MENU

Show more

வேலைவாய்ப்பு2015

அரசினர் அறிவுரை மையத்தில் உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூர் அரசினர் தொடர் அறிவுரை மையத்தில் காலி யாக உள்ள பணிமனை உதவி யாளர் பணியிடத்துக்கு தகுதியுள் ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அரசினர் தொடர் அறிவுரை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் காலி யாக உள்ள பணிமனை உதவி யாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியிடத்துக்கு, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ. பொருத்துநர் தொழிற்பிரிவில் NTC/ NAC சான்றிதழ் பெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர், ‘உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், (அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), அம்பத்தூர், சென்னை-98’ என்ற முகவரிக்கு, வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28