MENU

Show more

TNPTF மாநில அளவிலான முற்றுகை போராட்டம் பிப்ரவரி 3, 2017

*🔹🔷TNPTF விழுதுகள்🔷🔹*

*பொதுச்செயலாளர் செய்தி*
```30.01.2017```


பேரன்புமிக்க தோழர்களே!

வணக்கம்.

புரட்சிகரான போராட்ட வாழ்த்துகள்!

பிப்ரவரி-03, நம் இயக்க வரலாற்றில் முக்கியதுவம் வாய்ந்த நாள். *முத்திரைப் போராட்டமாம் நம் முற்றுகைப் போராட்டத்திற்கு* இன்னும் மூன்று தினங்களே உள்ளன.

மாநிலம் முழுவதும் முற்றுகைப் போராட்ட களப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  மண்டல அளவிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை,  ஈரோடு ஆகிய இடங்களில் உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளன.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் முற்றுகைப் போராட்டம் என்று நாம் எடுத்த முடிவை விஞ்சிடும் வகையில் வட்டார, நகரக் கிளைகளின் களப்பணிகள் நம்பிக்கையூட்டி இருக்கின்றன.

*15 அம்சக் கோரிக்கைகளுக்கான இந்த முற்றுகைப்போர் அரசின், கல்வித் துறையின் கேளாச்செவிகளை நிச்சயம் சென்றடையும்.*

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து நடத்திய வீரஞ்செறிந்த போராட்டமே தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திட வல்லுநர் குழுவை அமைக்க வைத்தது என்பது வரலாறு.

TNPTF-ன் வீரஞ்செறிந்த முற்றுகைப் போராட்டம் 15 அம்சக் கோரிக்கைகளை நிச்சயம் வென்றெடுக்கும்.

*தைப்புரட்சி* என்று வர்ணிக்கப்படுகிற உலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழகத்தின் மாணவச் செல்வங்கள் சமரசமற்ற களப்போராளிகளாய் இறுதிவரை உறுதியுடன்  களத்தில் நின்றார்கள், வென்றார்கள்.

இதன் மூலம் ஆசிரியர்களாகிய நாம் மாணவச் செல்வங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

*பிப்ரவரி-03ல்,*

*கல்லூரிச் சாலை TNPTF சாலையாக மாறட்டும்!*

*DPI வளாகம் TNPTF  வளாகமாக மாறட்டும்!!*

கண்துஞ்சாது களப்புலிகளாய் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் மாநில, மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளின் இணையற்ற போராளிகளே! இருக்கின்ற 3 தினங்களையும் ஒரு நொடிப்பொழுது கூட வீணாக்காமல் முற்றுகைக்கான களப்பணிகளில்  மேலும் ஈடுபட தோழமையுடன் வேண்டுகிறேன்.

_அன்புடன்_
*செ.பாலசந்தர்*
_பொதுச்செயலாளர்_
_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி_

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28