MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 9.7.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆனி 25 ♝ 9•07•2018*

🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

🔥
🛡2018 செப்டம்பர் 26-ஆம் தேதி  இடைநிலை ஆசிரியர் ஊதியம் மீட்பு மற்றும் போராட்ட பிரகடன மாநாடு ( சிறை நிரப்பும் போராட்டம் ) TNPTF மாநில செயற்குழு தீர்மானம்

🔥
🛡100 உயர்நிலை பள்ளிகள், 100  மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதற்கான   அறிவிப்பு  இன்று வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡நீட் தேர்வை வருடத்திற்கு ஒரு முறை நடத்த மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பள்ளி நாட்களில் 1 மணி நேரமும், விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் நீட் பயிற்சி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

🔥
🛡ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு  NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது

🔥
🛡அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இணையான பணி நிலையில் உள்ளோர் தங்களை கண்காணிக்க அதிகாரம் கிடையாது; பழைய நிலையே தொடர வேண்டுமென, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

🔥
🛡அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது - நாளிதழ் செய்தி

🔥
🛡ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி எடுத்துள்ளது.முதற்கட்டமாக, குறைவான நபர்கள் எழுதும் தேர்வை மட்டும், சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔥
🛡சிறப்பு பயிற்சி அளிக்கும், 'டியூஷன் சென்டர்'கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி தரும் மையங்கள், பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது. இதற்கான சட்டம், விரைவில் அறிமுகமாகிறது. - நாளிதழ் செய்தி

🔥
🛡முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு - உ.பி அரசு அதிரடி.

🔥
🛡தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். காத்திருப்போர் பட்டியலில் மொத்தம் 1,469 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 7-ஆம் தேதியுடன் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவடைந்தது.


செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026