MENU

Show more

பாரத் நெட் சேவை

மத்­திய அரசு, ‘பாரத் நெட்’ திட்­டத்­தில், 2019 மார்ச்­சுக்­குள், அனைத்து கிரா­மங்­க­ளி­லும், அதி­வேக அகண்ட அலை­வ­ரிசை சேவையை வழங்க திட்­ட­மிட்டு உள்­ளது.

இத்­திட்­டத்­தின், இரண்­டாம் கட்ட பணிக்­கான அறி­விப்பை, மத்­திய அரசு நேற்று வெளி­யிட்­டது. இதை­ய­டுத்து, 30 ஆயி­ரம் கிராம பஞ்­சா­யத்­து­களில், அகண்ட அலை­வ­ரிசை சேவை­களை வழங்க, ஆர்­ஜியோ நிறு­வ­னம், 13 கோடி ரூபாய் முன்­ப­ணம் அளித்­துள்­ளது. ஏர்­டெல் நிறு­வ­னம், 30,500 கிராம பஞ்­சா­யத்­து­க­ளுக்கு, அகண்ட அலை­வ­ரிசை சேவை வழங்க, முன்­ப­ண­மாக, 5 கோடி ரூபாய் வழங்கி உள்­ளது.

இது குறித்து, மத்­திய தொலை தொடர்பு துறை அமைச்­சர், ஜெயந்த் சின்கா கூறி­ய­தா­வது: பாரத் நெட் திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டப் பணி, 31 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீட்­டில் மேற்­கொள்­ளப்­பட உள்­ளது. அகண்ட அலை­வ­ரிசை சேவைக்­காக, 1.50 லட்­சம் கிராம பஞ்­சா­யத்­து­களில், கண்­ணாடி நாரிழை கேபிள்­கள் பதிக்­கப்­பட உள்ளன. ஏற்­க­னவே, 48 ஆயி­ரம் கிரா­மங்­களில், அகண்ட அலை­வ­ரிசை சேவை துவங்கி விட்­டது. மேலும், 75 ஆயி­ரம் கிரா­மங்­கள், சேவையை துவக்க தயா­ராக உள்ளன. இவ்­வாறு அவர் கூறி­னார். நன்றி - தினமலர்

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27