MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 16.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆனி 31 ♝ & 16•7•2019*

🔥
🛡ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் TNTP ( Tamilnadu Teachers Platform) இணையதளத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான சுற்றறிக்கை -  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡உபரி பட்டதாரி ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க  தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

🔥
🛡அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க முடிவு மேலும் இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம் -  நாளிதழ் செய்தி

🔥
🛡சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமனாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில்  நேற்று ஒரே நாளில்  கல்வி வளர்ச்சி நாள் விழாவில் 7.50 லட்ச ரூபாய்க்கு நன்கொடை அளித்து அசத்திய பெற்றோர்கள்

🔥
🛡தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

🔥
🛡அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி மகப்பேறு விடுமுறையின் போது தற்காலிக ஆசிரியை நியமனம். மாதந்தோறும் ₹10 ஆயிரம் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து கொள்ளலாம். அந்தந்த பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கங்கள் இதை முடிவு செய்யலாம். இதற்கான நிதியை தமிழக அரசு வழங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை 5  லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவைக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் உள்ளனர் என  அமைச்சர் செங்கோட்டையன்  கூறியுள்ளார்.

🔥
🛡Biometric முறையிலான வருகைப் பதிவு மேற்கொள்ளாத அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு

🔥
🛡மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் கோர்ட்டிற்கு மாஜிஸ்திரேட்டாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலை சேர்ந்த ஜெயந்தி பொறுப்பேற்றுக் கொண்டாா்.   அவர் தனது பிள்ளைகளை நகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார். 
பெண் நீதிபதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது -  நாளிதழ் செய்தி

🔥
🛡அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக சரளமாக ஆங்கிலத்தில் பேச, 2000 ஆங்கில வார்த்தைகள் தேர்வுசெய்யப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து  உள்ளார்

🔥
🛡தமிழக அரசின் சமீபத்திய செயல்பாடுகள் மத்திய அரசின்  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கி விட்டதா? என்ற அச்சத்தை கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மத்தியில் விதைத்துள்ளது.ஆசிரியர்கள் புதிய கல்விக்கொள்கையை படித்து தங்கள் கருத்துகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
nep.edu@nic.in


Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27