MENU

Show more

இன்று சந்திர கிரகணம்

#சந்திர_கிரகணம் !

🌘இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் விளம்பி வருடம் ஆடி மாதம் 11ம்நாள்  ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.

🌘 அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ரெட் மூன் என அழைக்கப்படுகிறது.

🌘 கிரகணம் ஏற்படும் நாளில் பௌர்ணமி வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

🏵💮சந்திர கிரகணம் 💮🏵

🌘 சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

🌘 சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.

🙂மிகப்பெரிய சந்திர கிரகணம் 🙂

🌘 இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

🌘 சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி

🌘 சந்திர கிரகணம் மத்திம காலம் இரவு 01.52 மணி

🌘 சந்திர கிரகணம் முடிவு காலம் இரவு 3.49 மணி

🌇கோவில் 🌇

🌘 சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27ஆம் தேதியன்று, திருப்பதி கோவில் 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

🌘 கிரகண நேரத்தில் அனைத்து கோவில்களின் நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த உடன், கோவிலை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் நடை திறக்கப்படும்.

🌘 இதேபோன்று வீட்டில் உள்ளவர்களும் கிரகண நேரத்தில் பொதுவாக எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். கிரகணம் முடிந்த பின் வீடு முழுக்க சுத்தம் செய்தபின் உணவை உட்கொள்வார்கள்.

🎱வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குள் சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும்.

🎱 பெளர்ணமி திதி ச்ரார்த்தம் மறு நாள் சனிக்கிழமை செய்யவேண்டும்.*.   

🎱 பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்ராடம், திருவோணம், ரோஹிணி, ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், வெள்ளிக்கிழமை பிறந்தவர்களும் மறு நாள் சனிக்கிழமை சாந்தி செய்துகொள்ளவும்.

🎱 கர்ப்பிணிஸ்திரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 முதல் இரவு 3.55 வரைசந்திரனை பார்க்க கூடாது

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026