MENU

Show more

புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

குமரி அருகே புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

 கன்னியாக்குமரி அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரிக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில், 210 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 12 மணிநேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 36 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளா மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த 36 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்திய வானிலை மையமும் அதனை உறுதி செய்துள்ளது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026