கண்ணீருடன் கணிணி ஆசிரியர்கள் - சிறப்புப் பார்வை
அம்மாவின் ஆட்சியில் அல்லல்படும் கணிப்பொறி ஆசிரியர்கள்... வாழ்வில் புத்துயிர் தருவார்களா ? முதல்வர் 'அம்மா' நடுத்தெருவில் தத்தளிக்கும் நாற்பதாயிரம் பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள-ஆதங்கம் இவள் பாரதி புதிய தலைமுறை. மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக் கணினி கொடுத்த அரசு கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன்? இதனால், கணினிவழிகல்வி போதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினி வழிக் கல்வி ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களும் உயர வேண்டும் என்று சமச்சீர் கல்வி முறையை 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு. அதில்,ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறு வருடங்களாக கணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை