MENU

Show more

JACTTO-GEO-வின் வேலைநிறுத்தப் போராட்டம் யாருக்காக?

👫👭👬🚶🏻‍♀🚶🏻❓❓❓❓

*JACTTO-GEO-வின் வேலைநிறுத்தப் போராட்டம் யாருக்காக?*

_✍🏽செல்வ.ரஞ்சித்குமார்_

*பொதுமக்களே!*
*பொதுநலன் விரும்பிகளே!*
*வழக்காடு மன்றத் தீர்ப்பாளர்களே!*

_தங்களின் சுயசிந்தையைச் சுண்டிவிடுவதற்காகவே இப்பதிவு._

JACTTO-GEO-வின் முதல் 3 கோரிக்கைகளை உங்கள் பார்வையின்படி 3 வரிகளில் சுருக்கிவிடலாம்.

1. ஊதிய முரணற்ற புதிய ஊதியக்குழு ஊதியம்.

2. 2003-ற்கு முன்னிருந்த படியான ஓய்வூதியம்.

3. காலமுறை ஊதியம்

சுருக்கிய 3-லும் இருப்பது ஊதியமே!

*அதாங்க காசு - பணம் - துட்டு - டப்பு - மணி.*

நீங்கள் நினைப்பது போல இது காசுக்கான போராட்டம் தான். *ஆனால் இது அரசு ஊழியர் & ஆசிரியர்களின் காசுக்காக மட்டுமேயான போராட்டம் அல்ல.*

உங்களின் பார்வையின் படியான 'ஊதியம்' என்ற பதத்தைத் தாண்டிய உள்ளார்ந்த விடயத்தைப் பற்றிச் சிந்திக்கப் பொறுமையுடன் நகர்த்துங்கள்.

ஒரு நாட்டின் சீரான இயக்கம் / வளர்ச்சி என்பது அரசு இயந்திரத்தின் இயக்கத்தைப் பொறுத்ததே. இதில் அலுவல் & கல்வி சார் பணிகள் அடங்கும். அரசு இயந்திரத்தின் இயக்கம் என்பது அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களைப் பொறுத்ததே. இதில் அரசு ஊழியரும் ஆசிரியரும் அடங்கிவிடுவர்.

ஒரு நாட்டின் சீராண இயக்கம் / வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமெனில் அரசு ஊழியர் & ஆசிரியர்களின் பணியைப் பழுதாக்கினாலே போதும் என்பது எங்க தாத்தா காலத்து உத்தி.

சரி இவர்களின் பணியை எப்படித் தடுப்பது? கையப்புடிச்சோ கட்டிப்போட்டோ அல்ல. அவர்களுக்குரிய நியாயமான உரிமைகளை குறிப்பாக பொருளாதார உரிமைகளை மறுத்தாலே போதும். அவர்கள் தானாகவே தடுமாற்றம் அடைந்து விடுவர் என்பதும் தாத்தா காலத்து உத்தியே!

*நீங்களோ நானோ 'நாளைக்கு நம்ம பிள்ளைய படிக்க வச்சு கவுர்மென்ட்ல வேலைக்குச் சேத்து விட்றனும்னு' நினைப்பது எதனால்? உழைக்கும் காலத்தில் கிடைக்கும் தடையற்ற உறுதியான நியாயமான ஊதியத்திற்காகவும் பணி ஓய்வு பெற்றபின் கிடைக்கும் ஓய்வூதியத்திற்காகவும் தானே!*

அதே காரணத்திற்காகத்தான், ஊதியத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள இழப்பிற்காகவும், 14 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்திற்காகவும் தான் இன்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடுகின்றனர்.

சரி இவையெல்லாம் இவர்களுக்குக் கிடைக்காமலே போய்விட்டால் என்னவாகும்? வீட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால், ஊழியரின் பணியில் சுனக்கம் ஏற்படுவதோடு ஊழலும் மலிந்து விடும். விளைவு அரசு இயந்திரம் ஊழல் எனும் ஆயுதத்தால் சுக்குநூறாக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சியே தடைபடும்.

*'இவிங்களுக்கு சம்பளத்த ஏத்தித் தர்ரதுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் என்னடா சம்பந்தம்' எனத் தோன்றலாம்.*

நாட்டின் வளர்ச்சி என்பது அதாவது உங்களின் வளர்ச்சி என்பது 70% மாத ஊதியம் பெறுவோரை மட்டுமே சார்ந்துள்ளது.

எப்படியெனில், *நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளை நீங்கள் நிர்ணயிக்கும் விலையில் வாங்கிக் கொள்பவன் மாத ஊதியம் பெறுபவனே!*

நீங்கள் வேறேந்தத் தொழில் புரிவோராக இருப்பினும் உங்களின் வேலைக்கான கூலி என்பதும் மாத ஊதியம் பெறுவோரிடமாகத்தான் இருக்கும்.

மாத ஊதியம் பெறுவோரில் *நாட்டின் ஒட்டுமொத்தப் பணப்புழக்கத்தில் 80% நேரடியாகவோ பிறர் வழியிலோ அரசு ஊதியம் பெறுவோரைச் சார்ந்தே இருக்கும்.* இவர்களில் தங்களின் அரசுப் பணி ஓய்விற்குப்பின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களும் அடங்குவர்.

"ஏன்டா மொத்த மக்கள் தொகைல நீங்க 10% கூட இல்லையேடா" என்று கூட நீங்கள் கேட்கலாம். ஆசிரியர் அரசு ஊழியரின் சதவீதம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால், அவர் பெறும் ஊதியத்தைச் செலவிடுவோர் என்று பார்த்தால் அவரின் தாத்தா முதல் பெயரன் வரை குறைந்தது 3 தலைமுறையினராவது அடங்குவர் அல்லவா.

எனவே தான் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, விலைவாசி உயர்வினைக் கருத்தில் கொண்டு ஊதியக்குழு அமைத்து புதிய ஊதியத்தினை அரசு தன் ஊழியருக்கு வழங்குகிறது.

ஒவ்வொருமுறை *ஊதியக்குழு பணப்பலன்களை அரசு ஊழியன் பெற்றபின்னர் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து ஒட்டுமொத்த மக்களின் பொருளாதார உயர்விற்கும் அது வழிவகுக்கும்.* வழிவகுத்தே வந்துள்ளது.

எனவே, ஊதியம் தொடர்பான அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ளூர இருப்பது எமக்கான நலன் மட்டும் அன்று. அரசு ஊழியர் / ஆசிரியர் அல்லாதோர் விற்கும் பொருளை வாங்குவதற்கும், தன் கீழ் / தனக்காகப் பணியாற்றும் அமைப்பு சாரா ஊழியர்களின் ஊதியத்திற்காகவுமே.

இப்போதும் JACTTO-GEO போராடுவது அந்த ஊதியக்குழுவின் ஊதியத்திற்காகவும் குறிப்பாக 10 ஆண்டுகளாகக் குறைத்துக் கொடுத்து வந்த ஊதியத்திற்காகவும், 14 ஆண்டுகளாகத் தராது பறித்துவிட்ட ஓய்வூதியத்திற்காகவும்! காலமுறை ஊதியத்திற்காகவுமே!

சரி, இதெல்லாம் குடுக்காம அரசு எந்திரத்த ரிப்பேர் ஆக்குறதால யாருக்கு என்னயா இலாபம்?

நாம கெட்டுப் போனும்னு நம்ம ஆட்களே செய்துட்டாகளோ?

இல்ல, படத்துலேலாம் சொல்லுவாகளே! இது வெளிநாட்டுச் சதினு. அப்டியா யிருக்குமோ?

வளர்ச்சிய தடுக்குற வெளிநாட்டுச் சதினா இப்பதேன் இங்க வெள்ளக்காரனுவலே இல்லயே! ஒருவேல கொள்ளக்காரனுவனால இருக்குமோ?

பயபுள்ளய பலவருசமா அதுகதான அழயுதுக. ஆனா. . . . அவியலுக்கும் இதுக்கும் என்னடா கனெக்சனு?

இப்படி பல கேள்விகள் ஒருவேளை உங்களுள் எழுந்தால். . .

*JACTTO-GEO போராட்டத்தை எடுத்தோம் கவுத்தோம் என எள்ளிநகையாடாது ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டக் களத்தில் எழுப்பும் குரல்களைத் (கோசங்களை) தொடர்ந்து கவனித்து வாருங்கள்.*

_அடுத்த பதிவினூடாய் அவற்றை எல்லாம் அடையாளப்படுத்திட முயற்சிக்கிறேன்._

_*இவண்,*_
*JACTTO-GEO போராளிகளுக்காக*
*_✍🏽செல்வ.ரஞ்சித்குமார்_*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026