1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு - இதில் பங்கேற்பது எப்படி. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேராய்வில் கலந்து கொண்டு 1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.15,000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த நேராய்வில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும். இந்நேராய்வில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண் அதிகாரம் எண், பெயர். குறள் எண் போன்றவற்றை தெரிவித்து, அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அற...