MENU

Show more

வேலைநிறுத்தம் இன்று

*வேலைநிறுத்தத்தை கைவிட்டு பள்ளி செல்ல உள்ள ஆசிரிய நண்பர்களுக்கு...*

 * நாளை எந்த முகத்தோடு நீ எங்களிடம் பேசுவாய்? குற்ற உணர்வு உன்னை வதைக்காதா?

* நேற்றுவரை CPS ஒழிப்பு, ஊதியக்குழு, ஜாக்டோஜியோ என எங்களோடு பேசி விட்டு ஓரிரவில் எப்படி அனைத்தையும் மறந்தீர்?

* மூன்று கோரிக்கைகள் நிறைவேறாமல் பின்வாங்கக் கூடாது என்று பேசிவிட்டு
இன்று எந்த கோரிக்கை நிறைவேறி வேலைநிறுத்தத்தை கைவிட்டீர்?

* 30.9.17 இல் ஊதிய நிர்ணயம் செய்யாவிட்டால் என்ன செய்ய உத்தேசித்துள்ளீர்கள்?

* முதல்வர் வார்த்தைகளில் முழுநம்பிக்கை இருந்தால் அக்டோபர் 15 காலஅளவு எதற்கு?

* நவம்பர் மாதம் வரை இந்த அரசு இருக்குமா? குழுவின் அறிக்கை
CPS க்கு ஆதரவாக இருந்தால் என்ன செய்யப் போகிறாய்?

*  ஆசிரியர்கள் நமக்காக நாம் இயங்க வேண்டுமா? அரசாங்கத்திற்காகவா?

* தலைமையை கேள்வி கேட்கும் ஜனநாயகப் பண்பு உங்களிடம் உள்ளதா? அதை ஏற்று பரிசீலிக்கும் ஜனநாயகப் பண்பு உங்கள் தலைமையிடம் உள்ளதா?

* இறுதியாய் எதிர்காலத்தில் நமக்கு நடைபெறும் எல்லா அவலங்களிலும் (ஊதியக் குறைவால் தற்போது  அவதிப்படுவதிலும் ஓய்வூதிய  பறிப்பால் நாளை அனாதரவாய் தெருவில் திரிவதிலும்) உனக்கும் பங்குண்டு என்பதை உணர்ந்தாயா?

இத்தனையும் உணர்ந்து தான் நீ பள்ளி செல்கிறாய் என்றால் போய்வா......

உனக்கும் சேர்த்து இன்று
நான் வீதியில் வாடுகிறேன்...
உனக்கும் சேர்த்து சிறை செல்கிறேன்...
உனக்காகவும் இழப்புகளை சந்தித்து நமக்கான வெற்றியோடு திரும்புவேன்.

இன்று நீ பள்ளி செல்வது  EPS க்காக


இன்று நாங்கள் பள்ளி போகாமல் வீதியில் நிற்பது CPS க்காக

அதை புரிந்து கொள்ளும் எண்ணமாவது. உங்கள் மனதில் இருக்கட்டும்


இறுதியாய் ஒன்று...
நாளை பள்ளியில் மாணவர்கள் மற்ற ஆசிரியர்கள் ஏன்  வரவில்லை என்றோ நீங்கள் மட்டும் ஏன்  வந்திருக்கிறீர்கள் என்றோ கேட்டால் மனசாட்சி உறுத்தாமல்  சொல்வதற்கு ஏதாவது பொய்யை இப்போதே தயார் செய்துகொள்...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026