MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 20.11.17

☀【T】【N】【P】【T】【F】☀

 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 கார்த்திகை 4~20.11.17🗓*


☀அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா? RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஈடுப்படுத்த கூடாது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

☀பாடத்திட்ட மாற்றம் - இன்று முதல் துவக்கம்!: TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது: மதிப்பெண் முறையால் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்  அறிவிப்பு

☀அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு எவ்வளவு கல்விக்(சிறப்பு/தேர்வு/இதர) கட்டணங்கள் செலுத்த வேண்டும்: வகுப்பு மற்றும் பாடம் வாரியான முழு விவரங்கள்: RTI மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

☀ SABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் - RTI பதில்கள்

☀நிகர்நிலை பல்கலைகழகங்கள் 'பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பண்படுத்தக்கூடாது என்ற UGCன் அறிவிப்பின்படி வெளியிடப்பட்டுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

☀ஈரோடு மாவட்டம்,சென்னிமலையில் 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப்பள்ளிக்கு எழுதி வைத்து விட்டு இறந்த விவசாயி - நாளிதழ் செய்தி

☀ஆசிரியர் ஊதிய முரண்பாடு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு!- நாளிதழ் செய்தி

☀டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பிற மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

☀தமிழகத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில், காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு அளிக்க, முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல், அனைத்து பள்ளிகளுக்கும், சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

☀தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்திற்கு 5 முட்டை இலவசமாக அரசால் வழங்கப்படுகிறது. தற்போது முட்டை விலை உயர்வால் சந்தை விற்பனைக்காக  சத்துணவு முட்டைகள் சில மாவட்டங்களில்  நிறுத்தப்பட்டுள்ளது.

☀தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு - அஞ்சல் வழி, பகுதிநேர/மாலைநேர  M.Phil., P.hd. மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம் -  தொடக்கக்கல்வி இயக்குநர்.

☀பள்ளிக் கல்வித்துறையில்  தலைமைஆசிரியர், உதவி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களின் பணிகள்   குறித்து விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது -  அரியலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் 27.6.2013 தேதிய RTI தகவல்.

*_©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026