MENU

Show more

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்து வரும் இரு நாட்களுக்கும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளது. அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.


மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் இதர பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அடுத்து வரும் இரு நாட்களுக்கும், அதே நிலை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு திசையில் இருந்து வட தமிழக கடலோரப் பகுதியில் 55 கிமீ வேகத்திலும், தென் தமிழக கடலோரத்தில் 60 கிமீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. மேலும் ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.



நன்றி : தி இந்து
நாள் : 11.7.18

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026