MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 22.4.18

*🔥  T  N  P  T  F  🔥*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 சித்திரை 9 ♝ 22•04•2018*

🔥
🛡ரத்து செய்யப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡தொடக்கக் கல்வி - அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரி பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய "Mobile App" - பள்ளி கல்வி  இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

🔥
🛡M.phil / Ph.D, பயில - தடையின்மைச் சான்று பெறுதல் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

🔥
🛡போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அரசு தேர்வுகள் துறை எச்சரித்து உள்ளது.

🔥
🛡குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடைபெற உள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

🔥
🛡தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படும் 25 சதவீத சேர்க்கையால்
அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக  ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.

🔥
🛡சிபிஎஸ்இயை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் சங்கம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28