MENU

Show more

போலியோ சொட்டு மருந்து முகாம்!

பெற்றோர்களின் கவனத்துக்கு... ஜன.17ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!
நாடு முழுவதும் ஜனவரி 17ம் தேதி (இன்று) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் முதல் கட்டமாக இன்று (17ம் தேதி) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும்.  5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இம்முகாம்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

HOW TO ENTER MARKS IN TNEMIS 2026