TSP NEWS 6.9.17
TSP NEWS
6.9.17
இன்றைய முக்கிய செய்திகள்
🌾🌸6 விதிமுறைகளை மீறுவோரிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும்: சென்னை பெருநகர காவல் துறை
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் எடுத்துச் செல்லும் புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், இந்த விதிமுறை குறித்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிச் செல்லுதல்,, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 விதிமுறைகளை மீறுவோரிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும்.
🌾🌸கன்றுக்குட்டி இறந்தால் பெண்ணை பிச்சையெடுக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து
போபால் : கன்றுக்குட்டி இறந்துவிட... கிராம பஞ்சாயத்தில் பெண்ணை பிச்சையெடுக்க உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது
கன்றுக்குட்டி எதிர்பாராத விதமாக இறந்ததை தொடர்ந்து, பெண் ஒருவரை ஒரு வாரம் பிச்சையெடுக்க கிராம பஞ்சாயத்தினர் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
🌾🌸அரியலூர் மாணவி அனிதா மரணம் தற்கொலையா அல்லது அரசியலுக்காக நடத்தப்பட்ட கொலையா என்ற சந்தேகம் இருப்பதால் அது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முதல்வரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.
🌾🌸நீட்டை எதிர்த்து 9 ஆம் தேதி கருப்பு கொடி..!!! - டிடிவி அதிரடி...
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 9 ஆம் தேதி அதிமுக அம்மா அணியினர் போராட்டம் நடைபெறும் என்று தினகரன் அறிவித்துள்ளார்.
🌾🌸பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மியான்மர் பயணம்
ஷியாமென்: பிரதமர் நரரேந்திர மோடி சீனாவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு மியான்மர் புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த செப்.3-ம் தேதி சீனாவின் ஸியாமென் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
🌾🌸காரைக்குடி பள்ளியில் ஆசிரியர் தினவிழா- ஆசியர்களுக்கு பூரண கும்ப மரியாதை
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்
இன்று(05.09.2017) ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள இராம.சு. ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி உள்ளூரில் ரொம்பப் பிரபலம். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் படிப்பதில் சாதனை புரிகின்றனர்.
ஆசிரியர் தினம் இன்று பள்ளியில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் தலைமையாசிரியர் அவர்களை, மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றார்கள்.
🌾🌸வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி தொடர்பான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி தொடர்பான விதிகள் பின்பற்றப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வாகனங்களில் இருந்து அகற்ற முடியாதபடி, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொறுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌾🌸நீலகிரியில் பெண் யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
நீலகிரி : உதகை அருகே சிங்காரா வனப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது. கடந்த 6 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த யானைக்கு நாளை பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறினார்.
🌾🌸சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்- காலவரையற்ற விடுமுறை
கடலூர் : கடலூர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மருத்துவக்கல்லூரி அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது மாணவர்கள் புகார்.
மாணவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு நோயாளிகளிடம் இருந்து பணம் பெறுவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கல்லூரி வாயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாணவர்கள் 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இன்று முதல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
🌾🌸எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது - சுப்பிரமணிய சுவாமி டிவிட்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
🌾🌸புதுக்கோட்டையில் 144 தடை விதித்தது என்? : புதுக்கோட்டை ஆட்சியருக்கு மதுரை கிளை கேள்வி
புதுக்கோட்டை : எம்.ஜி.ஆர் சிலைக்கு டி.டி.வி. ஆதரவாளர் மாலை அணிவிக்க அனுமதிக்காது ஏன் என புதுக்கோட்டை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஆக. 31, செப்.1-ம் தேதி புதுக்கோட்டையில் 144 தடை விதித்தது என் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
🌾🌸சென்னை எழும்பூர் - நாகப்பட்டினத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை : சென்னை எழும்பூரில் இருந்து நாகப்பட்டினத்திற்கு 8 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாங்கண்ணியில் இருந்து பன்வேலுக்கு (மகாராஷ்டிரா) செப்.9 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
🌾🌸பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் மகள் கல்விச்செலவை ஏற்பதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
🌾🌸பரபரப்பான குறுஞ்செய்திகளை பிறருக்கு அனுப்பினால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்: டிஜிபி ராஜேந்திரன்
🌾🌸வரும் 7-ம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க, தினகரன் நேரம் கேட்டுள்ளார்.
🌾🌸திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே ஆம்னி வேணும் தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். வருகூராம்பட்டி என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் சாந்தாமணி, ஹரிப்பிரியா, ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🌾🌸கரூர் அருகே புளூவேல் கேம் விளையாடிய மாணவனிடம் போலீசார் விசாரணை
கரூர் அருகே புளூவேல் கேம் விளையாடிய 9-ம் வகுப்பு பள்ளி மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலாயுதபாளையம் நடையனூரில் மாணவன் தனதுகையை பிளேடால் கிளித்து காயப்படுத்தி உள்ளார்.
🌾🌸அரசியலில் உழைப்பால் தற்போதைய இடத்துக்கு ஸ்டாலின் வந்துள்ளார்: திருமாவளவன் பேச்சு
அரசியலில் உழைப்பால் தற்போதைய இடத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார் என்று முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் முரசொலி என்பது ஏடல்ல, ஒரு இயக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
🌾🌸ஆசிய கால்பந்து தகுதிச்சுற்று : மக்காவ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.
வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி
🌾🌸ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர்அணி செயலாளர் பொறுப்பில் இருந்து சத்தியபாமா எம்.பி. விடுவிப்பு, சரஸ்வதி நியமனம் - தினகரன்.
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விடுவிப்பு, சண்முகவேலு நியமனம் - தினகரன்.
🌾🌸உரிமை மீறல் நோட்டீஸ் விவகாரம்: திமுக எம்.எல்.ஏக்கள் அவகாசம் கேட்பு
சென்னை: உரிமை குழுவிடம் பதில் அளிக்க திமுக எம்.எல்.ஏக்கள் அவகாசம் கேட்டு கடிதம் அளித்துள்ளனர். உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்ப அதிமுக ஆட்சிக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment