MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 19.4.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 சித்திரை 6 ♝ 19•04•2018*

🔥
🛡இந்தக் கல்வியாண்டின் இறுதி வேலைநாள் இன்று. நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம். தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளில் 210 வேலைநாட்கள் இருந்தால் போதுமானது.


🔥
🛡2018-19க்கான  பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இன்னும் ஓரிரு தினங்களில்  வெளியிடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

🔥
🛡நகர்ப்புறங்களில் 30 க்கு குறைவாகவும் , கிராமப்புறங்களில் 15க்கு குறைவாகவும் மாணவர் எண்ணிக்கை  உள்ள மேல் நிலைப்பள்ளிகளை உடனடியாக மூட பள்ளிக்கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் உத்தரவு.

🔥
🛡பள்ளிக்கல்வி -அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறைகள்

🔥
🛡இளையோர் - மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

🔥
🛡விடைத்தாள் திருத்தும் பணியின் போது, ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை கோரிய வழக்கில் ஆசிரியர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக "என் குழந்தை என் கவனிப்பு" திட்டம் - திருவண்ணாமலை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

🔥
🛡தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பல்வேறு மொபைல் கட்டண பேக்கேஜ் விவரங்களை ஒப்பிட்டு பார்க்க www.tariff.trai.gov.in என்ற  இணையதளத்தை
டிராய் ஏற்படுத்தியுள்ளது.


🔥
🛡மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை: தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

🔥
🛡குறைந்தபட்ச மாணவர்களின்றி நடக்கும் பாடப்பிரிவுகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

🔥
🛡‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.cbseneet.nic.in  இணையதளத்தில் வெளியீடு - மே 6-ம் தேதி நாடு முழுவதும் 150 நகரங்களில் தேர்வு நடக்கிறது.

செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026