MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 4.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆனி 19 ♝ 4•7•2019*


🔥
🛡தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராகவும்  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கண்ணப்பன்  பள்ளிக் கல்வித்துறை இயக்குனராகவும் நியமனம்.

🔥
🛡பள்ளிகளில் 16412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை புதிதாக நியமிக்க இயலாது - பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்துசெய்யப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு.

🔥
🛡மாணவ, மாணவிகளின் ஸ்மார்ட் அட்டையை பஸ் ‘பாஸ்’ ஆக பயன்படுத்த அரசு திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன் - அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.

🔥
🛡RTE - கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை & முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் 2019-20ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும் -  சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு.

🔥
🛡10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டம்.

🔥
🛡EMIS - பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களும் EMIS-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதை 05.07.2019 தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.


🔥
🛡DSE - தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமைப்பட்டியல் தொடர்பான இயக்குநரின் செயல்முறை வெளியீடு.

🔥
🛡பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிப்படி, பாதுகாப்புக் குழு அமைக்காமல் கடமை தவறியதால் 2017 இல் மாணவி உயிரிழந்த வழக்கில் அப்போதைய விழுப்புரம் CEO, DEO, DEEO ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

🔥
🛡அரசு சட்டக் கல்லூரிகளில்  5 ஆண்டு சட்ட படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு : கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது.

🔥
🛡DIKSHA 'ஆப்'இல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை  mp4 ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் desktop அல்லது laptop களின் வழியே திரைவீழ்த்திகளில் காட்டும் புதிய வசதி மீண்டும் அறிமுகம்.

🔥
🛡TRB - கணினி ஆசிரியர் தேர்வு முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் கல்வி கட்டணத்தை குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உயர் கல்வித்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026