MENU

Show more

TNPTF கல்வி செய்திகள்

☀【T】【N】【P】【T】【F】☀

 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗


*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 18~4.10.17🗓*

☀திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளும் முதல் பருவ திருத்திய விடைத்தாளை அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு


அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது. ...


☀அடுத்த மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

☀அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சித் திட்டத்துக்கு ‘தொடுவானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி திட்டம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.  .

☀அடுத்த அறிவிப்பு வரும் வரை வட்டார வள மைய அளவிலான கற்றல் குறைபாடுகள் களைதல் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

☀வேலைநிறுத்த உரிமைக்கு தடையாக இருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்!!

☀TET 2017 CM CELL : 2017 TET- இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு G.o.71_ ன் படி பழைய வெயிட்டேஜ் லேயே பணியை நிரப்ப முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது

☀அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குப் பயன்படுத்தப்படும் தகுதிகாண் மதிப்பெண் முறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்  கூறியுள்ளார்

☀கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை 3 முதல் 10 வகுப்பு வரை கொண்டு வருவதாக அரசின் கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளதற்கு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


☀தமிழக அரசு மருத்துவ துறையில் 744 பணியிடங்கள்- விண்ணப்பிக்க அக்.10 கடைசி மருத்துவ துறையில் காலியாக உள்ள 744 அசிஸ்டென்ட் சர்ஜியன் பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28