR ALL CLASSES -2019

NEW SYLLABUS GUIDE FOR ALL CLASSES 2019-20 Click here for DOWNLOAD LINK *Book Back Q&A* ❇️❇️❇️❇️❇️ 👇👇👇 Click here for GANGA GUIDE 👆👆👆 இதை Xerox செய்தவதை விட இதன் விலை மிக குறைவே. அதுவும் நேரடியாக அந்த நிறுவனத்துடன் தொடர்புகொண்டு வாங்கினால் , ஆசிரியர்களுக்காக 20% சலுகை விலையாக மகிழ்ச்சியுடன் தருகிறார்கள். பயன்படுத்திக்கொள்ளவும். நன்றி.. தொடா்புக்கு *ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன்* திருநெல்வேலி சென்னை. 9443158484 9442158484 9442558484 8098058484

TNPTF கல்விச் செய்திகள் 15.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 30 ♝ & 15.7•2019* 🔥 🛡25% ஒதுக்கீட்டில் 1.25 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்தனர் - 1ஆம் வகுப்பில் ஒரு மாணவரும் சேராமல் 1513 அரசு பள்ளிகள் - நாளிதழ் செய்தி 🔥 🛡சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் அறிவிக்க - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் - தமிழக முதல்வரிடம் கோரிக்கை... 🔥 🛡அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை 5 லட்சமாக உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡Biometric வருகைப் பதிவு மேற்கொள்ளாத ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை - Director Proceedings. 🔥 🛡11 & 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு : அதே போல், கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்கக அலுவலர்கள், 32 மாவட்ட CEOகளுக்கும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம். 🔥 🛡மாணவர்களின் விவரங்களில் திருத்தம் - பிறந்த தேதி/தந்தை பெயர்/மாணவர் பெயர்/முகப்பெழுத்து மற்

TN EMIS TEACHERS LOGIN

Image
EMIS WEBSITE TEACHERS INDIVIDUAL LOGIN செய்வது எப்படி? Video : TNSOCIALPEDIA/ YOUTUBE

TRAINING SCHEDULE 2019

Image
NEW TEXT BOOK TRAINING SCHEDULE PRIMARY & UPPER PRIMARY TEACHERS 2019-20

TNPTF கல்விச் செய்திகள் 12.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 27 ♝ & 12.7•2019* 🔥 🛡கல்வித்துறை அரசாணைக்கும் தொடக்க கல்வி இயக்குநர் வெளியிட்ட விதிமுறைகளுக்கும் முரண்பாடு :   தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை. 🔥 🛡DEE - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைப்பு இயக்குநர் உத்தரவு 🔥 🛡அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள் குறித்து  வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு 🔥 🛡இராமநாதபுரம் மாவட்டத்தில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர் பணிக்கு +2 வகுப்புகளுக்கு மாற்றுப் பணியில் நியமனம் 🔥 🛡ஆசிரியர் சங்க நிர்வாகிகள் விவரம் ரகசியமாக சேகரிக்கும் உளவுத்துறை!! கல்வித்துறையும் கேட்பதால் பரபரப்பு 🔥 🛡523 ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது 🔥 🛡EM

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - ஐகோர்ட் தடை

Image
*FLASH NEWS* தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த சென்னை உயர்நீதி மன்றம் தடை.* வழக்கு விசாரணை 18.7.19 ந்தேதிக்கு ஒத்திவைப்பு *_பொதுமாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்ட்டுள்ளதை உறுதி செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்._*

TNPTF கல்விச் செய்திகள் 11.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 26 ♝ & 11.7•2019* 🔥 🛡தொடக்கக்கல்வித் துறை பொதுமாறுதல் கலந்தாய்வில் ஒன்றிய அளவில்  பட்டதாரி ஆசிரியர் மாறுதல் & பதவிஉயர்வு இன்று நடைபெறுகிறது. 🔥 🛡10,11,12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 🔥 🛡பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று  முதல் பதிவிறக்கம் செய்யலாம் 🔥 🛡நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு Bio - Metric Attendance :  ஒன்றியம் வாரியாக  பள்ளிகள் பட்டியல் - இயக்குநர் செயல்முறை வெளியீடு. 🔥 🛡பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு - பள்ளிக்கல்வித்துறை அதிரடி. 🔥 🛡புதிய பாடத்திட்டம் - 10 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு 16.07.2019 முதல் 14.08.2019 வரை  இரண்டு நாள் பணியிடை பயிற்சி அட்டவணை - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. 🔥 🛡DEE - தமிழ்நாடு முழவதும் அனைத்து மாவட்ட நடுநிலைப் பள்ளி உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டிய

WORK DONE REGISTER 2019-20

Image
WORK DONE RECORD Click here to download PDF

TNPTF கல்விச் செய்திகள் 10.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 26 ♝ & 10.7•2019* 🔥 🛡தொடக்கக் கல்வித் துறையில் இன்று பட்டதாரி  ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது. 🔥 🛡DSE - அனைத்து பள்ளிகளிலும் ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட இயக்குநர் உத்தரவு. 🔥 🛡அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்புக்கான போட் டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது 🔥 🛡காஞ்சிபுரம் மாவட்டம் -  முதுகலை உபரி ஆசிரியர்கள் பட்டியல் 2019 வெளியீடு. 🔥 🛡ஜல்சக்தி அபியான் நீர்வளம் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்துதல் : பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் சீரமைத்தல் :  அறிக்கை கோருதல் சார்பு திருப்பூர் CEO செயல்முறை வெளியீடு. 🔥 🛡அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் வெளியே செல்லக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு. 🔥 🛡வேலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வ

TET OFFICIAL ANSWERKEY 2019

TET ANSWER KEY 2019 TRB RELEASE Click here for ANSWERKEYS paper 1&2

TNPTF கல்விச் செய்திகள் 09.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 24 ♝ 9•7•2019* 🔥 🛡தொடக்கக் கல்வி துறையில் இன்றைய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில்  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதலும், பதவி உயர்வும் நடைபெறவுள்ளது. 🔥 🛡ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படுமா? என்ற தி.மு.க வின் கேள்விக்கு, வழக்கு நிலுவையில் உள்ளதால் விவாதிக்க முடியாது என  பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பதில் 🔥 🛡110 - விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் கல்வி துறைக்கு சிறப்பு அறிவிப்புகள் அறிவித்துள்ளார். பள்ளியின் கட்டமைப்புக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு 🔥 🛡பகுதிநேரமாக எம்.பில் ( M.Phil ) பயின்று தேர்ச்சி பெற்றால் ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறலாம் - இரு ஊக்க ஊதியங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில் 🔥 🛡பள்ளிக்கல்வி துறையில் முதுகலை ஆசிரியர்களுக்கு நாளையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு  சனிக்கிழமையும் பணிநிரவல் நடைபெறும் என அறிவிப்பு 🔥 🛡கற்றலில் புதுமை படைக்கும் ஆசிரிய

ALL IN ONE EDUCATION COLLECTIONS 2019-20

கல்வி தொகுப்பு 2019-20 TN NEW SYLLABUS TEXT BOOKS SCHOOL VIDEOS PLAYLIST COLLECTION TAMIL READING PRACTICE QR CODE VIDEOS LEARNING OUTCOME RECORD LESSON PLAN MIND MAPS PHONETIC VIDEOS SLOW LEARNERS MATERIALS *Content disclaimer Files courtesy http://www.thodakkakalvi.com

TEACHERS ATTENDANCE IN APP

*TN Schools attendance appல்*, *ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு மற்றும் விடுப்பு பதிவது எப்படி*?  👉TN Schools attendance app தற்போதைய வெர்ஷனை அப்டேட் செய்து, தலைமை ஆசிரியருக்கான(17 இலக்க எண், user name ஆகவும், தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் Pass word) Log in வழியாக உட்புகவும். 👉ஒரு ஆசிரியர் இன்று விடுப்பில் இருந்தால், அவர் பெயருக்கு நேராக உள்ள P என்பதை தொட்டால், *P*, *A* *L* என்ற மூன்று எழுத்துக்கள் தோன்றும். 👉P என்பது Present என்பதையும்,      A என்பது Absent என்பதையும்,     L என்பது விடுப்பையும் குறிக்கும். 👉L என்பதை தேர்வு செய்து, எந்த வகை விடுப்பு அல்லது OD என்பதை பதிவு செய்து, 👉 மற்றவர்களுக்கு P என்ற நிலையில் சமர்ப்பிக்கவும். 👉அடுத்த நாள், விடுப்பிலிருந்த ஆசிரியர் பணிக்கு வந்திருந்தால், இந்த செயலியில் விடுப்பு எனக் காட்டும். 👉 இந்த சூழலில், செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, Students DATA அருகில் உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியை தொடவும்( update செய்ய). 👉அதன் பின் கேட்கப்படும் தகவலுக்கு Ok என்பதை தொடவும். 👉இதன் பின் fetching மற்றும் configuring  ஆகும். 👉இதன

VIRAT KOHLI SPEECH ABOUT THALA

Image
இன்று Semil final - WORLD CUP 2019 Video courtesy : ESPNcricinfo / YouTube Link : https://youtu.be/q-ozHr8QvEs

KALVI VALARCHI NAAL - PREPARATIONS 2019

Image
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் ஜீலை 15, 2019 மாணவர்களுக்கான போட்டிகள் பேச்சு & கட்டுரைப் போட்டி - காமராசர் வரலாறு காமராசர் பாடல்கள் பள்ளி மாணவர் பாடல் காமராசர் வரலாறு

LESSON PLAN - JULY 2 WEEK

LESSON PLAN JULY SECOND WEEK V STD IV STD VI TO X STD - DOWNLOAD LINK

TNPTF கல்விச் செய்திகள் 08.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡*கல் *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 23 ♝ 8•7•2019* 🔥 🛡ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற, கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் 7.7.2019 (ஞாயிற்றுக்கிழமை) நேற்று  சென்னையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.  முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு 🔥 🛡JACTTO-GEO கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் -  TNPTF மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பொது செயலாளர் அழைப்பின் பேரில்  பங்கேற்பு 🔥 🛡இன்று முதல் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்குகின்றது. இன்று வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல். 🔥 🛡பகுதிநேர / தொலைதூரக் கல்வியில் பெற்ற M.Phil / P.H.D., படிப்புகளுக்கு 2007-08 முதல் ஊக்க ஊதியம் இல்லை : கோவை தணிக்கை 🔥 🛡சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன்கீழ் முதல்வர் சம்பள உயர்வை அறிவிக்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை 🔥 🛡6 முதல

LIST OF HOLIDAYS 2019-20

Image
LIST OF SCHOOL HOLIDAYS/ WORKING DAYS 2019-20 ( SINGLE PAGE)

TEACHERS TRANSFER COUNSELLING NEW SCHEDULE 2019

Image
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு புதிய கால அட்டவணை 2019

TNPTF கல்விச் செய்திகள் 06.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 21 ♝ 6•7•2019* 🔥 🛡ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு, தேர்தல் காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் முற்றிலும் நிறுத்திவைப்பு : மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டபடி கலந்தாய்வு நடைபெறும் : BEO, BT & SG மாவட்ட மாறுதல் மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு. 🔥 🛡ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டு பணிக்காலத்தை வலியுறுத்தாமல் கலந்தாய்வில் அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. 🔥 🛡2019 - 2020ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் : வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை; வருமான வரித் தாக்கலுக்கு பான் எண் தேவையில்லை ; ஆதார் அட்டை போதும். - 🔥 🛡பதவி உயர்வு தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளில் திருத்தம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறை வெளியீடு. 🔥 🛡12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு CA தொடர்பான பயிற்சிக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு 1மணி நேரம் ஒதுக்

பொதுமாறுதல் கலந்தாய்வு புதிய அரசாணை வெளியீடு

Image
*2019 -ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு வேலூர் மாவட்ட பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் அனைத்து வித பொதுமாறுதல் கலந்தாய்வும் தள்ளிவைக்கப் பட்டுள்ளது மேலும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

வாட்ஸ்அப்பிற்கு தடை ?

Image
வாட்ஸ்அப்பிற்கு தடையா ? சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரத்தில் இச்செயலி இயங்காது எனவும் வதந்தி பரவி வருகிறது , இதனை யாரும் நம்ப வேண்டாம். செய்தி : way2news app 

TAMIL MORAL STORIES

Image
ஆத்திச்சூடி கதைகள் - காணொளி Video courtesy: magic box Tamil stories Link : https://youtu.be/rHX9xQoEJoo

JOBS AT NAVODYA VIDYA SAMITI 2019

Image
NVS VACANCY DETAILS Click here for  official notification

TNPTF கல்விச் செய்திகள் 05.07.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 20 ♝ 5•7•2019* 🔥 🛡ஆசிரியர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது : மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை துறையாக கருதப்படாமல் பிரிவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த மார்ச் மாதம் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக 2019-ஆம் ஆண்டு மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களுக்கு இடஒதுக்கீடு) மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 🔥 🛡School Education Policy - பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2019 - 20 வெளியீடு. 🔥 🛡புதிய பாடத்திட்டம் குறித்து தொடக்க / உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க மாவட்டக் கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி ஜூலை 9,10 & ஜூலை 11,12 என இருகட்டங்களாக நடைபெறும் - SCERT  இயக்குநரின் செயல்முறை வெளியீடு. 🔥 🛡தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஊராட்சி / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்

New Textbook Training Workshop For Primary & Upper Primary Teachers - Director Proceedings._*

Image
*BREAKING NEWS*_ *_New Textbook Training Workshop For Primary & Upper Primary Teachers - Director Proceedings._*

TNPTF கல்விச் செய்திகள் 4.7.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆனி 19 ♝ 4•7•2019* 🔥 🛡தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராகவும்  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கண்ணப்பன்  பள்ளிக் கல்வித்துறை இயக்குனராகவும் நியமனம். 🔥 🛡பள்ளிகளில் 16412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை புதிதாக நியமிக்க இயலாது - பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தகவல். 🔥 🛡அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்துசெய்யப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு. 🔥 🛡மாணவ, மாணவிகளின் ஸ்மார்ட் அட்டையை பஸ் ‘பாஸ்’ ஆக பயன்படுத்த அரசு திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல். 🔥 🛡ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன் - அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம். 🔥 🛡RTE - கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்

1,848 தொடக்க பள்ளிகள் இணைப்பு

Image
1,848 தொடக்க பள்ளிகள் இணைப்பு தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ள 1,848 தொடக்கப்பள்ளிகளை இணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தொடக்கக்கல்வி துறையின் கீழ் 30 ஆயிரத்து 597 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால், ஆங்கில வழிக்கல்வி மோகத்தால் கிராமப்புற குழந்தைகளையும் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் சில பள்ளிகள் 10 க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளிகள் நடப்பதாக கண்டறிந்துள்ளனர். இங்கு தலா ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணிபுரிகின்றனர். மாணவர் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள 1,848 தொடக்க பள்ளிகளை அரசு கண்டறிந்துள்ளது. இவற்றை மூடிவிட்டு அங்கிருக்கும் தலைமை ஆசிரியர், ஆசிரியர், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிகள் விபரம் சேகரிப்பு : தொடக்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 10 க்கும் குறைவான மாணவர் உள்ள தொடக்க பள்ளி, அருகில் உள்ள பள்ளி விபரம், துாரம், குறுக்கே ஆறு, தேசிய சாலை, ரயில் தண்டவாளங்கள் உள

HOW TO DOWNLOAD DIKSHA APP VIDEOS

Image
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 *DIKSHA WEBSITE* இனி DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை  *mp4* ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் *desktop* அல்லது *laptop* களின் வழியே திரைவீழ்த்திகளில்  மாணவர்களுக்கு பள்ளிகளில் போட்டு காட்ட முடியும். இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த இரண்டு மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் *இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது* *இதனை உபயோகம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பறவும்* 👇👇👇👇👇👇👇👇👇👇👇  *🔵🔵1*. https://diksha.gov.in/explore என்ற இணைய தளத்திற்கு செல்லவும். *🔵🔵2*. குறிப்பிட்ட பாட நூலை காண நீங்கள் வகுப்பின் எண் (_) பாடத்தின்  பெயரை டைப் செய்யவும். எ.கா. 10 ஆம் வகுப்பு கணக்கு பாடபுத்தக  structure காண 10_maths என DIKSHA explore-  search bar ல் type செய்யவும். *🔵🔵3*. குறிப்பிட்ட பாடநூலில்  உங்களுக்கு தேவையான பாடத்தலைப்பை பாட அலகு வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதில் தேர்ந்தெடுக்கவும். *🔵🔵4*. குறிப்பிட்ட பாட அலகில் list ஆகும் வீடியோக்களில்  தங்களுக்கு தேவையானதை  play செய்யவும். *🔵🔵5*. Play ஆகும் போது வீடியோவின் கீழே

V STD MIND MAP COLLECTIONS - NEW SYLLABUS

ஐந்தாம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டத்தின் மனவரைபடம் - தொகுப்பு Click here to download Tamil PDF Click here to download ENGLISH PDF Click here to download science PDF