அரியாசனமா; ஆட்சி கலைப்பா? பழனிசாமிக்கு பிரதமர் மோடி, 'செக்' டில்லியில் நடந்த பரபரப்பு பேரம் நன்றி: தினமலர் தமிழக அரசியலில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும் போது, முதல்வர் அரியாசனத்தில், பழனிசாமி தொடர்வாரா அல்லது ஆட்சி கலைப்பு ஆயுதத்தை, மத்திய அரசு கையில் எடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பங்களை, தங்களுக்கு சாதகமாக்கி, அந்த கட்சியுடன், எம்.ஜி.ஆர்., பார்முலா அடிப்படையில், கூட்டணி வைத்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது. பா.ஜ., மேலிடத்தின் இத்திட்டத்தை, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மூலமாக அறிந்த, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிர்ச்சியில் ஆடிப் போயுள்ளனர்.திராவிட கட்சிகளில், கடவுள் மறுப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு கொள்கையை கடைபிடிப்பதில், தி.மு.க., முதன்மை வகித்தது. அந்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, அ.தி.மு.க.,வில், கடவுள் மறுப்பு கொள்கை கைவிடப்பட்டது. பா.ஜ., ஆதரவு நிலை கர்நாடகாவில் உள்ள, தாய் ம...