தற்கொலை முயற்சி உண்மையா? ஓவியாவுக்கு போலீஸ் 'சம்மன்!' 3 சென்னை: 'நடிகை ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக தங்கி இருந்த போது, தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்' என, போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். தனியார், 'டிவி'யில், 'பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக, சென்னை, நசரத்பேட்டை பகுதியில், வீடு போன்ற பிரமாண்ட, 'செட்' போடப்பட்டு உள்ளது. அதில், பாடலாசிரியர் சிநேகன், நடிகையர் ஓவியா, காயத்ரி ரகுராம், நடிகர்கள், வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், மாடலிங் வாலிபர் ஆரவ் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சில தினங்களுக்கு முன், ஓவியாவை மையமாக வைத்தே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. இவர், ஆரவ் மீது, தன் காதலை வெளிப்படுத்தினார். ஆனால், அவர், 'ஓவியாவின் மீது இருப்பது நட்பே; காதல் அல்ல' என, தெரிவித்து விட்டார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, ஓவியா, 'பிக் பாஸ்' வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக, தகவல் வெளியானது. பின், 'ஓவியா, 'பிக் பாஸ...