MENU

Show more

ஜாக்டோ ஜியோ செய்தி

ஜூனியர் விகடனில் சுப்பிரமணியன் : JACTTO-GEO ஒருங்கிணைப்பாளர்*

☀பழைய ஓய்வூதியத் திட்டத்தில் முழுக்க, முழுக்க அரசின் பங்களிப்பு மட்டும்தான் இருந்தது.

☀புதிய ஓய்வூதியத் திட்டத்தில் எங்களின் பங்களிப்பு 10 சதவிகிதம், அரசின் பங்களிப்பு பத்து சதவிகிதம்.

☀பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை மத்திய ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தவேண்டும்.

☀அரசின் பங்களிப்பில் ஒன்பதாயிரம் கோடி, ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட ஒன்பதாயிரம் கோடி என பதினெட்டாயிரம் கோடி ரூபாயைத் தமிழக அரசு இதுவரை மத்திய ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தவில்லை.

☀அதை அரசின் வேறு பணிகளுக்கு மடைமாற்றம் செய்துவிட்டனர்.

☀ஓய்வதியத் திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைச் செலுத்தினால்தான், ஒழுங்காற்று ஆணையத்தில் தமிழக அரசு உறுப்பினராகவே இருக்க முடியும்.

☀அன்றைய தேதியிலிருந்துதான் ஓய்வூதியக் கணக்கு வரும்.

☀எனவே, கடந்த 14 ஆண்டுகளாகப் பிடிக்கப்பட்ட தொகையை என்ன செய்யப்போகிறார்கள் என்றே தெரியவில்லை.

☀ஓய்வுபெற்ற 1,700 பேருக்கு பென்ஷன் கொடுக்கவில்லை.

☀ஓய்வுபெற்று இறந்து போன 3,750 பேருக்குப் பலன்களைத் தரவில்லை.

☀சிலர் வழக்குப் போட்டதால் 115 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

☀பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, நாங்கள் வாங்கிய சம்பளத்தில் 50 சதவிகிதம் பென்ஷனாகக் கிடைக்கும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அதுபோன்று கிடைக்காது.

☀பணிக்கொடை இல்லை.

☀பென்ஷன் தொகையில் இருந்து மூன்றில் ஒரு பகுதி அட்வான்ஸ் கிடைக்காது.

☀மனைவிக்கு ஓய்வூதியம் கிடையாது.

☀25 வயதுக்கு உட்பட்ட வாரிசுதாரருக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

எனவேதான், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்கிறோம்.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28