MENU

Show more

உஷார்.. பிஷ்ஷிங்...

ஆன் – லைன் பண பரி­வர்த்­த­னையை பாது­காக்கும் வழி­மு­றைகள்

‘டிஜிட்டல்’ பண பரி­வர்த்­த­னையை நாடு­ப­வர்கள், அதை பாது­காப்­பாக மேற்­கொள்­வ­தற்­கான அடிப்­ப­டை­ அம்­சங்­களை அறிந்­தி­ருப்­பது அவ­சி­ய­மா­கி­றது.

ரொக்க பயன்­பாட்டை குறைப்­ப­தற்­கான அரசின் முயற்­சிகள் கார­ண­மாக, ஆன் – லைன் மூலம் பணம் செலுத்தும், டிஜிட்டல் பண பரி­வர்த்­தனை முறைக்கு பலரும் மாறி வரு­கின்­றனர். டிஜிட்டல் பண பரி­வர்த்­தனை, பல்­வேறு சாத­க­மான அம்­சங்­களை கொண்­டி­ருந்­தாலும், சைபர் தாக்­கு­த­லுக்­கான வாய்ப்பு இருப்­பது குறித்து, பய­னா­ளிகள் விழிப்­பு­ணர்வு கொள்­வது அவ­சி­ய­மா­கி­றது.

தேடலில் கவனம்:
டிஜிட்டல் பண பரி­வர்த்­தனை அதி­க­ரித்­திப்­ப­தற்கு ஏற்ப, சைபர் கிரி­மி­னல்­களின் கைவ­ரி­சையும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக, சைபர் பாது­காப்பு வல்­லு­னர்கள் எச்­ச­ரிக்­கின்­றனர். மால்வேர் வகை வைரஸ்கள் மூலம் ஆன் – லைனில் பணத்தை திரு­டு­வது அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கவும் எச்­ச­ரிக்­கின்­றனர். பய­னுள்ள செய­லிகள் போர்­வையில், கவரும் மோசடி செய­லிகள் பின்னே மறைந்­தி­ருக்கும் மால்வேர், பய­னா­ளிகள் அறி­யா­ம­லேயே அவர்கள் பணத்தை கள­வா­டு­வதும் நிகழ்­கி­றது. எனவே, டிஜிட்டல் பண பரி­வர்த்­த­னையை பாது­காப்­பாக மேற்­கொள்ள பய­னா­ளிகள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது.

இணை­யத்தில் பொருட்கள் தொடர்­பான தக­வல்­களை தேடும் போது அல்­லது விலை ஒப்­பீடு வச­தியை பயன்­படுத்தும் போது, எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். கவ­னக்­கு­றை­வாக மால்வேர் பக்­கங்­க­ளுக்கு அழைத்துச் செல்­லக்­கூ­டிய மோசடி இணைப்­பு­களில் ‘கிளிக்’ செய்­வதை தவிர்க்க வேண்டும். சைபர் கிரி­மி­னல்கள், இத்­த­கைய இணைப்­பு­களை உரு­வாக்கி, வலை விரித்து காத்­தி­ருக்­கின்­றனர் என்­பதை அறிய வேண்டும். இணைப்­பு­களை கிளிக் செய்­வ­தற்கு முன், அவை நம்­ப­க­மா­னதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். வைரஸ் தடுப்பு மென்­பொருள் சேவை­க­ளையும் பயன்­ப­டுத்­தலாம். அதே போல, இ – காமர்ஸ் தளங்­க­ளுக்­கான இணைப்­பு­களை கிளிக் செய்­யாமல், அவற்றின் இணைய முக­வ­ரியை பிர­வு­சரில் நேர­டி­யாக, ‘டைப்’ செய்து அணு­கலாம்.

தனி கம்ப்­யூட்டர்:
ஒரே கம்ப்­யூட்­டரை எல்­லா­வி­த­மான பயன்­பாட்­டிற்கும் அணு­கு­வதை தவிர்க்­கலாம். வாய்ப்­பி­ருந்தால் நிதி பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கு என, தனி கம்ப்­யூட்­டரை பயன்­ப­டுத்­தலாம். கூகுள் குரோமை நிறுவி, எச்.டி.டி.பி.எஸ்., பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தலாம். தகுந்த வைரஸ் தடுப்பு மென்­பொருள் அவ­சியம். இதே போல் டிஜிட்டல் பரி­வர்த்­த­னைக்கு என, தனி இ–மெயில் முக­வ­ரி­யையும் உரு­வாக்கி பயன்­ப­டுத்­து­வது நல்­லது. பாது­காப்­பிற்­காக தற்­கா­லிக கிரெடிட் கார்டு பயன்­ப­டுத்­தலாம்.

பல நிறு­வ­னங்கள் இத்­த­கைய தற்­கா­லிக கிரெடிட்கார்­டு­களை வினி­யோகம் செய்­கின்­றன. இவற்றை இணை­யத்தில் ஒரு­முறை பொருட்கள் வாங்க பயன்­ப­டுத்­தலாம். இந்த கார்டு தொடர்­பான தக­வல்கள் கள­வா­டப்­பட்­டாலும் அபாயம் இல்லை. எனினும் இவற்றை குறிப்­பிட்ட சூழலில் தான் பயன்­ப­டுத்த முடியும். மற்ற நேரங்­களில் கிரெட்டி கார்டு வரம்பை குறைத்து பயன்­ப­டுத்­தலாம்.

பாஸ்­வேர்டு பாது­காப்பு:
பல்­வேறு கணக்­குகள் வைத்­தி­ருப்­ப­வர்கள், அவற்றை முறை­யாக நிர்­வ­கிக்க, பாஸ்­வேர்டு மேனேஜர் சேவையை பயன்­ப­டுத்­தலாம். பாஸ்­வேர்டு பயன்­பாடு தொடர்­பான வழக்­க­மான தவ­று­களை தவிர்க்க இந்த சேவை உதவும். உதா­ர­ண­மாக எல்லா சேவை­க­ளுக்கும் ஒரே பாஸ்­வேர்டை பயன்­ப­டுத்த வேண்டாம். மேலும், பொது இடங்­களில் உள்ள கம்ப்­யூட்­டர்கள் மற்றும் பொது வை – பை வச­தி­களில் இருந்து நிதி பரி­வர்த்­த­னை­களை இயக்க வேண்டாம். இவற்றில் எல்லாம் கைவ­ரிசை காட்ட, ‘ஹேக்­கர்கள்’ எப்­போதும் காத்­தி­ருக்­கின்­றனர்.

எந்த இணைய தளத்திலும் அல்­லது பரி­வர்த்­தனை தளங்­களிலும், உங்கள் வங்கி கணக்கு எண் போன்ற தனிப்­பட்ட விப­ரங்­களை சேமிக்க வேண்டாம். விப­ரங்­களை ஒவ்­வொரு முறையும் தனியே, ‘டைப்’ செய்­யவும். தெரி­யாத செய­லி­களை பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. அதி­கா­ர­பூர்­வ­மான செய­லி­களை மட்­டுமே நாட வேண்டும். அதி­கா­ர­பூர்வ இணை­ய­த­ளங்­களில் இருந்து செய­லி­களை தர­வி­றக்கம் செய்ய வேண்டும்.

பாது­காப்பே முக்­கியம்:
* டிஜிட்டல் பரி­வர்த்­த­னையில் கவனம் தேவை
* தனிப்­பட்ட விப­ரங்­களை வெளி­யி­டக்­கூ­டாது
* பொது வை – பையில் பரி­வர்த்­தனை செய்­யக்­கூ­டாது
* நிதி பரி­வர்த்­த­னை­க­ளுக்கு என, தனி இ – மெயில் பயன்­ப­டுத்­தலாம்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026