MENU

Show more

குரு பெயர்ச்சி பலன்கள் 2015

குரு பெயர்ச்சி பலன்கள் 2015

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய)

உங்களுக்கு இதுவரை 4ல் இருந்த குரு 5ம் இடத்தில் பிரவேசிக்கிறார். விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் நெருங்கி வந்திடுவர். இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சிலருக்கு மழலைச் செல்வம் உண்டாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. கௌரவம் குறைவது மாதிரியான சம்பவங்கள் இதுவரை நடந்திருந்தால், அவை விலகி ஒரு மறுமலர்ச்சி தோன்றும். வியாதிகள் இருந்தால் குணமடையும். குருவின் பார்வை படும் ராசியும், ராசிக்கு 9ம் இடம் மற்றும் லாபஸ்தானமும் நல்ல பலன்களை அதிகம் தரும். 20.12.15 முதல் 07.02.2016 வரை அதிசாரமாக கன்னி ராசியில் குரு பிரவேசிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் சில துயரமான சம்பவங்கள் நடக்கலாம், வழக்கு தொல்லைகள், கடன் தொல்லையில் மாட்டி அவஸ்தைப்படுதல் போன்றவை சிலருக்கு இருக்கலாம். கவனம் தேவை. ஜீவனம், உத்தியோகம் போன்றவற்றில் சிக்கல்கள் உண்டாகலாம். சிலருக்கு வேலையும் போகலாம். தொழில் செய்வோருக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வையால் சில கஷ்டங்கள் தீரும். வக்ரகதியில் சிம்மத்துக்கு ஜனவரி 9 முதல் பிரவேசிக்கும் காலகட்டம் ஓரளவு பெருமூச்சு விடுவதாயும், வக்ர நிவர்த்தி ஆகி ஆகஸ்டு 3 வரை நல்ல நிலை தோன்றி எடுத்த காரியங்களில் முன்னேற்றம், சிலருக்கு புதுவீடு புகும் யோகம், பொருளாதார முன்னேற்றம் ஆகியவை உண்டாகலாம். சனியின் வக்ர பிரவேச காலம், ராகு குருவுடன் சேர்ந்திருக்கும் காலம் ஆகியவை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடும் காலமாய் அமையும்.

ரிஷபம்


(கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய)

இதுவரை 3ல் இருந்து அப்படி ஒன்றும் பலன் தரவில்லை என்ற நிலையில் இருக்கும் குரு 4க்குப் பெயர்கிறார். இதுவாவது நன்றாக இருக்கிறதா என்றால் சுமார் தான். ஆனால் குரு பார்வை படும் 10ம் இடம் ஓரளவு நல்ல சூழலைக் கொண்டுவரும். கண்டச் சனி பார்வை 4ம் இடத்து குருவுக்கு இருப்பதால் குடும்பத்தில் ஒரு குதூகலம் உண்டாகும். அதே நேரம் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும். சிலருக்கு கடன் தொல்லையால் அவஸ்தையும் உண்டாகும். கவனம் தேவை.

நல்ல காலம் வராதா என்று ஏங்கும்போது 20.12.15 முதல் 07.02.2016 வரை அதிசாரமாக கன்யாவில் குரு பிரவேசிக்கிறார். ‘வந்தாச்சுப்பா நல்ல காலம்’ என்று அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிக மகிழ்ச்சி உண்டாகும் காலம் இது. வீடு கட்டும், வாங்கும் யோசனை இருந்தால் அது நிறைவேறும். குருவுக்கு 3ல் இருக்கும் சனி ஓரளவு ஒத்துழைப்பும் தரும். கேதுவின் பார்வையும் பலனைத் தரும். திரும்ப வக்ரமாய் சிம்மத்துக்குப் பெயர்ந்து வக்ரகதி காலம் முடிய பரவாயில்லை எனப் பெருமூச்சு விடலாம். அடுத்த ஆகஸ்டுக்குப் பிறகே மறுபடியும் நல்ல நிலை தோன்றும்.

கிரஹங்கள் நன்மை தரும் நிலையில் இருப்பதாலும் இன்னும் கொஞ்சம் நன்மை உண்டாக வாய்ப்பு உள்ளது.

மிதுனம்


(மிருகசீரிடம் 3,4, திரு வாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)

இதுவரை 2ல் இருந்து பொருளாதார முன்னேற்றம், உத்தியோகம், தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் ஒற்றுமை என்று கொடுத்துக் கொண்டிருந்த குரு 3ம் இடத்தில் இனி பிரவேசிக்கிறார். இது கொஞ்சம் பலம் குறைவுதான்; ஆனால் பார்வை 7, 9, 11ம் இடத்துக்கு இருப்பதால் வருகின்ற கஷ்டங்களைச் சமாளித்து விடுவீர்கள். அரசாங்க உதவி அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்போருக்குக் கொஞ்சம் துன்பம் ஏற்படும். வக்ர சனியும் துலாத்துக்குச் சென்று கொஞ்சம் சிரமத்தைத் தருகிறார். இருந்தாலும் மனோதிடம் அதிகம். அதனால் உங்களுக்கு வரும் துயரங்கள் தூசாய்ப் பறந்துவிடும்.

குரு அதிசாரமாய் கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகும் நேரம் குடும்பத்தில் குதூகலம், பொருளாதார முன்னேற்றம், உடன் இருக்கும் ராகுவால் நன்மை என ரொம்பவே நல்லதாய் நடக்கும். வியாதிகள் இருந்தால் உடன் சரியாகும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் தேவைகளை விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.

குரு மீண்டும் வக்ரமாய் சிம்மத்துக்குத் திரும்பி வக்ர நிவர்த்தி ஆகும் வரை ஓரளவு நல்ல பலன் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். ஜனவரியில் வரும் ராகு பெயர்ச்சி மிகுந்த நற்பலனை அள்ளித்தரும். குருவுடன் சேர்ந்து சுப நிகழ்வுகளை உண்டாக்கி ஒரு மகிழ்ச்சியைத் தரும். நோய்கள் அகலும். சிலருக்கு புத்திரபாக்கியம், தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)

ஜென்ம குரு வனவாசம் என்பார்கள். அதுபோல இதுவரை கஷ்டங்களையும், அசுப பலனாகவும் தந்து கொண்டிருந்த குரு உங்கள் வாக்கு ஸ்தானத்துக்கு மாறி உற்சாகப்படுத்துகிறார்.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட துறைகளில் பூரண வெற்றியைக் காணலாம். திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் அனைவரும் நோய் நொடியின்றி இருப்பர். மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்தி நல்ல பெயரைப் பெறுவார்கள். அரசாங்கத்தின் தயவை, காரியங்களை எதிர்பார்த்து இருப்பவர்களுக்குச் சாதகமாய் அமையும்.

குருவின் அதிசார வக்ரமாய் கன்னி ராசிக்குப் போகும் 20.12.15 முதல் 09.02.16 வரையிலான கால கட்டங்களில் சில சங்கடங்கள் வரலாம். இந்த நேரத்தில் ராகுவின் பெயர்ச்சி வேறு தொந்தரவு தரும். ஆனால் கேது நன்மை தருவதாய் அமைவதால் ஓரளவுக்கு நிம்மதி கிட்டும். சனி மறுபடியும் விருச்சிகத்துக்கு மாறி பெருமூச்சு விடும்படி செய்கிறார். இந்தக் காலகட்டம் கலந்துகட்டி நன்மையும் தீமையும் வருகிறது. இருந்தாலும் மனோதிடம் சமாளித்துவிட செய்யும். மீண்டும் வக்கிரமாய் இரண்டாம் இடத்துக்குப் போகும் குரு கடைசிவரை நன்மை தருகிறார். இதில் அரசியல்வாதிகளும் பெண்களும் கொஞ்சம் சிரமத்தை அனுபவிப்பர்.

சிம்மம்


(மகம், பூரம் , உத்திரம் 1ம் பாதம் முடிய)

இதுவரை விரயத்தில் இருந்து பார்வையால் மட்டும் நன்மை செய்த குரு இனி ஜென்மத்துக்கு வருகிறார். இதுவும் அப்படி ஒன்றும் முன்னேற்றத்தைத் தராது; எனினும் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சனியின் வக்ர சாரம் செப்டெம்பர் 15 வரை மிகுந்த நல்ல பலன்களை உண்டாக்கும். குருவின் பார்வை ராசிக்கு 5, 7, 9 பாவங்களில் படுவதால் வழக்கிலிருந்து விடுதலை, செயல்களில் வெற்றி உண்டாகும். கௌரவ பாதிப்பு இருந்தாலும், எதிர்பாராத நன்மை உண்டாகும். நண்பர்கள், வெளி மனிதர்களிடம் கவனம் தேவை. வார்த்தைகளை விடும்போதும் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் இருக்கும் ராகுவால் தொல்லை ஏற்படலாம்.

எப்போது இந்தக் கஷ்டத்திலிருந்து விடுதலை என்றால், குரு அதிசாரமாய் கன்னி ராசிக்குச் செல்லும் 20.12.15 முதல் 07.02.16 கால கட்டத்தில் வெற்றிமேல் வெற்றியாக வரும். எல்லா விஷயங்களிலும், குறிப்பாகப் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். இன்னும் நிறைய சந்தோஷங்கள் உண்டாகும்.

மீண்டும் வக்ரமாய் ராசியில் பிரவேசிக்கும்போது ஓரளவு நன்மை தரும். சனியின் மாறுதல் மற்றும் ராகு, கேது பெயர்ச்சி ஆகியவை மறுபடியும் கஷ்டத்தைக் கொடுக்கும். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் ஓரளவு நன்மை நடக்கும்.


Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026