MENU

Show more

தொடரும் மழை..உஷார்..

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையி்ல பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது காரணமாக கடந்த 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை நினைவு படுத்தும் விதமாக பல தாழ்வான இடங்களை மழை நீர் தேங்கியுள்ளன. இதை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலடுக்கு சுழற்கு தற்போது நகர்ந்துள்ளதால் வடதமிழகத்தில் மழை அளவு குறைவும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனாலும் தென் தமிழகத்தில் மழை கடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அறிகுறியாக நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த கன மழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பள்ளிகள் விடுமுறை



தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகளை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026