Posts

Showing posts from January, 2016

JACTTO போராட்டம் - முதல் நாள்

மாநிலம் முழுவதும் ஆசிரியர் போராட்டம்; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் கூட்டமைப்பினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்த இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . மத்திய அரசு ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வலியுறுத்தல், 6வது ஊதிய குழு பரிந்துரைத்த படிகள் வழங்க வேண்டும் , புதிய பென்சன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல், தாய்வழி தமிழ் பாடத்தை முதல் பாடமாக அறிவிக்க வேண்டும், ஒப்பந்த அடிப்படை மற்றும் தொகுப்பூதிய நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல், தமிழ் வழிக்கல்வி திட்டத்தை செயல்படுத்துதல் , மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஜேக்டோ சார்பில் இன்று முதல் 3 நாள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர் . இதனால் இன்று மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட

ஆதார் ரேசன் கார்டு சரிபார்த்தல்

ஆதார், ரேஷன் கார்டுகளின் எண்கள் மக்கள்தொகை பதிவேட்டில் இணைப்பு பணி: 10 மாவட்டங்களில் தொடங்கின அரசின் திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடையும் வகையில் மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டு, கைபேசி எண்களை இணைக்கும் பணி 10 மாவட்டங்களில் தொடங் கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சார்பில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) பொதுமக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த விவரங்களின் அடிப் படையில்தான் தமிழகத்தில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. என்பிஆர் பதிவேட்டு தகவல் தொகுப்புகளை மாநிலம் முழுவதும் சரி செய்யும் பணியை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கியது 10 மாவட்டங்களில் தொடக்கம் இது தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா கூறியதாவது: என்பிஆர் பதிவேட்டு தகவல் களை தற்போதுள்ளபடி சரி செய் யும் பணிகள், தற்போது திண்டுக்கல், திருப்பூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக் குடி, கன்னியாகுமரி ஆக

தட்கல் +2- 2016 மார்ச்

’தட்கல்’ மேல்நிலைப்  பொதுத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறப்பு மையங்கள்: தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.  தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்  துறை சேவை  மையத்திற்கு   02.02.2016 முதல் 04.02.2016 வரை ஆகிய தினங்களில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய தலைமை  இடங்களில்  மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். தனியார் Browsing Centre-கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வுத்

பாஸ்போர்ட் 1 வாரத்தில்

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நா

சகாயம் அரசியலுக்கு வருகிறாரா?

Image
சமூகப் பணியாற்றுவோம்: அரசியலுக்கு அழைத்த இளைஞர்களுக்கு வீடியோ மூலம் சகாயம் விளக்கம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தன்னை அரசியலுக்கு அழைப்பு விடுத்து இயங்கும் இளைஞர்கள் இயக்கங்களுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். வீடியோ வடிவில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும் 6 நிமிட வீடியோ, சகாயத்தை அரசியலுக்கு அழைத்த அமைப்பின்ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சகாயம் கூறியிருப்பது: "நானே உங்களோடு இத்தகைய பணிகள் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த சமூகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.. நன்றி! "கடந்த 2 மாதங்களாக சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனை ஒட்டி ஆதரவு திரட்டும் வகையில் பேரணி நடத்துகிறார்கள், கூட்டங்களை எல்லாம் ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஊடகங்கள் வாயிலாக அறிய வருகிறேன். இளைஞர்களுடைய இந்த வேட்கை, ஆதரவு திரட்டக்கூடிய இந்த முயற்சி அவர்கள் என் மீது அளப்பறிய நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள் என்ப

SET 2016

'செட்' தேர்வு அவகாசம் தேர்வர்கள் அதிருப்தி பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள, 'செட்' தேர்வுக்கு, குறுகிய கால அவகாசமே இருப்பதால், தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர். கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணி தகுதித்தேர்வான, 'செட்' தேர்வு, மாநில அரசு சார்பில் நடத்தப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார் உட்பட பல பல்கலைகள், மூன்றாண்டுகளுக்குஒரு முறை தேர்வு நடத்துகின்றன. மூன்றாண்டுகளுக்கு பின், அன்னை தெரசா பல்கலை சார்பில், பிப்., 21ல், தேர்வு நடக்கிறது. இது குறித்து, www.setexam2016.in என்ற இணையதளத்தில், விவரம்வெளியிடப்பட்டுள்ளது. ஜன., 20 முதல் பிப்., 10ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவையை சேர்ந்த, 'செட்' தேர்வர்கள் சிலர் கூறுகையில், 'யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வுக்கும், மாநில அரசின், 'செட்' தேர்வுக்கும், அறிவிப்புக்கு பின்னால், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும். தற்போது, தேர்வு விரைவில் நடத்த உள்ளதால், தேர்வர்கள் தயாராக சிரமமாக இருக்கும்; தேர்வு தேதியை மாற்ற வேண்டும்

பத்ம விருதுகள்2016

நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், வாழும்கலை ஆசிரமத்தின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மற்றும் ராமோஜி ராவ், மறைந்த திருபாய் அம்பானி ஆகியோருக்கும் பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷண் விருது சாய்னா நேவால், சானியா மிர்சா,  நடிகர் அனுபம் கெர், பின்னணி பாடகர் உதித் நாராயணன், முன்னாள் மத்திய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது நடிகர் அஜய் தேவ்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு.

சமையல் எரிவாயு சிலிண்டர்... இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

சமையல் எரிவாயு சிலிண்டர்... இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்! சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொகையை இனி ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பணமில்லா நடவடிக்கையை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கான முன்பதிவு முறை ஏற்கெனவே ஆன்லைன் வழியாக அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், விநியோகிப்பட்ட பிறகே பணம் செலுத்த முடியும் என்ற நிலையே இருந்தது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் திட்டத்தை நேற்று (24.01.16) தொடக்கி வைத்துள்ளார். நாடு முழுவதும் தற்போது 16.5 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தப் புதிய நடைமுறையின் மூலம் நுகர்வோர்கள் பயனடைவார்கள், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது

🍁💐🍁💐🍁💐🍁 எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது 🍁💐🍁💐🍁💐🍁 எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க வகை செய்யும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம்தேதி மக்களவையிலும், டிசம்பர் 21-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு டிசம்பர் 31-ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டதையடுத்து, நாளை முதல் (ஜனவரி 26) இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வருகிறது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினரின் தலையை மொட்டையடிப்பது, மீசையை மழிப்பது போன்ற இழிவுபடுத்தும் செயல்கள், மனிதச் சடலங்கள், விலங்குகளின் சடலங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கும், தூக்குவதற்கும் கட்டாயப்படுத்துவதற்கு எதிராக இந்த சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சாதி பெயரைச் சொல்லி திட்டுவது, கழிவுகளை அகற்றும் பணியில் கட்டாயமாக ஈடுபடுத்துவது போன்ற குற்றங்களுக்கும் தண்டனை கடுமையாக்க

தைப்பூச விரதமுறையும் பலனும்

Image
தைப்பூச விரதமுறையும் பலனும்   தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேரும் நாளில் தைப்பூச விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் முருகனை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். விரதமிருப்பவர்கள் காலையில் நீராடி முருகனை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பூஜையறையில் விளக்கேற்றி முருகனுக்கு செந்நிற மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பாலன் தேவராய சுவாமி எழுதிய கந்தசஷ்டி கவசம், அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி பாடல்களைப் படித்து தீபாராதனை செய்ய வேண்டும். காலை, இரவில் உணவைத் தவிர்க்க வேண்டும். மதியம் எளிய உணவு உண்ண வேண்டும். பட்டினி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் காலையிலும், இரவிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் முருகன் சன்னிதியில் விளக்கேற்றி பிரகாரத்தை வலம் வர வேண்டும். திருமணம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஏற்பட்ட தடங்கல் நீங்க இந்த விரதம் மேற்கொள்வர்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

Image
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு செயற்கைக்கோள் படம் | படம் உதவி: இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் கடல்பரப்பு வெப்பநிலையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. இது ‘எல்நினோ’ எனப்படுகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்ததற்கு இதுவும் ஒருவகையில் காரணமாக இருக்கலாம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்தாலும், எல்நினோ பாதிப்பு காரணமாக, ஏப்ரல் வரைகூட மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர். இந்நிலையில், வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது தவிர, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவுகள் இடையே வளிமண்டல ம

வெளிநாடு செல்ல அனுமதி அவசியம்:தொடக்கக்கல்வி

வெளிநாடு செல்ல அனுமதி அவசியம்:தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு 'அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, இயக்குனரின் அனுமதியை பெற வேண்டும்' என, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பும் முன், தகவல் படிவத்தை நிரப்பி, உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்படிவத்தை ஆய்வு செய்யும் அலுவலர்கள், அதில், ஆட்சேபனைக்குரிய ஆசிரியர்களின் விண்ணப்பம் இருப்பின், அதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என, மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கோரும் பட்சத்தில், அவை இயக்குனருக்கு அனுப்பி, அனுமதி பெற்ற பின்பே, விடுமுறைக்கு அனுமதிக்க வேண்டும். போலிச்சான்றிதழ் கொடுத்து பல ஆசிரியர்களும் தலைமறைவாகி வரும் சூழலில், வெளிநாடு செல்ல இயக்குனரின் அனுமதி அவசியம் வேண்டும் என, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்

💥💥 தமிழகம் முழுவதும்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் : ஜன 31, பிப்.7ல் நடக்கிறது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 31ம் தேதி மற்றும் பிப். 7ம்தேதி சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்பிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக 1.1.2016 தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியல் தமிழகம் முழுவதும் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக இந்த பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அ

விகடன் விமர்சனம் - தாரை தப்பட்டை

Image
தாரை தப்பட்டை விமர்சனம் ஒ ரு நல்ல சினிமா பார்வையாளனுக்குள் ஏதேனும் ஒரு உணர்வைக் கடத்தும். சோகம், சந்தோஷம், உற்சாகம், காதல்.. இப்படி ஏதோ ஒன்றை. முந்தைய பாலா படங்கள் அப்படியான சில உணர்வுகளை மிக அடர்த்தியாகவே கடத்தியிருக்கிறது. அதுவும் போக சில உண்மைகளையும் அவை முகத்தில் அறைந்திருக்கின்றன. அது சமயங்களில் வலிக்கவும் செய்யும். அந்த வலி, வலி கொடுத்தவர் மீது கோபமாக வெளிப்படலாம். ’தாரை தப்பட்டை’யில் அப்படியான வலி இருக்கிறதா? தஞ்சாவூரில், கலைமாமணி விருது பாரம்பரிய பெருமை கொண்ட ஜி.எம்.குமாரின் மகன் சசிக்குமார். தவிலிசைக் கலைஞரான தந்தையின் அந்தக் கால இசைஞானம் இந்த காலகட்டத்தில் கல்லா கட்டாது என்று வரலட்சுமியை நட்சத்திர ஆட்டக்காரியாகக் கொண்ட தாரை தப்பட்டைக் குழு ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார் சசி. வரலட்சுமிக்கு சசி மீது அத்த்த்த்த்த்த்தனை காதல். ஒருகட்டத்தில் ’என் மவ எத்தனை நாள்தான் ஆட்டக்காரியா இருப்பா’ என்று ஆதங்கப்படும் வருவின் அம்மா, தன் மகளை விடாப்பிடியாக பெண் கேட்டு வந்த ஆர்.கே.சுரேஷுக்கு அவளைக் கட்டிவைக்க சசியின் உதவியை நாடுகிறார். அரசு வேலையில் இருக்கும் சுரேஷைக் கட்டிக் கொண்டால், வரல