MENU

Show more

கடல் சீற்றம் : எச்சரிக்கை

கடல் சீற்றம் : எச்சரிக்கை

தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதி களில், இரண்டு நாட்களுக்கு, 8.25 அடி முதல், 11.50 அடி உயரத்திற்கு, கடல் அலைகள் எழும்பும். எனவே, கடலுக்கு அருகில், யாரும் செல்ல வேண்டாம்' என, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் அளித்த பேட்டி:
தமிழகத்தில், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், குறிப்பாக, கன்னியா குமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில், கடல் சீற்றம் காணப்படும். இன்று காலை, 8:30 மணியில் இருந்து, நாளை இரவு, 11:30 மணி வரை, 18 முதல், 22 வினாடிகள் இடைவெளியில், 8.25 அடி முதல், 11.50 அடி உயரத் திற்கு, கடல் அலைகள் எழும். மிக கடுமையான அளவுக்கு, கடல் சீற்றத்துடன் காணப்படும் என, இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




எனவே, மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள், அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவுரை களை பின்பற்ற வேண்டும். கடல் சீற்றத் தின் காரணமாக, கடற்கரை பகுதிகளில், இதன் தாக்கம் பெரிதும் காணப்படும்.


எனவே, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், படகுகள் செல்ல வேண்டாம். படகுகள், ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைவதை தவிர்க்க, போதிய இடைவெளியில் நங்கூர மிட்டு நிறுத்தி வைக்கவும். கடற்கரை பகுதி களில், பொது மக்கள், பொழுது போக்கு விளையாட்டுகளிலும், வேடிக்கை பார்க்கும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.


கரையிலிருந்து கடலுக்குள் படகுகள் செல்ல வேண்டாம். கடலிலிருந்து கரைக்கு, படகுகள் வர வேண்டாம். அனைத்து கடலோர மாவட்ட கலெக்டர் களுக்கும், உரிய அறிவுரை வழங்கி உள்ளோம். மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 'ஓசானிக் பினாமினா' காரணமாக, கடல் அலைகள், மிக உயரத்திற்கு எழக்கூடும் என, தகவல் வெளியாகி உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி : தினமலர் - 21.4.18

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27